செத்து மடிந்த உடல் எடுத்து 
சிற்பமாக செய்த வடிவமோ 
இலங்கை  ....///
அரை குறை உயிருடன் துடித்த 
உடலில் இருந்து  வடிந்த குருதி
எடுத்து தீட்டிய வண்ணமோ 
இந்த சென் நிறம் ......////
தமிழன்  சிந்திய உப்புக் கண்ணீருடன்
இணைந்து அவனின் உடலால் வடிந்த
இரத்தமும்  பாதாளத்தி பத்திரமாக
உள்ளதோ ....../////
வேதாளம் மீண்டும்  மீண்டும்
முருங்கை மரம்  ஏறுவது போல்
எங்கள் நாடாள வரும் குள்ள 
நரிகளின் கபட நாடகம் .....////
இழப்பதற்கும் இனி ஒன்றும் இல்லை
கேட்டாலும் எவையும் இனிக்
கிடைப்பதில்லை இரண்டும் கெட்ட
நிலையினிலே தமிழன் வாழ்வு
தவிப்பினிலே. ..../////
அழகிய தீவு இலங்கை  நான்கு
 பக்கமும் கடல் நீர் நடுவினிலே
வாழும் மக்களுக்கோ தொடர்
கண்ணீர் .......////
தண்ணீரால் சூழப்பட்ட நாடு
கண்ணீருக்குக் கைதியாகி 
விட்டது பாரு .....///
உலகில் வற்றாதவை அழியாதவை
கடல் நீர் தமிழன் வாழும் வரை 
நிலையாகிப் போனது வலியோடு
கண்ணீர் ......////
களை எடுக்கவும் ஆள் இல்லை
துணிவோடு அதட்டவும் ஆள் இல்லை
எதிர்க் கேள்வி கேட்கவும் ஆள் இல்லை
தலை குணிந்து வாழ்வதுதானா தமிழனுக்கு
முடிவான நிலை? 
 
  
No comments:
Post a Comment