Friday 25 March 2016

காத்திருக்கேன்

நான் என்ன சொல்வேன்
எப்படிச்சொல்வேன்
எதைக் கொண்டு உதாரணப்
படுத்தி உரைப்பேன் என் உள்ளே
அவன்  போடும்  கூத்தை...........\

நிறை குடம் போல் தழும்பாத
என் எண்ணத்தை தட்டி விட்டு
கொட்டி விட்டான் சிதறியே
போனது என் சிந்தனை..........\

மஞ்சலோடு சுண்ணாம்பைத்
தொட்டு வைத்ததுமே  சென்
நிற வண்ணம் கொடுப்பது
போல்  கொஞ்சம் அவன் நினைவை
வெச்சேன் என் நெஞ்சினிலே பல பல
வண்ணக் கனவுகள் என் உள்ளே.........\

கொஞ்சும் தமிழில் நான் கெஞ்சக்
கெஞ்ச அவன் மிஞ்சியே
போகின்றான்  வஞ்சி என்
கெஞ்சலிலே அத்தனை இன்பமோ
நான் அறியாப் புதிர்ரானதே.........\

நீரை நாடி வேர் ஓட மண்ணை
நம்பி மரம் இருப்பது போல்
உன்னை நாடி என் ஆசை ஓட
உன்  மீது நம்பிக்கை வைத்து
நான் இருப்பேனடா..........\ா

    

No comments:

Post a Comment