Friday 4 March 2016

முக்காட்டுக் காரி கிக் ஏற்றினாள்

கன்னம் வெளுப்பான புள்ள
கார் மேகக் கூந்தல் வளர்த்த புள்ள
வெட்டி  வெட்டி  விழிக்கும்
விழி இரண்டையும்  உற்று
நோக்க  வழி இன்றி  முகத்திலே
முக்காட்டுத்  திரை போட்ட  புள்ள......////

ஆரஞ்சு பழம் போன்ற முகத்தை
ஆராய முடியாமல் திரை
போட்டு மறைத்த புள்ள......////

செங் கனியாள் வாய் திறந்து
பேசும் வேளையிலே
செவ்விதழ் பார்க்க நான்
துடிக்கையிலே அறிந்தும்
அறியாதது போல் பாசாங்கு
செய்யும் புள்ள....../////

முற்றிய ஆப்பிளை  பறித்து குளிர்
சாதனப் பெட்டியிலே வைத்து
வெளியே எடுத்தது போல்
அழகாய் உள்ள குண்டுப் புள்ள.....///

மல்கோபா மாம்பழம்
போல் உன்னை நான்
சுவைக்க வேண்டும் புள்ள...../////

வாழையடி வாழையாக
நம் காதலும் நிலைக்க
வேண்டும் புள்ள.....////

கடந்து போகும் போது ஓரமாக
இடக் கண் சிமிட்டிய புள்ள.....////

வலது கரம் பிடிக்க வாடி புள்ள
நாள் காட்டி காத்திருக்கு நல்ல நேரம்
குறிக்கப் புள்ள......./////

    

No comments:

Post a Comment