Friday, 25 March 2016

வைக்கட்டுமை பட்டி மன்றம்

எழுந்து  வரும் அலையையும்
இதமாய் அணைத்து முத்தம்
இடும் தென்றல்.

மலர்ந்து வரும் மலரையும்
தடவிய படியே அணைத்து
முத்தம் இடும் தென்றல்.

ஓங்கி வளர்ந்த மரக்கிளையை
உசுப்பி எழுப்பி முத்தம் இடும்
தென்றல்.

கார் மேகத்தைத் துரத்திப் பிடித்து
கலைத்து ரசித்து முத்தம் இடும்
தென்றல்.

என் மூச்சுக் காற்றையும்
சேர்த்து எடுத்த படியே
உலகெங்கும் முத்தம்  இட்ட
படியே உலா வரும் தென்றல்.

என் கண்களில் காட்சி
தரவில்லையே  அதனால்
நான்  நடாத்தப் போகின்றேன்
பட்டி மன்றம்.

   

No comments:

Post a Comment