குடையை மழை நனைக்கவே
 ரசித்து நின்றேன்
கொஞ்சம் கனமாக 
பெய்து என்னையும்.
நனைத்தது அதையும்  
ரசித்து நின்றேன் .
ஓ  சோ என்று பெய்து  
நிலத்தையும்
முழ்கடித்தது அதையும்
 பார்த்து ரசித்தேன்.
அந்த நீரிலே பாதை 
ஓரம் நின்ற மரங்கள்
நீந்தியதும்  நானும் 
ஒரு வித  வியர்ப்போடு
கண்டதுமே அழகை ரசித்தேன்
 மகிழ்ச்சியோடு 
வீட்டை அடைந்தேன்
என் வீட்டுக்குள்ளும் 
மழை நீர் பட்டா
போட்டு அமர்ந்திருந்து விட்டது 
ஓட்டைக்
குடிசை வழியே 
வருகை தந்து
பதட்டத்துடன் மனைவி 
பாத்திரம் தேடி
கொண்டு வைக்கின்றாள் 
ஓட்டையின் நேராகப் பார்த்து 
இதை நான் எப்படி ரசிப்பேன்
மழை நீரும்
என் கண்ணீரும் ஒன்றாக
கலக்கவே சிலையாக
நின்றேன்
 ஏழை என் மணையில் 
வறுமைதான்  எல்லை 
வாடியது பிள்ளை
எரியாத அடுப்பு தான்
மிச்சமானது வாழ்வின்
என்னாலும் காட்சியாக 
 
  
No comments:
Post a Comment