Wednesday 24 February 2016

எரியும் மனசு

தடாகம் கலை இலக்கிய வட்டம்

உலகம் தழுவிய மாபெரும் கவிதை
போட்டி பெப்ரவரி மாதம் 2016
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

உள் ஒன்று புறம் ஒன்று பேசி உறவாடி வரும்
மனிதர்களைப் பார்க்கையில் தீயாக எரிகிறது
என் மனம்.,....//

கொடுத்த கையை எடுப்பதற்குள் வெடுக்கெனக்
கடிக்கும் நாய்க் குணம் கொண்ட மானிடர்களைப்
பார்க்கையில் தீயாக எரிகிறது என் மனம் ..

பாசம் இல்லாத பாதகமான போலி பூசாரிகளினால்
பெண் சிசுக் கொலைகளை  அறிந்து தீயாக
எரிகிறது என் மனம் ......./////

பெண்மைக்கும் பெண்ணுக்கும் பக்கபலமாக
இருக்க வேண்டிய ஆண்களே பெண்களின்
உடலைச் சிதைத்து உயிரைப்பறித்த செய்திகளைப்
படிக்கையிலே தீப்பிளம்பாக எரிகிறது
என் மனம் .......////

ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை
உண்டு என்று கூறும் உலகிலே சாதாரணமான
முகநூலிலும் பெண்களுக்கு பல உரிமைகள்
பறிக்கப்படுவது கண்டு கோபத்தில் பொங்கி
எரிகிறது என் மனம் ....////

பிறப்பால் மாற்றம்  இல்லை குருதியில்
மாற்றம்  இல்லை வாழும் போது இன மத
மாற்றம் கொண்டு வாழ்கையிலே பல
ஏமாற்றங்களைக் கண்டு பெரிகிவரும்
கண்ணீரை அடக்க முடியாமல் தீயாக
எரிகிறது என் மனம் ...../////

பணத்துக்காக இலட்சியத்தைக் காற்றில்
விட்டு பல்லை இலிச்சி நிற்கும் பரதேசிகளையும்
பணத்தைக் காட்டி பலரை அடிமையாக்கும்
பாவாளிகளையும் நேருக்கு நேர் சந்திக்கையிலே
எரித்து விட துடிப்போடு எரிகிறது
என் மனம் ..........///

தன் நடத்தையில் தவறு விட்டு  பிச்சைப்
பாத்திரம்  ஏந்திப் பிழைக்கவும் மழலை
தொழிலாளி  பெருக்கடுக்கவும் காரணமாக
குப்பையிலே குழந்தையை வீசி விட்டு
உள்ளாச வாழ்கை காணும்  தாய்மையையும்
அதன் புணிதத்தையும் கெடுத்த பெண்கள்
பெயரைக் கேட்டதுமே எரி மலையாக எரிகிறது
என் மனம் ......////

ஏராளம் தாராளம் எரித்துக் குவித்து
திருத்தி அமைக்க இயலாமையால்
கண்ணீர் சிந்தி சோகம் நிறைந்து
வலியோடு எரிகிறது ......///
ஆழ் மனம்

No comments:

Post a Comment