Sunday, 21 February 2016

அழகியே

இடுப்பு சிறுத்தவளே
கொண்டை பெருத்தவளே
அம்பு விழிப் பார்வையை
வேகமாக வீசியவளே....!

உன் குறும்பு பேச்சில்
சிக்கியது என் அரும்பு
மீசையெடி உன் அசட்டுச்
சிரிப்பில் அடியோடு
சாய்ந்து விட்டது என்
உள்ளமடி....!

அடியே இடுப்பு சிறுத்தவளே
நீ இஞ்சித் தோட்டத்துக்கு
வஞ்சியோடி....!!

பிரமன் கஞ்சன் என்று
நான்  நினைக்கவேயில்லையடி
உன் இடையைக் கண் நோக்கும்
வரை...!

வஞ்சி உன்னைக் கெஞ்ச
காளை என் நெஞ்சம் அஞ்சுதடி
இருந்தும் என் ஆசை உள்ளே
கெஞ்சுதடி...!!!

இடுப்பு சிறுத்த பெண்னே
இடை மேல் என் கரம் போட
இடம்  கொடுப்பாயோடி
இல்லை நாம் இரு கரம்
கோர்க்கும் நாள் பார்ப்பாயோடி...!!!

  

No comments:

Post a Comment