Friday 26 February 2016

மாட்டி விட்டாள் பாட்டி

குடி பிடி கேட்கும்
பிடித்து விட்டால்
நிலைத்து நிற்கும்.

நிலைத்து விட்டால்
குடியையே கெடுக்கும்
கள்ளச் சாராயம்
கடத்தலில் என்ன
ஒருவிந்தை.......\

பத்தறை வீட்டில்
அவள் பாதம்
பட்டதில்லை
பத்தறை பாக்கட்டில்
பத்திரமாய் கொண்டு
வந்தாள் பாட்டிலை.....\

பசிக்கும் வயிறுக்கு
பத்து ரூபாய் வேண்டும்
என்று  குடலை  எரிக்கும்
தண்ணீரை சுமந்து
வந்தாள்........\

ஏழை எளியவள்
என்று வழி விடும்
காவல் நிலையம்
என தப்புக் கணக்குப்
போட்டு  வந்தாள்.......\

துணிந்து வந்தாள்
நெடு நாளாக கண்ணில்
மண்ணைத் தூவி உலாவி
வந்தாள் காலம் போட்ட
கணக்கு கையை வைத்தது
அடி மடியில் பிடி பட்டாள்
பாட்டி பாட்டிலோடு.........\

மாணம் காக்கும்
துணியைக் கழட்டி
விட்டாள் கடமையில்  அமர்ந்த
அதிகாரி  பூட்டிய பாட்டில்
விற்ற  பாட்டி கண்ணீர்
சிந்துகின்றார் காட்டி
காட்டி....\

உடல் மறைக்க
உடை போட்ட காலம்
மாறி   ஊத்துவதும்
புகைப்பதும்  எரிப்பதும்
சிதைப்பதும்  என உயிர்க்
கொல்லி பொருளையே
மறைக்க உடைபோடும்
காலமாய் மாறி விட்டதைப் பாரும்.

No comments:

Post a Comment