Saturday 6 February 2016

சொல்லிவிட்டேன் ஆசையை

ஒவ்வொரு கவிதையும்
உன்னை நினைத்து
ஒவ்வொரு  பாடலும்
உன் அழகை குறித்து.

என்னை மறந்து மறந்து
உன் நினைவை விதைத்தேன்
என்  உள்ளம் காதல் கொண்டது
இல்லை அது அந்தக் காலம்.

இதுபோல் இன்பம்  கண்டதும்
இல்லை அவை அன்றைய நிலமையின்
கோலம் .

கவி வரிகளாலே உன்னை
அழைக்கிறேன் எந்தன் உயிரிலே
உன்னைக் கலந்தேன்.

காலம் கனியாது கண்டு
கலங்கி முழிக்கிறேன்
நித்ததும் உன் முகத்திரையில்
விழிக்கிறேன் தூக்கம்
கலைக்கிறேன் துக்கம்  சுமக்கிறேன்.
தக்கம் பண்ண தைரியம் இல்லை
தகுதியும் இல்லை தகராறு பண்ணாது
நீ வா என்னிடம் மெல்ல.

ஒத்தையடிப் பாதை தான்
ஒத்தையான பயணம் தான்
ஒத்துப்போக வேண்டும் என்று
ஒற்றுமையாக நான் அழைக்கின்னேன்
நின்று.

வெறுத்து நீ என்னை ஒதுக்காதே
மறந்து நீயும் ஒதுங்காதே
உறவை அறுத்து விட்டும் செல்லாதே
பேச்சை நிறுத்தியும் என்னைக் கொள்ளாதே.

வெள்ளந்தி பிள்ளை நான்
உன் காதல் கண்ணை திறந்து
பார் உன் கருணை நெஞ்சினிலே
இடம் கொடு உன் கன்னியமான
வாழ்வோடு  என்னையும்
இணைத்து வாழ்ந்து முடி
வாழ்த்துவோரையும் தேடிக்
கண்டு பிடி  மறந்து விடாதே
என் கரங்களை   இணைத்துப் பிடி....///

        

No comments:

Post a Comment