Friday 12 February 2016

இனிது இனிது காதல் இனிது

இரு கண் நோக்கியதும் ஒரு ஈர்ப்பு
இரு இதயம் இடம் மாறியதும் ஒரு வித வியர்ப்பு
இரு மனமும் இணைந்ததும் ஒரு வித தவிப்பு
இரு வீட்டாரும் சம்மதித்ததும் ஒரே குதுகழிப்பு

இரு கரம் இணைந்ததும் இல்லறம்
இரு உடல் இணைந்ததும் இன்பம்
இரு உயிர்களும் ஓர் உயிரானதும்
விருப்பு வெறுப்பு சமபங்கு.

காதல் என்னும் நாடகம் அரங்கேற்றம்
கண்டது கணவன் மனைவியாக மேடையிலே
தனிமைில் நோக்கிய கண்கள் இரண்டும்
கை கோர்த்தது உறவினர் முன் நிலையிலே.

மஞ்சம் விரிக்கும் மனைவியின்
நெஞ்சம் அறிந்து கணவனும்
கொஞ்ச வரும் கணவின்
குணம் அறிந்து மனைவியும்
விட்டுக் கொடுத்து புரிந்து நடந்தால்
அங்கே காதலுக்கு ஏது பஞ்சம்.

முக்கனியும் செங்கரும்பும் என்ன இனிமை
இந்தக் குடும்பத்தில்  இனியது இனியது காதல் அல்லோ
இவர்கள் இருக்கும் இடத்தில் பொழிந்து
விடும் காதல் மழை அல்லோ.

கனியான காதல் இனிப்பாகும்
கலையாத கனவாய்  நிலையாகும்
கணவன் கண்ணுக்கு நிலவாக மனைவியும்
மனைவி நெஞ்சத்தில் சிலையாக கணவனும்
காதல் காவியம் படிக்கலாம் இல்லறத்தில்
படிப்படியாக.

நம்பிக்கை என்னும் செடியில்
பூக்கும் காதல் மலர் கொடுக்கும்
இனிய காதல் கனியை இறுதி மூச்சை
நிறுத்தி இறைவன் யாராயினும்
இருவரில் ஒருவரை  அழைக்கும் வரை.

  

No comments:

Post a Comment