Friday 25 March 2016

ஈழம்


தேன்பாடும் மட்டுமா நகரில்
தெகட்டாத தேன் தமிழில்
தெள்ளத் தெளிவாக புரியும் படியே
உரையாடல்.

மக்கள் உள்ளக் குமுறல்களை புகட்டும் செவியில்.
கள்ளம் கவடம் இல்லாமல் மழலைகள் துள்ளியே.
விளையாடும் உப்பு மணலும்  கண்ணைக் கவர்ந்து
இழுக்கும் முதியோர்களையும் கடல்   இசைக்கு
தலை அசைக்கும் தென்னை
மரங்களும்.

சர சர என்று நில்லாமல் வளைந்தே ஆடும்.
ஓங்கி வளர்ந்த சவுக்கு மரங்களும்.
தரையில் மோதி ஓடும் அலைகளும்.
ஏதோ சொல்ல வந்து வந்து போவது போல்.
நம்மை ரசிக்க வைக்கும்.

நிரை போட்டு காட்சி தரும் தரை வீடுகளும்.
உயர்ந்து நிற்கும்  மாடி வீடுகளும்.
புது கலைகளுடன் சாலை ஓரக் கடைகளும்.
பள்ளம் குழி இல்லாமல் சுகமான பயணத்தைக்
கொடுக்கும் பாதைகளும்.
வியற்க வைக்கின்றது புது மாற்றம் கண்டு
பிறமிக்க வைக்கின்றது.

ஆங்காங்கே  மணல் மூட்டை இடை இடையே
சோதனைச் சாவடி.
சளிப்போடு வாகனப் பயணம்
அது அப்போ.

இன்றோ சாலை ஓரங்களில் சரம் சரமாகப்
பூக்கும் வண்ணமலர் செடிகள்.
மறைந்த பெரியோர்  சிலரின்
அடையாளச் சின்னமாக  சிலைகளும்.

கலை இழந்த ஈழம் கூரை இழந்த வீடும் கவலை
சுமந்த மக்களும் இத்தனையும்
அகன்று விட்டது.

அகம் மகிழ்ந்து உள்ளம் பூரித்து இன்பமாக
வாழ ஒரு நற்காலம் வந்து விட்டது.
மலையில் மோதி விளையாடி
செடியை அணைத்து உறவாடி
பல மடுக்களுக்கு தானம்  கொடுத்து
புல்தரைக்கு முத்தம் கொடுக்க ஓடி வரும்
அருவியின் அழகை ரசிக்க வேண்டுமா?

நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்டு
மாங்காய் வடிவில் உருவெடுத்து இருக்கும்
எங்கள் ஈழமண்ணில் கால் பதித்துப் பாருங்கள்
திரும்ப மனம் இன்றி பட்டா போட்டு விடும்
உங்கள் பாதங்கள் .

பச்சை நிலம் போல் காட்சி தரும்
மழை நீரை நம்பி முளையிட்டு
கற்பம் தரித்து கொத்துக் கொத்தாக
நெற்கதிர்களை சுமந்து தலை குணிந்த
வண்ணம் அறுபடைக்குக்  காத்திருக்கும்
வேளாண்மையின் அழகை ரசிக்க வேண்டுமா
நிந்த ஊரில் நின்று பாருங்கள் .

பலர் நாவிற்கு சுவை கொடுக்கும் தேனீரின்
பிறப்பிடமான கண்டி நகரத்துக்கு சென்று
பாருங்கள்
கிள்ளி தளை எடுக்கும் கூழி தொழிலாளியின்
சிரமத்தை உணர்வீர்கள் பச்சை செடியின்
அழகிலே உங்கள் உள்ளமும் கொள்ளை
போய்விடும் .

பல இயற்கை அழகை வரமாக இறைவன்
கொடுத்தமையால்  தான் செயற்கை அழிவையும்
ஈழம் வரமாகப் பெற்றதோ நான் அறியேன்

   

No comments:

Post a Comment