Tuesday 15 March 2016

வாக்குத் தவறும் நாக்கு

தடாகம் கலை இலக்கிய வட்டம்

உலகம்  தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி
மார்ச்மாதம் 2016

15- தலைப்பு .. வாக்குத் தவறும்  நாக்கு.
.......................................................................

நோக்கங்கள் தடுமாறும் போது வாக்கு
மாறுகின்றது நாக்கு.

தாக்கங்கள் ஏற்படும் போதும் கொடுத்த வாக்கை
மறக்கின்றது நாக்கு.

கண்டபடி அலை பாயும் மனதினாலும் வாக்கு
மாறுகின்றது நாக்கு.

எலும்பு இல்லாத உறுப்பு என்பாதால் வாக்கு
மாறுகின்றதோ நாக்கு.

மறைந்திருந்து நிறைந்த பொய்களை உரைப்பதால்
வாக்கு மாறுகின்றதோ நாக்கு.

உள் ஒன்று புறம் ஒன்று பேசுவதால் வாக்கு
மாறுகின்றது நாக்கு.

பேராசைக் காரனிடம் சிக்கி இருப்பதாலும் வாக்கு
மாறுகின்றது நாக்கு
.
ஒழிந்து இருந்து ஊசி போல் வார்த்தைகளை
கொட்டித்தீர்ப்பதாலும் வாக்கு மாறிவிடுகின்றது நாக்கு
.
சுழண்டு புரண்டு ஒலியை வெளியேற்றுவதாலோ
வாக்கு மாறுகின்றது நாக்கு.

நல்லவர் கெட்டவர் பாராது தீ போல் சொல் கொண்டு
சுட்டெரிப்பதாலோ வாக்கு மாறுகின்றது நாக்கு.

கொடுக்கும் வாக்கு காற்ரோடு கலந்து விடுவதாலோ
வாக்கு மறக்கின்றது நாக்கு.

பொலாத சமுதாயம் புகழுக்காக அலைவதால் வாக்கு
மறக்கின்றதோ நாக்கு.

கொடுக்கும் வாக்கை செவி மடுக்கும் காது
தண்டிக்கத் தெரியாத உறுப்பு என்பதால் வாக்கு
மறக்கின்றதோ நாக்கு
.
வாழ்க்கையில் இலட்சியம் இல்லாத மனிதன்
வார்த்தையில் உண்மை இல்லாத மனிதன் .
போலி நடை முறைகளை கையாளும் மனிதன்
போலி முகபாவம் காட்டும் மனிதன்
.
சுயநலம் கொண்ட மனிதன்
சுற்றார் உற்றார் நலம் கருதா மனிதன் .
பேராசை பேய் பிடித்த மனிதன்

பேசிப் பேசியே காலத்தைக் கழிக்கும் மனிதன்.
பிறர் உயர்வு பொறுக்கா மனிதன்.
பித்துப் பிடித்து அழையும் மனிதன்.
பணத்துக்கு அடிமையான மனிதன்
பண்பாடு  மறந்த மனிதன்.

வாழ்வின் அர்த்தம்  அறிய முயற்சி எடுக்கா மனிதன்.
வாழ்கையில் நல் பெயர் என்றும் பெறாத மனிதன்.
இவர்கள் அத்தனைபேரின் நாக்கும் சுத்தம்

இல்லை கொடுத்த வாக்கைகாக்கும் மன நிலையும்
இல்லை எப்போதும் வாக்கு மாறும் நாக்கே

இவர்கள் சுமக்கும் உறுப்பு என்பதில் சந்தேகம்
இல்லை இல்லை இவைதான் உண்மை.

No comments:

Post a Comment