Wednesday 9 March 2016

என் இறுமாப்பு மன்னனே

என் இரத்தம் சூடு  ஏற
நரம்பு சுளுக்கு  எடுத்த படியே
உன் நினைவெல்லாம் அழைத்து
நிறுத்தி காவியம்  வடித்தேன்! அதை
மனம் திறந்து படித்து வாய் திறந்து
பாராட்டு வரி உரைப்பாய் என்று
தோழியரிடம் பந்தயமும் போட்டேன் .

உன் கள்ள விழிப் பார்வையை
சொல்லிச் சொல்லியே நான் 
கவிதையாக்கினேன்!  அதை
படித்துச்  சுவைத்து என்னை
பிடிக்கும்  என்று கூறுவாய் என்றே
நம்பி  நின்றேன்.

வான் நிலாவை அழைத்து நீ வந்து
விடும் இரவில் விடி விளக்காய்
நிறுத்த சம்மதம் கேட்டு மடல்
எழுதினேன் அது உன் பெயரைக்
கேட்டதுமே அதன் வட்ட முகம் வெட்கம்
கொண்டது!  இதை நீ நம்புவாய் என்று
என்னுகின்றேன்.

உன் அடந்த புருவத்தை படிப் படியாக
பாடல் போல் பல வரிகள் கிறுக்கினேன்!
அதை நீ பாடி ரசித்து அக்கரை இருந்து
இக்கரை வந்து சேர்வாய் என்று எதிர்
பார்க்கின்றேன்.

உள்ளம் கொண்ட ஆசைகளை
அமுதம் போல் கவிதை சமைத்தேன்
உப்பு  காரம் சேர்ந்தது போல் நீயும்
நெற்றித் திலகமிட்டு எனை சேர்ந்து
விடுவாய் என்று நம்பி இருந்தேன்.

கவிதைகளாலே எத்தனையோ
தூது விட்டேன் உன்னை கொண்டு
வரும் படி உன் இருண்ட தாடிக்குள்
நிறைந்தே இருக்கின்றதாம் இறுமாப்பு
வீம்பு பிடிக்கும்  உன்னிடம் வேண்டாமே
வம்பு என்று வெறும் கையோடு வந்து
விடுகின்றனர் கவிதைகள் என்றும்
போல்  இன்றும்.

        

No comments:

Post a Comment