விருந்தினர் வருகையின் போது 
முகம் மலர்ந்து புன்முறுவலுடன் 
வரவேற்று அமர்ந்து அவர்களுடன் 
கலந்துரையாடி உபசரித்து அன்போடு 
வழி அனுப்பி வைக்கவேண்டும்.....//// 
அப்போது மீண்டும் வாருங்கள் 
என்ற வார்த்தையை மறவாது 
கூறி  வீட்டின் பாதி வழி வந்து 
வழி அனுப்பி வைப்பதுதான் 
தமிழர் பண்பாடு. ....///
உறவின் அன்பின் வெளிப்பாடு.
 நல்ல குணத்தின் செயல்பாடு. 
பண்பான மனிதர்கள் என்ற 
அடையாளத்தின் பொருட்பாடு.....// 
ஆனால் அந்த நடை முறைகளை 
இப்போது கண்டு பிடிக்கவே 
படவேண்டும் பெரும் பாடு. ..///
வருவோர் போவோர் யார் யார் 
என்று தெரியாத வாறு குடும்ப 
அங்கத்தவர்களின் நடை முறை 
வாழ்கை என்று ஆகிப்போச்சு .....///
ஆளுக்கு ஓர் அறை ஆளுக்கு ஓர் 
தொலைக் காட்சி  பூட்டிய அறையின் 
வழியே வெளியாவது நெடுந்தொடர் 
ஒலியே......////
வாழ்கையே வெறும் நிழல்படம் 
என்று மாறிப்போச்சு பேச்சுவார்த்தை 
குறைந்து போச்சு  உறவினர் போக்கு 
வரத்து சரிஞ்சி போச்சு இடஞ்சல்கள் 
உறவு வருகை என்ற காலம் வந்தாச்சு ........///
 
  
No comments:
Post a Comment