Monday 7 March 2016

அண்ணாவின் அன்பில் உருகிய தங்கை

அண்ணா  அணணா  நீ 
என்  அண்ணா  இல்ல
அன்பே  நீதான் என்
தந்தை போல.  (அண்ணா)

கண்ணே என்று நீ
என் கன்னம் கிள்ள
பொய்யான அழுகைக்குள்
நான் புதைய    துள்ளி துள்ளி
நீ என்னிடம் வேடிக்கை காட்டியதை
நான் சொல்லிச்  சொல்லிப் புகழவா
இல்லை சொல்லிச் சொல்லி அழவா
(அண்ணா)

தாலாட்டுப் பாட அன்னையில்லை
தோள் மீது தூக்க தந்தையில்லை
என்ற ஏக்கம் வந்ததேயில்லை
அண்ணா உன் ஒரு  உருவத்திலே
நான் இரு உள்ளம் கண்டதனாலே
(அண்ணா)

மங்கையாகப் போன போது
கெங்கைக்குள் மலராக
என்னைக் காத்த அண்ணா
உன் அங்கத்தில் குறை கண்ட
பின்னே தங்கை நான் விடுவேனோ
அண்ணா  (அண்ணா)

துடுப்பாக நீ இருந்து
படகாக என் வாழ்க்கையைக்
கரை சேர்க்க பல துன்பங்கள்
கண்ட அண்ணா இன்பத்தை நீ
கண்டதேயில்லையே என்பதை
நான் மறவேனோ அண்ணா
(அண்ணா)

என் பிள்ளை வரவேண்டும்
உன் வடிவில் நான் தாலாட்டிலே
கூறவேண்டும் உன் கதையை
அவன் பிஞ்சி உள்ளத்திலே
பஞ்சி இதயத்திலே பதித்துவிட
வேண்டும் உன் நினைவும்
(அண்ணா)

துடிப்பான காலத்தில்
எனக்காக பல துன்பங்களை
நீ வடித்துப் போட்டாய் துவண்டு
விடும் இக்காலத்தில் நான்
விடுவேனோ அண்ணா சொந்தம்
என்று நீ  வரவேண்டாம் என்
சொத்து நீ என்று நான் எடுத்துக்
கொள்வேன் அண்ணா
(அண்ணா)

சில ஆண்டு உன்னை
விட்டுச் சென்ற பின்னும்
சில நொடி கூட நிம்மதி
கண்டதில்லை இனி என்
வீடு உன் சொர்க்கம் நான்
உன் பக்கம் உனக்கு வேண்டாம்
ஏக்கம்  அண்ணா..!!

அண்ணா  அண்ணா நீ
என் அண்ணா இல்ல
அன்பே நீதான் என்
தந்தைபோல்..அண்ணா
அண்ணாஅண்ணா...ஆ  ஆ

   

No comments:

Post a Comment