Monday, 29 July 2024

கிராமியக் கவிதை

ஓரவிழிப் பார்வையில்
ஓதுவது என்னவோ.?
*************************
ஓரவிழிப் பார்வையில்
ஓதுவது என்னவோ ..?
ஓரமாய் காதிலே
ஓசையின்றி அழைக்குதோ..?
ஓடும் எண்ணங்களை 
ஓயாமல் உரைத்திடவோ..?
ஓடிவருகையிலே கொலுசும்
ஓசைஒலி கொடுத்திடாதோ.?

ஓடாமல் பாடாமல் 
ஓரிடத்து விழிகளிரண்டும்/
ஓரங்க நாடகம் காட்டுதே
ஓய்வுஒழிவு இல்லாமல் /
ஓரமாக வந்தாலே 
ஓசியிலே வாசமும் வீசுதே /

ஓர்ப்படி போயித்து
ஓம்சக்தி காதல்பக்தியடி/
ஓயாதலையாய் உள்ளூரம் 
ஓங்கியடிக்கிறது ஆசைகளடி/
ஓய்வூதியம் கிடைத்திடுமா
ஓரளவாயினும் உனது அழகிற்குமடி
ஓங்கார ஒலியாக சொல்லடி ரதியே/

ஆர் எஸ் கலா

Wednesday, 24 July 2024

தலைப்பு( #கி) 
*****************
       (1)

கிழக்கு வெளித்திட 
கிளைகளிலே ஒளிபட//
கிரங்கிபோனேன சோடிக்
கிளிகள் இரண்டும்//
கிராமம் விட்டு 
கிஞ்சிதமின்றி பறந்ததே//

            (2)

கிட்டி விளையாடிடும் 
கிட்டுவின் கரங்களிலே//
கிண்ணம் ஒன்று 
கிடைத்தது கேடயமாய்//
கிள்ளிப் பார்த்தவனைக்
கிறுக்கனாக்கியது  கனவு//

         (3)

கிண்ணம்பழக் கன்னமடி 
கிட்டத்தான் வாருமடி///
கிலுகிலுப்பை மூட்டாதேடி
கிண்ணாரக்காரனை உசுப்பாதேடி///
கிருஷ்ணனாய் மாற்றாதேடி
கிராக்கிகாரனாய்ப் போவேனடி///
கிச்சடி சம்பா பல்லுக்காரியே கிரிமினலாயிடுவேனடி//

ஆர் எஸ் கலா
அழகோவியம் உயிரானதே
**********************************
அழகோவியம் உயிரானதே
அகல்விளக்கு ஒளியானதே.
அந்தோணிப் பொண்ணு
அந்தணனை மறந்ததேனோ.

அர்ச்சனாதியே பேரழகி
அர்ச்சகரோட இளமயிலே.
அங்கமெல்லாம் தங்கமோடி
அலங்கரித்தல் தேவையில்லையடி.

அன்னபூரணியே என்னையாளுகிறாயே 
அர்த்தமுள்ள வாழ்வாக்கிடவேனுமடி.
அஞ்சுவதும் கெஞ்சுவதும் 
அஞ்சலையே காதலோசையடி.

அய்யய்யோ சிலையென
அசையாமலே நின்றாயேனடி.
அந்த ஒருநொடியே 
அனைந்தும் மறந்தேனடி.
அணைத்திடவே நினைத்தேனடி
அதற்காகவே அர்பணிப்பாவேனடி.

ஆர் எஸ் கலா

Tuesday, 23 July 2024

குறுங்கவி

அன்றொரு நாள் 
இதே நிலவில்.
**********************

#அன்றொரு நாள் 
இதே நிலவில்/

#அன்பெனும் வார்த்தையில் 
அகிலமும் மறந்து/

#அல்லியாய் அவளும் 
பனியாய் நானும்/

#அந்தி மயங்கிய
 பின்னும் பந்தியிலே/

#அக்கினியின் அகோரத்தில் 
வாட்டிய உணவோடு /

#அன்றைய நினைவுகளோ
இன்றளவும் நெஞ்சோடு./

ஆர் எஸ் கலா

புதுக்கவிதை

ஆரணங்கே
***;***********--***
ஆரணங்கே கதை 
கூறக் கேளும் /
கேட்கையிலே உமக்குள் 
எழும் ஞானம் /
ஞானசத்தி கொண்டவள் 
அன்னபூரணியாய் 
ஆர்ப்பரிப்பானவள்/
ஆர்ப்பரிப்பால் ஊருக்கே 
அவளோ அன்னையானாள் /

அன்னை வடிவிலும் 
லட்சுமி உருவிலும்/
உருவமே அருவுமாகி 
நாட்டையே  ஆளுகின்றாள்/
ஆளுமை கொண்டு
நேர்மையில்  வென்றாள் /
வென்று பெற்றாள்
மக்களை  ஆரணங்கே/

ஆர் எஸ் கலா

23-7-24

உள்ளங்கவர் ஓவியமே
*************************
உள்ளங்கவர் ஓவியமே
இளங்காலை நாயகியே/
பனிப்பார்வையைப் 
படரவிட்டேன்
துளிக்குளிர் ஏற்றுதடி/
உனது கருவிழிகளில் 
மின்னிடும் காந்தொளி./

உனக்காகக் கவிதைகள் 
வடித்திடவே தமிழ்மொழி /
எடுத்து தனிக்கை 
செய்திடவா பெண்ணே/

செந்தமிழ் கொண்டு 
சந்தனக் கன்னம் /
புகழ்ந்து பாக்கள் 
வரைந்திட முயற்சிக்கவா/
தேன்சுவைச் சொல்லால்
இதழ்களின் 
அழகையுரைத்திடவா /

எதைக் கொண்டு 
உன்னை வரைந்திடுவேன்/
எனைத் தந்து இதயத்திலே
அச்சிடுகிறேன்/

ஓரளவு ஓசையிலே
ஓரப்பார்ரைக்கு 
இசையமைப்பேனடி/

பிடியாது என உரைக்காதேடி
மடிந்திடுவேன் நானுமடி /
கரம் பிடித்தபின்னே
தடியும் நானாவேனடி/
ஆயுள் நீளும் வரையும் 
தோளாயிருப்பேனடி /

ஆர் எஸ் கலா

Sunday, 21 July 2024

கிராமியக் கவிதை

பவளமல்லிப் பூச்சரமே
*************************

மாமன் தோள் சாயவரும் 
பவளமல்லிப் பூச்சரமே/
விழிகளுக்குள் மலர்ந்தாயே 
நீயும் தனியே/
வாழ்வோடு இணையாகிடும் 
வாழைக் கனியே/

தாரமாய் ஆக்கிடுவேன் 
விரைந்தே கிளியே/
சொப்பனமெல்லாம் 
உன்னைச் சுற்றியே ரதியே/
சொற்பமாய் வீசிக்கோடி 
புன்னகையை மதியே/

துள்ளிக்காதே கிள்ளிக்கும் 
கொலுசுமடி தேவதையே/
முந்தானையோடு முடிஞ்சவளே சேர்ந்துக்கிட்டால் நிம்மதியே/
தூக்கணாங்குருவிக் 
கொண்டைக்காரியே
தூக்கிக்கணுமடி வாரியே/

அனுக்களோடு விளையாடுவதோ
நித்தமும்  உனதுமுகமே/
சிணுங்காதே செம்பகமே
அணுங்குது என்மனமே/
மனுவொன்று கொடுக்கிறேன் 
மறுத்திடாதே நந்தவனமே/

Thursday, 18 July 2024

விவாத மேடை

வணக்கம் 
நடுவர்அய்யா அவர்களுக்கு 🙏

அமைதி கொடுப்பது 
ஆன்மிகப் பயணம் 
மகிழ்ச்சி கொடுப்பவை அல்ல.

ஆகையால் மகிழ்ச்சி கொடுப்பவை  உல்லாசப் பயணமே. 
ஆன்மிகம் என்பதை அறியாத 
வயதில் உள்ளோரையும் 
அழைத்துச்  செல்கையில் 
வாழ்வின் இன்பம் பெருகிடும் .
புரிதல் கிடைக்கும். 
உற்றார் உறவினரோடு .
ஒரு சந்திப்பாகப் அமைந்திடும் .
எப்போதும் வேலை வேலை 
என்று வீட்டோடு இருக்கும் .
இல்லாளுக்கு ஒரு மாற்றமான 
மனநிலை கொடுக்கும் .

 அறியாதவைகளையும் 
தெரியாத காட்சிகளையும் .
காண்கையில் மனமும் 
குடும்பமும் மகிழ்ச்சி அடையும் .
முன்பே அறியப் பட்டு 
காண வில்லை என்ற ஏக்கம் 
தொலையும் .உண்மையைச்
 சொல்ல வேணுமாயின் .
மாதம் அல்லா விட்டாலும் .
ஆண்டுல் ஒரு முறையாவது 
மனைவி மக்களோடு 
உல்லாசப் பயணம் செல்வதே 
சிறந்த வழியாகிடும்.

.பக்தியோடு அருகே இருக்கும் 
ஆலயம் கூட சென்று வரலாம். அவசரத்தோடும் அதை 
ஓடிப் போய் செய்து முடிக்கலாம்.
ஆனால் உல்லாசப் பயணம் .
திட்டம் போட்டு பணம் சேர்த்து .
நேரம் ஒதுக்கி பயணிப்பவை .
இது எல்லோருக்கும் கிடைத்திடாத
வாய்ப்புகள்.  அதை நாமே
உருவாக்கிக் கொள்வது  
என் கருத்து உல்லாசப் பயணமே 
மகிழ்ச்சி அளிப்பவை எனக் கூறி 
விவாதத்தை நிறைவு செய்கின்றேன்.

            நன்றி 🙏

ஆர் எஸ் கலா

புண்ணியம்

புண்ணியம்
*****-*-----***
பசியைப் போக்கிடு /
இரத்தம் பகிர்ந்துடு/
கல்விக்கு உதவிடு/
உனைக் காத்திடும் .

புண்ணியம்/

ஆர் எஸ் கலா

பாட்டு மாற்றும் போட்டி

பாடல் மாற்றும் போட்டி
*****************************

பாசமில்லார் யாராயினும் 
நமக்குரியவர்.
பாசமுடையார் எப்போதும் 
உரிமையானவர் .
அடுத்தவருக்கு புரிவதால் 
கூடாதென முயல்வது
 உன்னை நோகடிக்க நேரம் வரும். 

பல்லவி 
***
ஒன்றே மனிதம் எனக் கூறுவோம்.
ஒருவனே ஆழ்பவனென காட்டுவோம்.

ஈரமான மனமாக பிரியத்தின் 
உருவமாக.
என்றும் துணையாக இருக்கவே 
என்று பிராத்திப்போம்.

சரணம் (1)

மனிதனிலே மிருகத்தையும் 
பார்க்கலாம்.
ஆமா மிருகத்திலே மனிதமும் 
வாழலாம்.

நல்ல அரசாட்சியே வாழ்வின் 
மகிழ்ச்சியாம்.
எப்போதும்  குறையாது புகழ் 
வீச்சுதான் .

பல்லவி
****
.ஒன்றே மனிதம் எனக் கூறுவோம்.
ஒருவனே ஆழ்பவனென காட்டுவோம்

சரணம் (2)
******

அநியாமென்ற கூட்டுக்கு 
விரைப் பாதையாம்.
எப்போதும் புண்ணிவான் 
பயணத்துக்கு ஒரு பாதையாம்.
இப் பாதைதான் நம் பாதை 
என எல்லோரும் 
நியாயம் தவறாமல்  .
வாழ்வோடு ஓடுவோம்/

பல்லவி
*******
ஒன்றே மனிதம் எனக் 
கூறுவோம்.
ஒருவனே ஆழ்பவனென 
காட்டுவோம்.

சரணம் (3)

உள்ளக் கடவுளாக நமது அறிஞரே உதயமானார்.
இங்கே எப்போதும் உலாவிடும்
நன்மை ஒளி  பரப்பினார்.
உள்ளக் கடவுள் நமது அறிஞரே உதயமானார்.
இங்கே எப்போதும் உலாவிடும்
நன்மை ஒளி  பரப்பினார்.

நாமும் நன்மை ஒளி பார்க்கலாம்.
உலாவிடும்  பாதை ஓடலாம்.
வருங் காலம்  உனக்காகவும்  
அரேங்கேற்ற மாகலாம்.

பல்லவி
*****
ஒன்றே மனிதம் எனக் கூறுவோம்.
ஒருவனே ஆழ்பவனென காட்டுவோம்.

ஆர் எஸ் கலா

ஏதோ முயற்சித்தேன் 😊

Wednesday, 17 July 2024

வேதனையின் வெளிப்பாடு

வேதனையின் வெளிப்பாடு
*****************-****************

காட்டை அழித்து நாட்டை 
உருவாக்கி.
வேட்டை ஆடி மிருகத்தை 
இரையாக்கி.
கூட்டை எரித்து பறவையை 
மறைவாக்கி.
வீட்டைக் கட்டி வாழும் மானிடனே.

உணராமல் போனாயே 
உலகழிவை  ஏனடா.
மழையின்றி பூமியும் வறண்டு 
போகிறது 
வேரின்றி நிலமும் அதிர்ச்சி 
கொடுக்கிறதே
நோக்கையிலே வேதனையின் 
வெளிப்பாடு  விழிநீராகிறதே.

ஆர் எஸ் கலா

திறமைகளே விழித்தெழு

திறமைகளே 
விழித்தெழு.
***************
அடங்கியதும் 
அடக்கியதும் 
போதும் மனமே.

அகிலமெங்கும் 
என் புகழ் பரப்பிடவே .
அச்சம் தவித்து 
ஊக்கம் விதைத்திடு.

அடுக்கடுக்காய்த்
திறமையும்
வேகிறது 
அடுக்களையிலே .

அதற்கு 
வெளிச்சமிடப் 
போகிறேன் 
உலகினிலே.

அடியெடுத்து 
வைத்திடலாம்
திறமைகளே 
விழித்தெழு.

அடுத்தவை 
என்ன 
தடைத்திரை 
கிழித்தெழு.

உள்ளத்திற்கு 
அள்ளிக் 
கொடுத்திடுவேன் 
பெருமைகளை.

 ஆர் எஸ் கலா
சுகந்தங்கள் தானே
***************************
பூவோடு பூவொன்று பேசுகின்றதே பாருங்களேன் /
பூரிப்போடு தென்றல்  உலாவுகின்ற 
கதை கேளுங்களேன்/
பூனைக் கண்ணும் மானாய்த் 
துள்ளுகின்றதே./
பூச்சாரம் மழையும் வெட்கத்தோடு போனதே./
பூந்தமல்லி கூந்தலுக்கு ஒத்தரோசா தேடுதே./
பூக்காரியோட மனசும் வாசனை நுகர்கின்றதே./
பூர்த்தியாகவில்லை பேத்தியோட
தீண்டும் விரல்களுக்கும் /
சுகந்தங்கள் தானே தொட்டபடியே 
வட்டமிடுகிறாள்/
இதழ் அசையாமல் இருமலரும் 
மௌனமொழியில்/
எதனைப் பேசுகின்றதோ
நேசிப்பவனை யோசிக்கின்றதோ/

ஆர் எஸ் கலா

முந்தான சேலையாலா முக்காடு போட்டவளே

முந்தானச் சேலையால 
முக்காடு போட்டவளே.
*************************
முந்தானச் சேலையால 
முக்காடு போட்டவளே/
மார்பகம் பட்டதாலோ 
மாமனை மயக்குதடி/

முன்னாடி பாசமடி 
பின்னாடி மோகமடி /
முன்டியடித்துக் கொண்டு 
என்னிடம் மல்லுக்கட்டுதடி/

தொடம்பம் போலே
துடைக்கிறது வெட்கத்தையடி /
எடுப்பான பெண்ணே
மடக்காதே என்னையடி/

கடுப்பாகி கிளம்பி
வந்துடுவா  நாத்தனாரடி /
அப்புறம் என்பாடு 
திண்டாட்டம் போடுமடி /

மூன்றாம் பிறையான 
வதனமும் செவக்கவச்சிடுவா/
குங்கும வண்ண மேனியிலே 
பச்ச குத்திடுவா/

போச்சி போச்சி 
நேரமாச்சி விடுடி மச்சி/
காச்சி மூச்சியென
கத்துவா ஆத்தா பேச்சி/

ஆர் எஸ் கலா

Tuesday, 16 July 2024

ஆதி//மடிமீது
அந்தம்//சுகமே
****************
மடிமீது இடம் 
கொடுத்து மானே.
மனம் விட்டு 
பேசத்தோனும் தானே.
மயங்கி உறங்கிடவும் 
கிரங்கி மகிழ்ந்திடவும்.
மகிழம் பூவாய் 
உனை நினைத்து .
மரகதமே விரல் 
கொண்டு தடவிடுவேன் 
நானே மஞ்சள் பூசிய 
கன்னத்திலே முத்தமிட்டு.
மங்கை உன் 
வதனம் பார்த்தவாறே
மனதால் தாயாகி உனை
சுமப்பதும்  சுகமே.

ஆர் எஸ் கலா
தலைப்பு( #கி) 
*****************
கிழக்கு வெளித்திட 
கிளைகளிலே ஒளிபட.
கிரங்கிபோனேன சோடிக்
கிளிகள் இரண்டும்.
கிராமம் விட்டு 
கிஞ்சிதமின்றி பறந்ததே.

கிட்டி விளையாடிடும் 
கிட்டுவின் கரங்களிலே.
கிண்ணம் ஒன்று 
கிடைத்தது கேடயமாய்.
கிள்ளிப் பார்த்தவனைக்
கிறுக்கனாக்கியது  கனவு.

கிண்ணம்பழக் கன்னமடி 
கிட்டத்தான் வாருமடி.
கிளுகிளுப்பை மூட்டாதேடி
கிண்ணாரக்காரனை உசுப்பாதேடி.
கிருஷ்ணனாய் மாற்றாதேடி
கிராக்கிகாரனாய்ப் போவேனடி.
கிச்சடி சம்பா பல்லுக்காரியே
கில்லியாடிக்காதோடி.

 

ஆர் எஸ் கலா