Saturday 13 February 2016

என் உயிர் தோழியாய்


உன் குறுஞ்செய்தி
எனக்கு ஒரு சீண்டலாக.
தோன்றியது
உன் தொடர் உரையாடல்
என் பணிக்கு இடையூறாக.
இருப்பது போல் எரிச்சல் மூட்டியது

என்னைப்பற்றிய கற்பனையோடு
நீ எழுதும் நெடுங் கவிதை
எல்லாம் பெரும் தொல்லை
போல்  எண்ணம்  தோன்றியது

நான் ஆண் என்ற ஆணவம்
தலைக்கேறியது  சாதி மதம்
பிரிக்கும் குணம் தலை விரித்தாடியது
பணம் படிப்பு என்ற கர்வம் என்
நெஞ்சில் நிலைத்து நின்றது

தாய்க்கு ஒரு மகன் என்ற
காரணத்தால் கலியாணக் கற்பனை
இறகு அடித்துப் பறந்தது 

நீ வாழ்வு இளந்தவளாச்சே
என்ற ஏளனம் எனக்குள்ளே படர்ந்தது
உன் உணர்வான வார்த்தைகளையும்
உணர்சியான கெஞ்சல்களையும்
என் ஆண் மனம் திரை போட்டு தடுத்தது

நீ தொடர்ந்து செய்தி அனுப்பினாய்
விடாது அன்பு வளர்த்தாய்
உன் மூச்சு நிறுத்தி பேச்சு மறந்து
உன் உயிர் பூதவுடல் விட்டு
பிரிந்து பூலோகம் மறந்து
விண் உலகை அடையும் வரை
நிறுத்தாமல் என்னை அழைத்தாயே
வெறுக்காமலே உன் உயிர்
திறந்தாயே (தேவி )

இப்போது என் இரு விழி
கலங்குகின்றது வெறுப்பு
விருப்பாக மாறியது சாதி மதம்
இவைகளைத் தாண்டி உன்னை
மறுமணம் செய்ய சாதனைபோல்
என் மனம் தேடுகிறது

உன் விரல்களை தீண்ட
எண்ணம் எழுகிறது உன் செய்தியை
எதிர் பார்க்கிறேன் உன் நிழல் படம்
சேகரிக்கின்றேன் அதில் கள்ளம்
இல்லா உன் புன்னகை கண்டு
என் கல்லான நெஞ்சம்
புண்ணாகிவலிக்கிறது  இன்று.

காலம் கடந்து வந்த காதல்
கனவையும் தடுத்து கண்ணீரை
வரமாகக் கொடுக்கிறது
உன் உடலையும் நெருப்பு
சொந்தமாக்கிய பின்
உன் மேல் வந்தது விருப்பு 
தவிக்கின்றேன் உன்னை
நெருங்கையடி என் உயிர்த்
தோழியாய் வந்த காதலியே.

    

No comments:

Post a Comment