Sunday 21 February 2016

பேராசைக்கார மாமியார்


பெண் பார்க்க வந்த மாமியார்
தரம் பார்த்தார் தங்கத்தை எடுத்து
தூக்கி நிறை பார்த்தார்==வேலைப்
பாட்டின்அழகு பார்த்தார்==கடையின்
விலாசம் கேட்டார்== அழகை
நோட்டமிட்டார்==புதுமையானவை
என்று முகம் மலர்ந்தார்==புன்னகை
பொழியோடு  பொன் நகையைப் பார்த்து
ரசித்தார் ==இது போல் எத்தனை
உள்ளது என்று கணக்கு கூட்டிப்
பார்த்தார்==தன் கையிலும் மகள்
கையிலும் போட்டு அளவு பார்த்தார்==
அதிகமாகவே அக்கறை காட்டினார்
பொன் நகை மேல்=தன் வீட்டுக்கு பல ஆண்டு
வாழ வரப் போகும் மருமகளைப்பார்த்தார்
சில நொடிப்  பார்வை==சில கேள்வி
கேட்டுவைத்தார்==மகாலெட்சுமியாட்டம்
இருக்காய் என்று வாய் வரை மட்டும்
சொல்லி வைத்தார்==ஆழ் மனதிம் வரை
எட்டவில்லை அந்த வார்த்தை  மகனைப்
பார்த்தார்==மகன் தலையை ஆட்டிவைத்தான்..
அன்று தாயிடம் ஆட்டிய தலை இன்று இரண்டு
ஆண்டானதும் மனைவியிடமும் ஆட்டி விட்டான்
சிரமங்கள் பல உண்டு சேர்த்திடுவோம் உன்
தாயை அன்னை இல்லம் என்றாள் மனைவி
ஆட்டி விட்டான் மகன் தலையை ஆடிப் போய்
விட்டார்==தாய் அன்று தங்கத்தை தரம் பார்க்க
தெரிந்த மாமியாருக்கு தன் மருமகளை தரம்
பார்க்க தோணவில்லை பேராசை பிடித்த
மாமியார் இன்று நிராசை இழந்து
நிராகரிக்கப்பட்ட பின் தான் சிந்திக்கார்
தனிமையில் இருந்து இல்லத்தில்...!!!!

        

No comments:

Post a Comment