ஆண் வர்க்கத்தையே பெண்கள்
வெறுக்கும் முன் நல்லோர் 
வள்லோர்களே களை எடுத்து
விடுங்கள் அந்தக் கயவர்களை.....///
இன்னும் துரியோதனர்கள் 
வாழ்ந்து கொண்டு இருப்பது 
கண்டு துயிலவும் முடியாது 
நடுங்குகின்றார்கள் பெண்கள்
இன்னும்  நின்று ...../////
அரக்கர்களின் பிடியில் சிக்கி 
அழிவுற்று மிஞ்சியவைர்களை 
பொறுக்கி சேகரித்தால் போல்
உள்ளது தமிழ் இனம் இதைக்
காக்க வழி இல்லாத வாறு
 பெருக்கெடுத்து விட்டார்கள்
காமோதரர்கள் ....////
சட்டத்தை நம்பாதீர்கள் பெண்களே
சாட்டையை கையில் எடுங்கள் 
எவனாக இருந்தாலும் சரி 
வேட்டையைத் தொடங்குங்கள் ...///
பெண் குழந்தைகளை பெற்ற தாய்க்கு
இவைகளை பார்க்கையிலே ஈரக்குடல்
நடுங்குகின்றது  இந்தப் பிள்ளையின்
புன்னகை  நிறைந்த மழலை முகம்
பார்க்கையிலே கண்கள் கலங்குகின்றது.,..//
அன்புக் கரம் கூப்பி வேண்டுகின்றோம்
ஈழத்தின் பெண்களுக்கு இழுக்கான
சாவு விளைவிப்பவனை இழுத்து 
நிறுத்துங்கள் மக்கள்  மத்தியிலே 
உறவுகளே  ஒழிந்து இருக்கும்
கயவைனை ஒளிக்கு கொண்டு 
நிறுத்துங்கள்  வீர மண்ணுக்கு
இரையாக்குங்கள்    குமுறுகின்றது
பல்லாயிரம்  பெண்களின் உள்ளங்கள் ...////
 
  
No comments:
Post a Comment