Saturday 6 February 2016

மீனாட்சி


வட்ட முகம்
கொண்ட
மீனாச்சியே
தனிமையில்
நின்று என்ன
ஆராச்சி.............\

மயில் இறகுடன்
வள்ளி போல்
உன் கண்
தேடுவதும்
என்ன காட்சியம்மா
மீனாட்சி...............\

தோள் உசுப்பிக்
கேட்கத் தோழி
நான் உண்டு
தோள் சாய்ந்து விட
வரும்  அந்த மன்னன்
யாரம்மா மீனாட்சி.....\

பேச்சு மூச்சு
இல்லாமல்
உன்னை
சிலையாக்கி
வைத்த  அந்த
மகராஜன்
பேர் என்னம்மா
கூறும்  மீனாட்சி...............\

நானும்  உன் கச்சியடி
நினைவில் வச்சுகோ
பச்சை குத்தி..............\

காட்டிக் கொடுக்க
மட்டேன் கலங்காதே
சொந்த வனத்திலயே
உன்னை சொக்க
வைத்தவன் ஊர்
எவை என்று
சொல்லம்மா
மீனாட்சி...........\

என் கரத்தை
தட்டி விடாதே
உன்னவர்
எட்டி வரும்
வேளை நான்
விட்டு விடுவேன்
மீனாட்சி............\

இனி நீயாச்சி
அவராச்சி உன்
காதலுக்கு நான்
தூதாச்சி என்னம்மா
மீனாட்சி...........\

உனக்கு ஏக்கம்
வந்தாச்சி
பேச்சும்
குறைஞ்சாச்சி
தூக்கமும்
பறந்தாச்சி
சரிதானே மீனாட்சி.....\

  

No comments:

Post a Comment