Friday 25 March 2016

மாட்டி விட்டேன் காதலிலே

ஓடி ஓடி ஒழிந்தேன் எப்படி
மாட்டினேன் உன் கைகளிலே
உலகம் போல் உருண்டேன்
எப்படி ஒட்டிக் கொண்டேன்
உன்  இதயத்திலே ஒளி  கொடுக்கும்
நானே எப்படி  மயங்கி நின்றேன்
உன்  விழி ஒளியினிலே
சரியாகத்  தானே நான் பயணம்
செய்தேன் எப்படி  பாதை தவறி
உன் பாதம் அடைந்தேன்.

யாரை நான் கேட்பேன்  ஓ
இவை தான் காதல் பாதை
என்பதை என் கண் சுட்டிக் காட்ட
மறந்து விட்டதால் நான் மாட்டி
விட்டேனா,

இதற்க்காகத்தான் சொல்லுவதோ
காதலுக்கு கண் இல்லை என்று
அட. பாவி கண்ணே இந்த அப்பாவியை
மயங்க வைத்து  மாட்டி விட்டாயே?

காதல் வலையில்  இப்போது நான் 
அவள் கையில் இப்போது நான்
அவள் விழியில் இப்போது நான் 
அவள் இதயத்தில் இப்போது நான்
அவள் மூச்சோடு இப்போது  நான் 
அவள் உணர்வோடு  இப்போது நான்
அவள் உணர்ச்சியின் சூட்டிலே
இப்போது நான் 

அவள் ஆசைகளில் இப்போது நான்
இப்படி எல்லா விதத்திலும்  அவள்
என்னை அடைத்து  விட்டாளே இதய
அறையினிலே அவளிடம் இருந்து நான்
எப்படி விடுதலை  அடைவேன் என் மனமே?
என் கண் என்னை மாட்டி விட்டு வேடிக்கை
பார்க்கின்றதே  இறைவா
   
             

No comments:

Post a Comment