Monday 7 March 2016

தேடி வந்த சிட்டுக் குருவி


சிங்காரச் சீமையிலே
சில்லென தீண்டும்
கொன்றைக் காற்று
வீசும் சோலையிலே......\

அடந்த மா மரத்தினிலே
சிறு கூண்டினிலே வளரும்
செல்லப் பிள்ளை நான்
என்  பெயரோ சிட்டுக் குருவி
சத்தமிட்டுத் திரியும்
பெட்டைக் குருவி......\

கட்டுடம்புக் காரன்
கட்டையான மீசைக்காரன்
எங்க நந்த வனத்து மகாராணி
பெற்று எடுத்த ராஜகுமாரன்.......\

ஜோரான உடை கம்பீரமான நடை
வில் ஏந்தி போர் புரிந்து வெற்றியோடு
கோட்டைக்குத் திரும்பும் மாவீரன்........\

கன்னியரிடம் கன்னியமிக்கவும்
முதியோர் கண்ணீர் கண்டதும்
கரம் கொண்டு துடைக்கவும்
ஏழை எளியோருக்கு வாரி  வாரிக்
கொடுத்து கொடை வள்ளனான
கருணனிடம் வரம் பெற்ற எங்க
சின்ன மன்னன்..........\

என் உயிர் நண்பன்
என்றோ ஒரு தடவை  அவன்  உன்
கமல முகம் கண்டு விட்டான்
அது எப்போது என்று நான்
அறியேன்...........\

உளறி விட்டான் உன்னைப் பற்றி
அவன் கள்ளம் இல்லா கண்களுக்குள்
காதல் தீபம் ஒளி ஏற்றி விட்டது நானும்
சுடர் கண்டேன்.........\

உன் கழுத்தில் மாலை மாற்ற
அவன் கரங்கள் துடிக்கக்
கண்டேன்  உன் தமிழ் மொழி
கேட்க அவன் தவிப்பது
அறிந்தேன்............\

அவனிடம் சொல்லாம்
கொள்ளாமல் சிறு இறக்கையைத்
தட்டித் தட்டி  பல கிளைகளிலே அமர்ந்து
தாணியங்களைக் கண்டும்
உண்ணாமலே ஓடி வந்தேன்
உன்னைக் காண வந்தேன்........\

கொண்டு வந்த செய்தியைக்
கொட்டி விட்டேன் உன் காதில்
எட்டி நின்று தனிமையிலே
இனிமைக் கீதம் கிறுக்காமல்
உன் சிறு விரல் நடுவே எழுத்தாணி
கொண்டு இறுக்கப் பிடித்து  செறக்க
ஒரு மடல் கொடு சின்னவளே........\

நான் இறக்கை விரித்துப்  பறக்கேன்
என் நண்பனிடம் சேர்க்கேன் அவன்
சிரிப்பைக் கண்டு ரசிக்கேன் ரகசியமாக
உன்  கதையை உரைக்கேன்...........\

வெட்கம் காட்டியது போதும்
அபிநய சரஸ் வதி போல்
நடிக்காதே இது  நாடோடிமன்னன்
இல்லை நாட்டை  அவன் ஆளும் மன்னனடி
சின்னவளே கன்னம் சிவந்தவளே......\

     

No comments:

Post a Comment