Sunday, 28 February 2016
கற்பனையே சொப்பனம்
உன்னைக் காதலிக்க ஆசை
ஆனால் அதற்கான தகுதியும்
திறமையும் என்னிடம் இல்லை.
உன் உணர்வுகளையும்
உணர்ச்சிகளையும் தூண்டி
விட்டு ரசிக்க ஆசை ஆனால்
தொட்டு விடும் தூரத்தில் நீ இல்லை.
உன் உடையை நான் துவைக்க
நீ உடுத்தி நடை போடுவதை பார்த்து
ரசிக்க ஆசை ஆனால் உறவென்று
நான் ஆகி விட வழி தெரியவில்லை.
நான் சமைத்து அதை நீ சுவைத்து
அருமையோ அருமை என்று பாராட்ட
வேண்டும் அப்போது நான் உன்னை
அணைத்து அன்பு முத்தம் பதிக்க
வேண்றும் என்று ஆசை ஆனால் உன்
துணைவியாக. எனக்கோ வழி தென் பட
வில்லை .
நீ திட்டும் போது அழுது விட்டு
அணைக்கும் போது விட்டுக் கொடுத்து
வட்டியாக முத்துப் பிள்ளை பெற்றுத் தரவே
ஆசை ஆனால் உன் நெஞ்சணையிலும்
பஞ்சணையிலும் இன்னும் இடம் கிடைக்க
வில்லை.
உன்னை அடையும் பாதை தெரியாமல்
தெரியாமல் தினறுகின்றேன்
தினமும் உன் உறவைத் தேடுகின்றேன்
உரிமை நீ என்று உளறுகின்றேன்
உறவாக வருவாய் என்று கனவில்
கூறுகின்றேன் முடிவு கிடைக்கவில்லை.
கருங் குயிலும் காட்டு ராணியும்
கானக் கருங்குயிலே
அவனைக் காணக்
கிடைக்கலையே.....///
கூவும் ஆண் குயிலே
அவனைக் கூட்டி வர நீ
நினைக்கலயே....///
சோலைக் கருங்குயிலே
என் சோகம் உமக்கு
புரியலயே......//
பூந்தோப்பு சிறு குயிலே
என் மனவருத்தம் உமக்கு
தெரியலயே.....///
மாந்தோப்புக் கருங்குயிலே
என் மனசி தவிக்குதடி
சிறு குயிலே. .....///
கரும்புக்காட்டு கருங்குயிலே
என் கறுத்த மச்சானைக்
காணலயோ...../////
மூங்கில் காட்டு கருங்குயிலே
ஓங்கி வளர்ந்த மூங்கில்
மரத்தோரம் என்னைத் தாங்கி
நின்றவரை நீ பார்க்கலயோ......///
மந்தாரக் குயிலே அவர்
வந்தாரென்னா கூவி
அழைத்துவிடு மறவாமல்
என்னையடி குயிலே
குயிலே கருங்குயிலே.....////
வரமா சாபமா
செத்து மடிந்த உடல் எடுத்து
சிற்பமாக செய்த வடிவமோ
இலங்கை ....///
அரை குறை உயிருடன் துடித்த
உடலில் இருந்து வடிந்த குருதி
எடுத்து தீட்டிய வண்ணமோ
இந்த சென் நிறம் ......////
தமிழன் சிந்திய உப்புக் கண்ணீருடன்
இணைந்து அவனின் உடலால் வடிந்த
இரத்தமும் பாதாளத்தி பத்திரமாக
உள்ளதோ ....../////
வேதாளம் மீண்டும் மீண்டும்
முருங்கை மரம் ஏறுவது போல்
எங்கள் நாடாள வரும் குள்ள
நரிகளின் கபட நாடகம் .....////
இழப்பதற்கும் இனி ஒன்றும் இல்லை
கேட்டாலும் எவையும் இனிக்
கிடைப்பதில்லை இரண்டும் கெட்ட
நிலையினிலே தமிழன் வாழ்வு
தவிப்பினிலே. ..../////
அழகிய தீவு இலங்கை நான்கு
பக்கமும் கடல் நீர் நடுவினிலே
வாழும் மக்களுக்கோ தொடர்
கண்ணீர் .......////
தண்ணீரால் சூழப்பட்ட நாடு
கண்ணீருக்குக் கைதியாகி
விட்டது பாரு .....///
உலகில் வற்றாதவை அழியாதவை
கடல் நீர் தமிழன் வாழும் வரை
நிலையாகிப் போனது வலியோடு
கண்ணீர் ......////
களை எடுக்கவும் ஆள் இல்லை
துணிவோடு அதட்டவும் ஆள் இல்லை
எதிர்க் கேள்வி கேட்கவும் ஆள் இல்லை
தலை குணிந்து வாழ்வதுதானா தமிழனுக்கு
முடிவான நிலை?
Friday, 26 February 2016
மாட்டி விட்டாள் பாட்டி
குடி பிடி கேட்கும்
பிடித்து விட்டால்
நிலைத்து நிற்கும்.
நிலைத்து விட்டால்
குடியையே கெடுக்கும்
கள்ளச் சாராயம்
கடத்தலில் என்ன
ஒருவிந்தை.......\
பத்தறை வீட்டில்
அவள் பாதம்
பட்டதில்லை
பத்தறை பாக்கட்டில்
பத்திரமாய் கொண்டு
வந்தாள் பாட்டிலை.....\
பசிக்கும் வயிறுக்கு
பத்து ரூபாய் வேண்டும்
என்று குடலை எரிக்கும்
தண்ணீரை சுமந்து
வந்தாள்........\
ஏழை எளியவள்
என்று வழி விடும்
காவல் நிலையம்
என தப்புக் கணக்குப்
போட்டு வந்தாள்.......\
துணிந்து வந்தாள்
நெடு நாளாக கண்ணில்
மண்ணைத் தூவி உலாவி
வந்தாள் காலம் போட்ட
கணக்கு கையை வைத்தது
அடி மடியில் பிடி பட்டாள்
பாட்டி பாட்டிலோடு.........\
மாணம் காக்கும்
துணியைக் கழட்டி
விட்டாள் கடமையில் அமர்ந்த
அதிகாரி பூட்டிய பாட்டில்
விற்ற பாட்டி கண்ணீர்
சிந்துகின்றார் காட்டி
காட்டி....\
உடல் மறைக்க
உடை போட்ட காலம்
மாறி ஊத்துவதும்
புகைப்பதும் எரிப்பதும்
சிதைப்பதும் என உயிர்க்
கொல்லி பொருளையே
மறைக்க உடைபோடும்
காலமாய் மாறி விட்டதைப் பாரும்.
Thursday, 25 February 2016
பிரியாத பிரியம்
14 வயது முதல் நான்
அங்கு வந்திருந்தால்.
பார்த்துப் பார்த்து பழகிருப்பேன்.
பேசிப் பேசி நெருங்கிருப்பேன்.
உன் அன்பை முழுமையாக
கொள்ளை கொண்டிருப்பேன் ...//
தொட்டாற் சிணுங்கி போல்
இருக்கும் என் வெட்கம் பறந்திருக்கும்.
உன் தோட்டத்தின் மலராக மனம் மலர்ந்திருக்கும்
வானளவு என் கனவு வளர்ந்திருக்கும்.
வாழ்க்கை பூராவும் நம் உறவு தொடர்ந்திருக்கும்....///
அரசியல் வாதி போல் நீ
அடிக்கொரு தடவை மாறிஇருக்கமாட்டாய்
சமுகத்தின் முன்னே நாம் சிறந்த
காதலராக வலம் வந்திருப்போம் .....//
அண்ணாந்து பார்த்து ஊர்
வியர்க்கும் வண்ணம்
சாணக்கியனாக உன்னை நான்
உயர்த்திப் பார்த்து மகிழ்ந்திருப்பேன்.....////
சமய சடங்குக்கும் உன்னை இழுத்திருப்பேன்.
நீ சரித்திரம் படைக்கத் துணையாக
இருந்திருப்பேன்.
என் இதயம் அமர்ந்தவனே உன்னை
இமயம் என்று பெருமை கொண்டிருப்பேன்.....////
திருப்பதி லட்டுப்போல் இனிக்கின்றதையா
நினைக்கையிலே திரும்ப திரும்ப உதிக்குதையா
நெஞ்சுக்குள்ளே .....////
தீந்தமிழ் சுவை போலேஇருக்கின்றதையா
வஞ்சி மனசிக்குள்ளே
கண் முன்னே காட்சிகளாக வந்து வந்து
போகின்றதையா
பேச்சு வார்த்தை நமக்கிடையில்
இல்லாத இந்த வேளையிலும்......////
வாழ்த்து
தடாகத்தின் சாதனைகளை
தடம் புரட்டிப் போட இயலுமா?
பதித்து விட்டது முத்திரை பல
வகையிலும் இதைப் பார்த்து
இழந்து விட்டனர் சிலர் நித்திரை.
எத்தனையோ பேருக்கு வழி
காட்டியாகவும் உலகலாவிய
நிலையில் போட்டிகளும் கை
மேலே நினைவாக நிலைத்து
விடும் வண்ணம் சாண்றிதழும்
கொடுத்து கௌரவம் அடைய
வைப்பதில் தடாகத்துக்கு நிகர் தடாகமே.
இவைகளை தாண்டி சென்று
விட்ட ஆண்டு பல சாதனை
புரிந்து பலரின் பாராட்டையும்
சிலரின் விமர்சனங்களையும்
சந்தித்த தடாகம் சலிக்கவில்லை.
மீண்டும் புயலாக எழுந்து
விட்டது புது ஆண்டின் இரண்டாம்
மாதமே அடுத்த சாதனையை
நிறைவேற்றவே பல அறிஞர்கள்
கவிஞர்களை தாங்கியுள்ள நாடு
இந்தியா அந்த நாட்டை நாடியே
இலங்கை எழுத்தாளர்கள் சென்று
நூல் வெளியீடு செய்து பாராட்டுப்
பெற்று வந்துள்ளனர் வருகின்றனர்.
ஆனால் அதை மாத்தி அமைத்துள்ளார்
எங்கள் தடாகத்தின் ஒருங்கிணைப்பாளர்
சகோதரி கலைமகள் ஹிதாயா றிஸ்வின்
கவியருவி றியாஸ் நூல் வெளியீட்டுக்காக
முதல் முறையாக இந்தியக் கவிஞர்கள்
இலங்கை சென்றுள்ளனர்.
வருகை தந்த கவிஞர்கள் அத்தனை
பேருக்கும் தடாகத்தின் சார்வாக
கௌரவப் பட்டமும் விருதும் வழங்கி
நல்ல நட்வுறவை வளர்த்து மகிழ்வோடு
வழி அனுப்புகின்றது தடாகக் குழுமம் .
பெண்களால் நாடாத்தப் படும்
தடாகத்தின் சாதனைகள் தொடரும்
அதன் தலைவி ஹிதாயாவின் தாரகை
மந்திரம் இவைதான் அதை உண்மையில்
பாராட்டுகின்றேன் தடாகத்தின் புதிய
முயற்சிகள் பெற்றி பெற நாமும் வாழ்துக்
கூறுவோம் வாருங்கள் நட்பூக்களே ...../////
வாழ்த்துக்கள் அக்கா :-)
Wednesday, 24 February 2016
விருந்தினர்
விருந்தினர் வருகையின் போது
முகம் மலர்ந்து புன்முறுவலுடன்
வரவேற்று அமர்ந்து அவர்களுடன்
கலந்துரையாடி உபசரித்து அன்போடு
வழி அனுப்பி வைக்கவேண்டும்.....////
அப்போது மீண்டும் வாருங்கள்
என்ற வார்த்தையை மறவாது
கூறி வீட்டின் பாதி வழி வந்து
வழி அனுப்பி வைப்பதுதான்
தமிழர் பண்பாடு. ....///
உறவின் அன்பின் வெளிப்பாடு.
நல்ல குணத்தின் செயல்பாடு.
பண்பான மனிதர்கள் என்ற
அடையாளத்தின் பொருட்பாடு.....//
ஆனால் அந்த நடை முறைகளை
இப்போது கண்டு பிடிக்கவே
படவேண்டும் பெரும் பாடு. ..///
வருவோர் போவோர் யார் யார்
என்று தெரியாத வாறு குடும்ப
அங்கத்தவர்களின் நடை முறை
வாழ்கை என்று ஆகிப்போச்சு .....///
ஆளுக்கு ஓர் அறை ஆளுக்கு ஓர்
தொலைக் காட்சி பூட்டிய அறையின்
வழியே வெளியாவது நெடுந்தொடர்
ஒலியே......////
வாழ்கையே வெறும் நிழல்படம்
என்று மாறிப்போச்சு பேச்சுவார்த்தை
குறைந்து போச்சு உறவினர் போக்கு
வரத்து சரிஞ்சி போச்சு இடஞ்சல்கள்
உறவு வருகை என்ற காலம் வந்தாச்சு ........///
புதுக்கவிதை
புதுமையின் புதுமைகள்
அத்தனையும் விந்தைகள்.
புது வரவாகக் கொண்டு
வந்து இணைத்தது பல சொந்தங்கள்.
புது புது தலைப்புக்களில்
ஒரு வித தவிப்பைக் கொடுத்து
வளர்த்து விட்டது கற்பனைகள்.
புதுமையின் பூக் கொடியிலே
அத்தனை மலரும் சிறந்தவைகள்.....//
ஒற்றுமையாக கவி கொடுக்கும் கவிஞர்கள் .
வெவ்வேறு தேசத்துப் பறவைகள்.
விரைந்து வந்து கருத்திடும் உறவுகள்.
வியர்ப்புக் கொடுக்கும் புகைப்படங்கள்......//
புதுமைக்கு கொடுப்பதோ பூமாவின் பூக்கள்.
வியற்கத்தக்க புதுமையின் வளர்சிகள்.
ஏறியது பட்டம் போல் இப்போது பல கண்கள்.
புதுமைப்பக்கம் போடுது நோட்டங்கள்.....///
புதுமையின் கட்டுப் பாடு
வரவேற்கதக்க விடையங்கள்.
கட்டுப்பாடு தழராத வாறு வழி நடாத்துவது
பாராட்டத்கக்க விஷயங்கள்.
கட்டெறும்பு அணி போல் வளர்ந்து
விட்டது புதுமையிலே நட்புக்கள்.
இனி எட்டிப் பறிக்கப்போகின்றார்கள்
வெற்றிக் கனிகள்........////
விட்டுக் கொடுப்பதும் தட்டிக் கொடுப்பதும்
நல்ல மனிதனின் செயல்கள்.
பாராட்டுவதும் பேர் போட்டு போற்றுவதும்
நல்ல ஆசானின் செயல்கள்.
புதுமைப் பக்கம் நல்ல
நண்பர்களுக்கு சொர்க்கம்.
தரமான கவிதைகளை பதிவு
செய்ய வேண்டாமே தயக்கம்.........////
எரியும் மனசு
தடாகம் கலை இலக்கிய வட்டம்
உலகம் தழுவிய மாபெரும் கவிதை
போட்டி பெப்ரவரி மாதம் 2016
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
உள் ஒன்று புறம் ஒன்று பேசி உறவாடி வரும்
மனிதர்களைப் பார்க்கையில் தீயாக எரிகிறது
என் மனம்.,....//
கொடுத்த கையை எடுப்பதற்குள் வெடுக்கெனக்
கடிக்கும் நாய்க் குணம் கொண்ட மானிடர்களைப்
பார்க்கையில் தீயாக எரிகிறது என் மனம் ..
பாசம் இல்லாத பாதகமான போலி பூசாரிகளினால்
பெண் சிசுக் கொலைகளை அறிந்து தீயாக
எரிகிறது என் மனம் ......./////
பெண்மைக்கும் பெண்ணுக்கும் பக்கபலமாக
இருக்க வேண்டிய ஆண்களே பெண்களின்
உடலைச் சிதைத்து உயிரைப்பறித்த செய்திகளைப்
படிக்கையிலே தீப்பிளம்பாக எரிகிறது
என் மனம் .......////
ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை
உண்டு என்று கூறும் உலகிலே சாதாரணமான
முகநூலிலும் பெண்களுக்கு பல உரிமைகள்
பறிக்கப்படுவது கண்டு கோபத்தில் பொங்கி
எரிகிறது என் மனம் ....////
பிறப்பால் மாற்றம் இல்லை குருதியில்
மாற்றம் இல்லை வாழும் போது இன மத
மாற்றம் கொண்டு வாழ்கையிலே பல
ஏமாற்றங்களைக் கண்டு பெரிகிவரும்
கண்ணீரை அடக்க முடியாமல் தீயாக
எரிகிறது என் மனம் ...../////
பணத்துக்காக இலட்சியத்தைக் காற்றில்
விட்டு பல்லை இலிச்சி நிற்கும் பரதேசிகளையும்
பணத்தைக் காட்டி பலரை அடிமையாக்கும்
பாவாளிகளையும் நேருக்கு நேர் சந்திக்கையிலே
எரித்து விட துடிப்போடு எரிகிறது
என் மனம் ..........///
தன் நடத்தையில் தவறு விட்டு பிச்சைப்
பாத்திரம் ஏந்திப் பிழைக்கவும் மழலை
தொழிலாளி பெருக்கடுக்கவும் காரணமாக
குப்பையிலே குழந்தையை வீசி விட்டு
உள்ளாச வாழ்கை காணும் தாய்மையையும்
அதன் புணிதத்தையும் கெடுத்த பெண்கள்
பெயரைக் கேட்டதுமே எரி மலையாக எரிகிறது
என் மனம் ......////
ஏராளம் தாராளம் எரித்துக் குவித்து
திருத்தி அமைக்க இயலாமையால்
கண்ணீர் சிந்தி சோகம் நிறைந்து
வலியோடு எரிகிறது ......///
ஆழ் மனம்
என் உரிமை
ஊரார் அழைக்கவே
உரிமையோடு பெயர்
உன் தந்தையார் வைத்தார்
உன்னை நான் அழைக்கவே
உறவாக நினைத்து
உரிமையோடு ஒரு பெயரிட்டேன்.
வருவோர் போவோர் எல்லாம்
அப்படி உன்னை அழைப்பது
கண்டு எரிச்சலோடு எழுகிறது
பொறாமை இன்று.
கொஞ்சம் அதிகமாகவே
வெம்பி மனம் பொங்குது
கண்ணீரும் சேர்ந்து.
நீ என் உரிமை அந்தப் பெயர்
இட்ட எனக்கே அவையும் உரிமை
எப்படியடா அனுமதித்தாய் அது போல்
அனைவரையும் அழைக்க விட்டாய் .....////
அவல நிலையில் விவசாயி
பறவை முதல் மனிதன்
வரை உண்ணும் முக்கிய
உணவு நெல்லில் இருந்து
கிடைக்கப் பெறும் அரிசி தான் .
அந்த.நெல்மணி இப்போ
கண் முன் கடன் மணியாக.
காட்சி தருகின்றது.
வான்மழையை நம்பி விதை
போட்ட. காலம் மாறி நிலத்தின்
நீரை நம்பி விதை போட்ட
காலம் வந்து இப்போ
இரண்டுமே கை விட்டு
போய் கண்ணீர் விட்டு
வாழ்கை நடத்தும் அவல.
நிலை வந்து விட்டது.
விவசாகியின் வாழ்விலே
உழுவ. மாட்டையும் வித்து
உண்ணும் அவல. நிலையில்
சேற்றில் வைத்த. காலும்
நாற்று நட்ட. கையும்
ஏக்கத்தோடு பார்கின்றது
வறட்சி அடைந்த. பூமியை
நீர் நிறைந்த. கண்ணுடன் .
உலகில் உள்ள. உயிர்
அனைத்துக்கும் சோறு
போட்டவன் வீட்டில்
ஒரு நேரம் வயிறு
நிறைய. சாப்பிட. வழி
இல்லை அவன் குழந்தை
பசியில் வாடி வதங்குகின்றனர் .
அடகு வைத்தும் நட்ட விதை கை விட்டு
விட்டதால் அடகு வைக்கவும் ஏதும்
இல்லை கட்டிய தாலியை
தவிர கொட்டி கொட்டிக் காசைப் போட்டு
விதைத்து விட்டு வானத்தை ஏக்கத்தோடு
பார்த்து ஏமாந்தவன் வீட்டையும்
இழந்து தெருவுக்கு வரும் அவல
நிலை நாகரிகம் மாறினாலும்
விவசாகி வாழ்வு எப்போதும்
வெளிப்பு இல்லாத இருட்டறை தான் .
புன்னகையும் இல்லை
பொன் நகையும் இல்லை
வறன்ட பூமியை பார்த்து
பார்த்து இருண்ட வாழ்க்கை
வாழும் அவல நிலை இது
மாறுமா? மாறுமா? மாற்றம்
காணுமா? இந்த நிலை.
Sunday, 21 February 2016
இரு தோழியின் பாடல்
வானி<
===கேட்டேன் அடியே பெண்ணே
முத்தே மணியே என் ரதேமே
செல்வி ..தோழி..ஒரு காதல்
கதை நான் கேட்டேனடி ..தோழி
செல்வி..சொல்லட்டுமா...அதை
நான்..சொல்லட்டுமா..?மெல்ல
மெல்ல..வெட்கத்துடன்..நான்
சொல்லட்டுமா....மா...ஒகோ..
சொல்லட்டுமா ..செல்வி
..என்..தோழி..!!!
செல்வி<
=== சொல்லடி.=சொல்லடி..என்
தோழி..அடியே வானி நீ..சொல்லடி
அதைச்...சொல்லடி..பூவாட்டம் நீ
மலர்ந்து ..தேனாட்டம் சொல்லும்
போது. தித்திப்பும் ஊட்டுமடி..
எனக்கும் காதல்..தானாக..தோனுமடி
தோழி ...வானி என் நெஞ்சுக்குள்ளும்
தானாக..தோனுமடி தோழி..அடியே
வானி..சொல்லடி நீ..சொல்லடி என்
தோழி..அடியே வானி.....!!
வானி<
===ஜோடி மலரிடன் இடையில் ஓடி
வந்த வண்டாட்டம் அவனுமடி..தோழி
அதைப் போ என்று.விரட்ட முடியாத
பூவாட்டம் அவளுமடி..தோழி..ஆகா
ஓகோ...அடியே தோழி..அவள்
நிலமையைக்..கேளுமடி...நீயும்..கேளுமடி
சொக்கி நிக்கின்ற ..பெண்ணின்..அற்ப
ஆசைகளை..கேளுமடி..நீயும்..கேளுமடி..தோழி..!!
செல்வி<
===கூறுமடி..நீ..கூறுமடி தோழி
அவள் ஏக்கத்தையும் நீ..கூறுமடி
தோழி..அடியே வானி.. ஏக்கமது தாக்கம்
ஆனதோடி ...தோழி...ஓ...ஒகோ...
தோழி..என் தோழி..இல்லை..தாகம்
ஆனதோடி...தோழி.கூறுமடி..நீயும் கூறுமடி.!!!
வானி<
=== ஏய் ..ஏய்..தோழி..நீயும் கில்லாடி
பெண்ணடி..தோழி..கேலியாக நீ
என்னைக்..காலியாக்காதேடி நானும்
கூறுகின்றேன்..அது என் காதலடி
தோழி..நீ இல்லாமல் ஏதடி.சுகந்தமடி தோழி
என் தோழி.. அவர் வரும் பாதையெடி தோழி
இதுகும் நான் போடட சாலையடி தோழி...
ஐயா...ஐயோ..பார்க்காதேடி..தோழி எனக்கும்
வெட்கம்..வெட்கமாக தோனுதடி தோழி..!!
செல்வி<
=== அடடா..அடடா..அற்பூதமடி தோழி
உன் காதல் நாயகனை நானும் அறிவேனடி
தோழி..பூவாட்டம் உள்ள உன்னை வண்டாட்டம்
சுத்துவதோ..தென் நாட்டு அரசனடி..தோழி
இன் நாட்டு மங்கை அவளின் கண்ணாலே
தோக்கடித்த மன்னனடி அவனும்..தோழியே
என் அன்பு..தோழியே மௌனம் ஏனோ ..
திகைக்காதேடி நீயும் செய்தி சொன்னவரோ
உன் ஆசை மன்னவந்தானடியோ..தோழி..!!!
வானி..செல்வி..
==========முத்தமடி முத்தமடி தோழி
உனக்கும் என் அன்பு முத்தமடி தோழி
மொத்தமாய் தந்துவிட வேண்டாமடி
தோழி அவருக்கும் மீதி வேண்டுமடி
தோழி===ஆஹ..=ஆஹ..ஹாஹாஹா..!!!
உன்னாலே எல்லாம் உன்னாலே
தேள் கொட்டியதும்
தெரியாமல் அமர்ந்து
இருக்கின்றேன்..
உன்னாலே..எல்லாம்
உன்னாலே....!!!
தேள் ஒன்று ஓடுது
என்று காட்டி விட்டு
அது கொட்டும் போது
வந்த வலி கூடத்
தெரியலயே...
உன்னாலே எல்லாம்
உன்னாலே....!!!
என் உள்ளத்தின் வலி
அதிகரித்ததால் உடலின்
வலி தெரியலயே..
உன்னாலே..எல்லாம்
உன்னாலே...!!!
வலி...வலி..என்று
வரி..வரியாக
வரைகின்றேன் எழுது
கோலின் வலியையும்
மறந்து...உன்னாலே
எல்லாம்...உன்னாலே...!!!
நினைத்து..நினைத்து
நினைவயும் இழந்து
நிம்மதி என்னும்
சொல்லையும் மறந்தேன்
உன்னாலே..எல்லாம்
உன்னாலே...!!!
உயிர் உள்ளது தெரிகின்றது
உணர்வு உள்ளதும்
புரிகின்றது உணர்ச்சியும்
வருகின்றது எல்லாம்
என்னைப் பார்த்து கேலி
செய்கின்றது..உன்னாலே
எல்லாம்..உன்னாலே...!!
ஒரு முறை நான் கேட்ட
வரம் கிடைக்க வேண்டும்
அவையும் உன்னாலே
உன்னாலே..உன்னாலே..
மட்டுமே கிடைக்க வேண்டும்
என்பதே..என்நாளும்..
என்நாளும் என் ஆசையே...!!!