நான்  பிறந்து அழும் போதே 
ஆரம்பித்த  சொல்  அம்மா
முகம்  பார்த்து  சிரிக்கும்
போதே  அறிமுகமான
பெயர்  அப்பா 
நான்   தாவி   நடை  பழகும்  
போது  தாவி  அணைத்து
தூக்கிய  சொந்தம்  அக்கா 
கூடி  ஓடி  விளையாடும்  
போது  என்னுடன்  கை 
கோர்த்துக்  கொண்ட
சொந்தம்   அண்ணா
நான்  பேச. பழகிய. போது
பாட்டுச்  சொன்ன சொந்தம்
தாத்தா   பாட்டி .
நான்  முறை  சொல்லப்
புரிந்து  கொண்டதும்
அறிந்த   உறவு  தங்கை
நான்  கோபம்  கொண்டு  
அடிக்கும்  போது  அழுது  
காட்டும்  சொந்தம்  என்  தம்பி 
என்பள்ளிப்  பருவம்  வந்ததும்  
ஒட்டிக்  கொண்ட
சொந்தம்   நட்பு   
 பருவ வயது   வந்ததும்   
நான்  தேடி  போன  சொந்தம் 
 காதலி  
 இப்போ  என்னை
தேடி  வரும்  சொந்தம்  
மரணம்  
நான்  விரும்பாத.
சொந்தம் அது 
ஆனால் என்னை  
விரும்பி அணைக்க 
வரும் நிச்சயம் ஒரு 
நாள் ..........!!
.
 
  
No comments:
Post a Comment