Monday 1 February 2016

மனிதன் மாறிவிட்டான்

அந்தோ! மாயமடா.
மறைந்து போனது மனிதமடா.
எங்குபார்த்தாலும் கலகமடா .
ஊற்றெடுப்பதெல்லாம் உதிரமடா.

உருண்டையான உலகமடா.
உருளுவதாகச் சொல்வது விந்தையடா.
இதில் வாழும் மனிதனோ சிலர் மந்தையடா.
பலர் சொத்தையடா.

ஒரு பாதி முட்டாளடா மறு
பாதி போதைப் பித்தனடா.
கை வலிக்க உழைப்பவன்
கட்டுவதோ கந்தையடா
அதைக் கொண்டு விற்பவன்
தேடுவதோ உயர்தரச் சந்தையடா
போட்டி பொறாமை உண்மையை விழ்துதடா.

காட்டியும் கூட்டியும் கொடுத்து குதிக்குதுடா..
வட்டிக்கு கொடுப்பவன் குடும்பம்
கும்மாளம் போடுதடா
வட்டி கட்டும் ஏழை மனம் ஏங்குதடா
மந்திரம் தந்திரம் தலை விரித்து ஆடுதடா .

மனிதன் மூளை விசாலம் ஆனதடா
அதனாலே பல விந்தைகள் அரங்கேறுதடா.
இயந்திரமனிதனின் வருகையும்
(ரோபோ) பெருகுதடா
மனிதனுக்குப் போட்டியாக அவை
மாறும் காலம் தொலைவில் இல்லையடா.

நாடு விட்டு நாடு பணம் தேடி ஓட்டமடா
அங்கே நாகரிகம் கண்டு அவனுக்குள்
பல மாற்றமடா.
பிறப்புக்கு பஞ்சம் இல்லையடா
இங்கே மனித உயிருக்கு மதிப்பு இல்லையடா .
மனிதனை மனிதன் கொன்று
காணுகின்றான் இன்பமடா
இவன் மிருகக் குணத்தையே வென்றானடா.
புகழ் தேடியே ஓடுகின்றானடா

புகழ்ந்தே காலத்தை தள்ளுவானடா
போட்டுக் கொடுத்தே வெல்வானடா
புறம் பேசியே வாழ்வானடா.
பொல்லாத உலகமடா

புளுவானாலும் நல் வாழ்வு இல்லையடா
மனிதத்துக்கு மதிப்பு இல்லையடா
மனிதம் மறந்தவனுக்கு சிறப்புக்கு
எல்லையே இல்லையடா .

வாழும் வரைக்கும் மனிதனுக்கு தொல்லையடா
அதற்கு விடுதலை இல்லையடா
பேராசையின் காரணத்தால் பெரும்
அவஸ்தையே கொடுக்குமடா.
ஆசைக்கு அனை கட்டா மங்கையடா

கற்பின் மதிப்பை இழக்காளடா
குப்பைக்கு சிசுவை கொடுக்காளடா
நாணம் கொண்ட நல்ல பெண்ணாய்
நாட்டுக்குள் நடிக்காளடா.
வெட்கம் கெட்ட மனிதர்களடா

வெம்பி துடிக்கின்றது உள்ளமடா
கை இருப்பு உள்ள வரை உறவுடா
இல்லாத போது ஓடி மறையுதடா.
துப்புக் கெட்ட உலகமடா
தொடர்வதோ என்றும் அவலமடா.

      

No comments:

Post a Comment