Friday 11 March 2016

அம்பிகை

விளக்கை ஏற்றி வைத்து
இரு கரம் கூப்பி நின்று
தமிழ் மொழி எடுத்து தாயின்
திருப்புகழ்  உரைத்து.

ஆரவாரம் இல்லாமல்
ஆலயம் முன் அமர்ந்து
ஆழ் மனம் தொட்டு அம்மன்
அவளின் அகக் கண்ணை
நினைத்து துதி பாடிவழிபட்டுப்பார் 
பெண்ணே உன் வாழ்வில்
மின்னுமடி நிம்மதி கண்ணே.

பால் அபிஷேகம் செய்ய
வேண்டியதுமில்லை பழம்
கொண்டு படைக்க
வேண்டியதுமில்லை
சூடம் ஏற்றி குலவ போட்டு
உருண்டு புரண்டு எழ
வேண்டியதுமில்லை.

தூய்மை உடை தரித்து
நல் உள்ளம் கொண்டு
நம்மை மறந்து உண்மை
பக்தியோடு பெரியோரை
மதித்து எளியோருக்கு உதவி
தாயின் நாமம் உச்சரித்து
நின்று பார் நிச்சயம் நிறைவேறும்
நினைத்த காரியம் ஓம் அம்பிகையே
சரணம்  தாயி  நமோ  நமஹ.

          

No comments:

Post a Comment