Monday 7 March 2016

சிவராத்திரி

சிவராத்திரி சுபராத்திரி
சிவனுக்கு இவை உகந்தராத்திரி
யாத்திரை போன குருக்கல்
நித்திரை  விழித்த ராத்திரி.

இவை சிவனுக்கு உரியவை
என்று சிவ பக்தர்கள் நினைத்தராத்திரி
புலிக்குப் பயந்து பூசாரி  மரம் ஏறிய ராத்திரி
விழிக்க வேண்டும் விழுந்து விடாமல் நாம்
என்று எண்ணிய படியே வில்வம்  இலைகளை
மரத்தில் அமர்ந்த படியே வீசிய ராத்திரி.

இவைதான் புராணங்கள்
கூறும் கதையானது சிவராத்திரி
வந்தவை எப்படி என்று இவை
தான் உண்மை என்றால்  சிவனுக்கு
சாமத்துக்கு சாமம் பூஜை  நமஸ்காரம்
செய்தவர் யார் அந்த ராத்திரிக்கு
நீங்கள் இன்று வரும் ராத்திரியில்
அதைக் கையாலாவே பக்தர்களே.

எது எதுக்கு வாழ்த்துரைப்பது
என்று ஒரு விபஸ்தையே இல்லாமல்
போய் விட்டது முகநூலிலே பயத்தில்
நடுங்கிக் கொண்டு இருந்த பூசாரி
யாரிடம் கூறினார் சிவராத்திரி வாழ்த்து.

நான் நாத்திகன் இல்லை இறை
நம்பிக்கை  நிறைந்தவள் தான்
போலி நடை முறைகளைக் கண்டால்
கேலி கிண்டல் பண்ணி சிரிப்போரில்
நானும் ஒருத்தியே.

ஆகாரம் இன்றி உறக்கம் இன்றி
நீர் இன்றி நிலத்தின் மேல்
புலியைக் கண்டு நடுக்கத்தோடு
உறக்கம் விழித்தான் குருக்கல் மரத்தின் மேல்
அமர்ந்த படியே  அவைதான் சிவராத்திரி.

புரண்டு புரண்டு மெத்தை மேல்
உறக்கம் போடப்போகும் நீ
ஏன் போடுகின்றாய் மனிதா
சிவராத்திரி வாழ்த்து  எல்லாமே
உமக்கு  விளையாட்டாகப் போச்சு
விளக்கம் கேட்டால் முழிப்பாய் திருட்டு
முழியடா  உனக்கு இவை  தேவையோடா .

    

No comments:

Post a Comment