குயிலாக உன் பெயரை பாட ஆசை 
அத்தானே  ஆனால் என் குரல் 
கழுதைக் குரலானதே அத்தானே
என் அன்பு அத்தானே ...////
மயிலாக உன் முன் நடனம்  ஆட
ஆசை தான் அத்தானே  ஆனால்  
என் கால்களோ வளைவாக உள்ளதே
அத்தானே என் அழகு அத்தானே ...//
அன்னம் போல் உன் முன் அன்ன நடை
போட்டு உன்னை மயங்க வைக்க 
எண்ணம் அத்தானே ஆனால் என்
உடம்போ யானை போல் உள்ளதே 
அத்தானே என் ஆருயிர் அத்தானே ..//
கிளி போல் உன்னிடம்  செல்லமாக
மழலை மொழி பேசி  பழக கொள்ளை
விருப்பமடா அத்தானே ஆனால் நானோ
திக்குவாய்க் காரியட அத்தானே என்
அன்பு அத்தானே ...../////
மான் போல் உன் முன் துள்ளி ஓடி 
விளையாட ஆசை தான் அத்தானே 
ஆனால் சுமக்க முடியாத அளவு
வெட்கம் உள்ளதையா அத்தானே
என் அருமை அத்தானே ......////
இத்தனை ஆசையடா அத்தானே உன் மேல்
உன் வருகையைக் கண்டவுடன்
நான் நிற்பேன் கதவு ஓரமட அத்தானே
என் ஆசை அத்தானே .......////
இரவானதும்  கதை கதையாக 
அளப்பேன் அணைத்த படி உறங்கும் 
தலையணையிடம் அத்தானே
என் அன்பு ஆசை அழகு அத்தனையும்
கொள்ளையிட்ட அத்தானே அத்தானே....///
 
  
No comments:
Post a Comment