Friday 4 March 2016

ஏழையின் ஆசை

ஒரு ஏக்கர் நிலம் வச்சி
ஓராயிரம் விதை விதைச்சி
கோணிப்பையினில் வாரிப்
போட்டு  அன்றாடம் வயிறு
காயாமல் கஞ்சி அமைதியான
வாழ்கையாகப் போச்சி.

நீல வானம் கறுக்கவில்லை
நிரந்தரமாக மழை கிடைக்கவில்லை
வறண்ட நிலம் கண்டு மிரண்டு
நின்றது கண்ணிரெண்டும்
விரத்தி அடைந்த மகன் முடிவு
எடுத்தான் பங்கு போட்டு நிலத்தை
விற்றுவிடவே.

மறுத்துப் பேசியும் எடுபடவில்லை
கருத்துக்கள் பரிமாரி காரசாரமாகப்
போய் இருவருக்கும் இடையினிலே
விவாத மேடை அரங்கேற்றம்  கொண்டது.

இறைவன் விட்ட வழி என்று
இடத்தை விற்று விடு என உரைத்தேன்
எடுத்துச் சென்றான் பத்திரத்தை
கட்டோடடு பணத்தைக் கொண்டு
வைத்தான் பக்கத்திலே.

பத்து நாட்களில் விமானம்
ஏறப்போகின்றேன் பது மாதத்திலே
சில ஏக்கர்  நிலம் வாங்கிப் போடப்
போகின்றேன் ஆசை வார்த்தைகளைப்
போட்டு தாய் மனதை பூட்டி விட்டான்.

அம்மா சும்மா இருப்பாளோ
பாடுகின்றாள் புகழாரம் போடுகிறாள்
பக்க வார்த்தியம் நானும் தலை
அசைத்து விட்டேன்.

மகனின் கற்பனை வாழ்வு சிங்கப்பூர்
வரை கொண்டு விட்டது சிங்கை நாடு
பறந்த மகனிடம் இருந்து சில
மாதங்களுடன் காகித வரவும் நிறுத்தம்
கண்டது.

இன்று வந்த செய்தி ஈயம்
போல் காதில் நுழைந்தது
திருட்டுப் பட்டத்துடன் உன்
மகன் சிறையினிலே கேட்ட
நொடியே என் மனைவியின்
உயிரை தின்று விட்டது 
என்னைத் தனி மரமாக்கி
கொண்டு நிறுத்தி விட்டது.

    

No comments:

Post a Comment