Tuesday, 23 July 2024

23-7-24

உள்ளங்கவர் ஓவியமே
*************************
உள்ளங்கவர் ஓவியமே
இளங்காலை நாயகியே/
பனிப்பார்வையைப் 
படரவிட்டேன்
துளிக்குளிர் ஏற்றுதடி/
உனது கருவிழிகளில் 
மின்னிடும் காந்தொளி./

உனக்காகக் கவிதைகள் 
வடித்திடவே தமிழ்மொழி /
எடுத்து தனிக்கை 
செய்திடவா பெண்ணே/

செந்தமிழ் கொண்டு 
சந்தனக் கன்னம் /
புகழ்ந்து பாக்கள் 
வரைந்திட முயற்சிக்கவா/
தேன்சுவைச் சொல்லால்
இதழ்களின் 
அழகையுரைத்திடவா /

எதைக் கொண்டு 
உன்னை வரைந்திடுவேன்/
எனைத் தந்து இதயத்திலே
அச்சிடுகிறேன்/

ஓரளவு ஓசையிலே
ஓரப்பார்ரைக்கு 
இசையமைப்பேனடி/

பிடியாது என உரைக்காதேடி
மடிந்திடுவேன் நானுமடி /
கரம் பிடித்தபின்னே
தடியும் நானாவேனடி/
ஆயுள் நீளும் வரையும் 
தோளாயிருப்பேனடி /

ஆர் எஸ் கலா

No comments:

Post a Comment