Wednesday 10 February 2016

வலியோடு வாழ்க்கை


வெளிச்சமான
அறைதான்  ஆனால்
இருட்டாகக் காட்சி
கொடுக்கிறது எனக்கு
இரு இமையும் மூடியதால்.
இருட்டறை  புதிதில்லை
இருந்தும் புதுமை தான்
பொதுவில்.
தாயின் இருண்ட கருவறையில்
சுருண்டு தூங்கி கண்ணை
விழித்து பார்க்கும் போதும்
விழித்து இருக்கும் போதும்
இருட்டறை  தான் அது இன்பம்
கொடுத்தறை.
துன்பம் என்று
ஒன்றை அறியாத அறை.
இதுதான் உலகம் என்று
உருண்டு புரண்டு சிரித்த அறை.
கை கால்களை நீட்டி இடியும்
உதையும் அன்னைக்கு கொடுத்து
வளர்ந்த அறை .
அடி உதை வாங்கும்
போது சுகமான வலியாக ஏற்று
நம் உயிர்த்துடிப்பை உணர்ந்து
மகிழ்வோடு அன்னை நம்மை
சுமந்த அறை அந்த அறை.
இட வசதி குறைந்த அறைதான்
அன்னையின் கருவறை இன்பமான
உறக்கத்திற்கு குறைவில்லை.
மண் உலகைத் தொட்ட பின்னே
விசாலமானறையினிலே நீட்டி
நிமிர்ந்து உறங்குகின்றேன்
கட்டிலிலே
இருள் நன்றாகவே
சூழ்ந்து கொள்கின்றது  உறக்கம்
எட்டி நிற்கின்றது
பல ஏக்கங்கள்
துக்கங்கள் எதிர்பார்ப்புக்கள்
ஏமாற்றங்கள் ஆசைகள் கடமைகள்
உணர்வுகள் உணர்ச்சிகள் இத்தனை
சுமைகள் என்னைத் தாக்குகின்றதே
வெளி உலகில் வலி வாழ்கையானதே .
   

No comments:

Post a Comment