Wednesday 17 February 2016

இரு நம்பர்களின் பாடல்


நண்பன்(1)

நான் மலர்ந்த தாமரையைக் கண்டேன்.
தெப்பக் குளத்தில் மலராத தாமரையைக்
கண்டேன் குளத்தருகினிலே .நண்பனே..என்.
நண்பனே....!!!!

நண்பன்(2)

மயிலின் தோகையாட்டம் முடியழகி
தொட்டாச் சிணுங்கி போல் வெட்கம்
கொண்ட பதுமையடா.. நான் கண்ட
புதுமையடா...சாலை ஓரமடா...நண்பனே..
என் நண்பனே....!!!

நண்பன்(1)

கொண்டைச் சேவல் கொக்கரிக்க
இரு கை கொண்டு அவள் அணைக்க
நானும் சொக்கி நின்று பார்த்தேனடா..
நண்பனே..என் நண்பனே....!!!

நண்பன்(2)

சாலை ஓரமாக வண்டி பார்த்து
பக்குவமாக அவள் நடக்கையில்
நானும் கூடவே ஒட்டிக் கொள்ள
தவித்தேனடா...நண்பனே..என்
நண்பனே...!!!

நண்பன்(1)

சூடம் அவள் ஏற்ற என் இதயம்
ஒளி விழுந்ததுடா..அவள் கரம்
தூக்கி வணங்க என் கண் அவளை
நோக்கி வரம் கேட்டதடா..நண்பனே
என் நண்பனே...!!

நண்பன்(2)

ஜல்..ஜல்..என அவள் கொலுசு ஒலி
கேட்டு சாலை ஓரம் நின்ற பையன்
பார்க்கவே என் கண்கள் அவனைச்
சுட்டெரித்ததுடா.. என்னவள் என்று
என் மனமும் துடித்ததுடா..நண்பனே
என் நண்பனே...!!!

நண்பன்(1)

ம்க்கு..இங்கு மட்டும் என்னவாம்
அவளைத் தொட்டு பொட்டு வைத்த
சாமியாரின் கரத்தை கரும்பு போல்
கடித்து துப்ப கோபம் வந்ததுடா..
நண்பனே...என் நண்பனே.....!!

நண்பன்(2)

பேருந்து தான் நிக்க இடித்துப்
பிடத்து  ஏறும் போது என் கரமது
மெதுவாக அவள்ஆடையை தடவியது
அதுவே என் ஆனந்தமடா...நண்பனே
என் நண்பனே...!!!

நண்பன்(1)

ஆஹ..ஆஹ  நானும் பாக்கிய சாலியடா
கோவில் வலம் வருகையில் நெருசலில்
அவள் கூந்தல் என் சட்டை வட்டுனை கட்டியது
அவளின் முடியும் சட்டையில் தங்கியதுடா
நண்பனே..என் நண்பனே...!!

நண்பன்(1)..(2)

உறவாக வருவார்களா உள்ளத்தை
தருவார்களா உறக்கமது இனிமேல்
இல்லையடா..ஓடி ..ஓடி ...தேடும் வேலையடா
நாம் இனி ஊண் உறக்கம் அற்ற
பறவையடா....!!!!

   

No comments:

Post a Comment