Sunday, 21 July 2024

கிராமியக் கவிதை

பவளமல்லிப் பூச்சரமே
*************************

மாமன் தோள் சாயவரும் 
பவளமல்லிப் பூச்சரமே/
விழிகளுக்குள் மலர்ந்தாயே 
நீயும் தனியே/
வாழ்வோடு இணையாகிடும் 
வாழைக் கனியே/

தாரமாய் ஆக்கிடுவேன் 
விரைந்தே கிளியே/
சொப்பனமெல்லாம் 
உன்னைச் சுற்றியே ரதியே/
சொற்பமாய் வீசிக்கோடி 
புன்னகையை மதியே/

துள்ளிக்காதே கிள்ளிக்கும் 
கொலுசுமடி தேவதையே/
முந்தானையோடு முடிஞ்சவளே சேர்ந்துக்கிட்டால் நிம்மதியே/
தூக்கணாங்குருவிக் 
கொண்டைக்காரியே
தூக்கிக்கணுமடி வாரியே/

அனுக்களோடு விளையாடுவதோ
நித்தமும்  உனதுமுகமே/
சிணுங்காதே செம்பகமே
அணுங்குது என்மனமே/
மனுவொன்று கொடுக்கிறேன் 
மறுத்திடாதே நந்தவனமே/

No comments:

Post a Comment