Friday 25 March 2016

அவனைக் கொண்டு வா


வீசி வரும் தென்றலே
தீண்டி  விடு தடவி விடு
தாலாட்டி விடு தூக்கத்தை
தூண்டி விடு ஆனால்
என்னை விட்டு தாண்டிச்
செல்லாதே...................\

தோண்டத்  தோண்ட
சோகம் என்  உள்ளே
தோண்டிப்  பார்த்துக்
கேட்டு  தூது சென்று
வா  நீ மிக விரைந்தே......\

என் இரு விழி நடுவே
நுழைந்து  இருதையப்
பூட்டை உடைத்து இறுதி
அறையிலே பெயரை
நிறுத்தி சென்ற அவனைக்
கொண்டு வா தென்றலே......\

அன்று ஒரு நாளிலே
அந்தி சாயும் வேளையிலே
இத்தி மர நிழலிலே
அவனைக் கண்டேன்.........\

தெத்தி விளையாடும்
பசங்களுடன் தித்திப்பாக
பேசி  மகிழ்ந்திருந்த அவன்
அழகு கண்டு புத்தி மழிங்கி
நின்றேன் என்னை மயக்கிச்
சென்றவனைக் கொண்டு வா
தென்றலே............\

அவனிடம் பேரைக் கேட்டேன்
ஊரைக் கேட்டேன் நீ என்
உறவா என்று கேட்டேன்
பதில் உரைப்பான் எனக்
காத்து  நின்றேன்  ஏழனமாக
ஒரு சிரிப்பை தெறித்து விட்டு
சென்றான் அவனைக் கொண்டு
வா தென்றலே...............\

பூ வாசம் மணக்க என்
மண வாசம் சிறக்க நான்
இறக்கை கட்டிப் பறக்க
தலை வாசல் திறந்து
வைக்கின்றேன்  விரைந்து அவனைக்
கொண்டு வா  தென்றலே............\

தென்றாலாய் சென்றுவா
கொன்றலாய் சென்று வா
புயலாக மாறி வென்று வா
பூகம்பமாகப் புரளி எழுப்புகின்றது
என்  உள்ளம் சிறந்த மருந்தாக
அவனைக் கொண்டு வா
தென்றலே............................\

இத்தனையும் நீ செவி
மடுத்தாயோ தென்றலே
ஒன்று கூறுகின்றேன் நீ
நின்று அவனைக் கொண்டு வா
இல்லையெனில் என்னைக்
கொன்று விட்டு சென்று விடு......\

மடியவும் நான் தயார்
என உறுதி பூண்டு எழுந்து
நிற்கின்றேன் நிமிர்ந்து
இறுதி முடிவு உன் கையிலே
தென்றலே  நீ வென்று வா
இல்லையெனில் என் மரணத்தை
எடுத்துச்   சென்று  விடு
தென்றலே  ஓ தென்றலே .....\

     

No comments:

Post a Comment