Friday 25 March 2016

அறியாமலே ஒட்டிக் கொள்ளும் கெடுதல்கள்


வளர்ந்த மரத்திலே
கொத்தோடு  இலையின்
நடுவிலே மலர்ந்த மலருடன்
பிறந்த கனியின் மறைவிலே
பதுங்கி இருக்கும்  விஷப் புளு..!

அது இலை மறை காயாக
கனியைக் காட்டி கண் வித்தை
புரிந்து மெதுவாக ஊர்ந்து ஏறி
விடுகின்றது நம் கரங்களிலே....!

அவசரக் கோலாறு விழித் திரையை
மறைக்க புளுவுக்கு துணையாகின்றது
நம் கரம்......\

இது போன்றுதான் இதழில்
புன்னகைத்து உள்ளத்தில்
விஷத்தை சேமித்து உறவாடும்
மனிதனை அடையாளம் காண
நாம் படும் பாட்டுக்கு விடை
தேட முடியவில்லை........\

தடையாவது நம் பாதையே
விடை கிடைப்பது கடிணமே
நம் முன்னே போற்றுவான்
பின்னாடி சென்று தூற்றுவான்...\

கட்டி அணைத்து தழுவி பாசம்
பொழிவான்  விட்டு சென்று
சில நொடிக்குள் கண்ட படி
உளறுவான்........\

கிட்ட வந்ததும் வணங்குவான்
எட்டி நின்றதுமே திட்டுவான்
பணம்  பதவி  பகட்டு மனிதன்
புத்தியை உருட்டியே விடுகின்றது...\

தட்டித் தட்டி விடுகின்றான் அவனின்
ஐந்தறிவு மிருகக் குணத்தை
அவனது ஆறாவது அறிவை
ஆறுதலாக தூங்கங் கட்டளை
இட்டு பூட்டியே விடுகின்றான்
அறையை..........\

பூட்டை உடைத்து வெளியாக
முடியாமலே மனித நேயமும்
மடிந்தே போகின்றது
அவனோ
மனித உருவில் பேசும் மிருகமாக
உலாவுகிறான் உலகில்......\

அவன் அறிவு என்னும் நீரை
இறைத்து சுத்தம் செய்ய மறந்தான்
ஊற்று பிடித்து வறண்டு போகின்றது
அவன் புத்தி.......\

புத்தி இல்லா மனிதனிடம் பத்தி
இருந்து என்ன பயன் ஏற்றம்
இறக்கம் வெற்றி தோல்வி நமக்கு
ஒரு படிப்பினை என்று நினைத்து
ஏற்று நடந்தால் பொறாமைக்கு
இல்லை பிறப்பு  நிரந்தரமாக
கிடைத்துவிடும் பெரும் சிறப்பு....\

No comments:

Post a Comment