வேதனையின் வெளிப்பாடு
*****************-****************
காட்டை அழித்து நாட்டை
உருவாக்கி.
வேட்டை ஆடி மிருகத்தை
இரையாக்கி.
கூட்டை எரித்து பறவையை
மறைவாக்கி.
வீட்டைக் கட்டி வாழும் மானிடனே.
உணராமல் போனாயே
உலகழிவை ஏனடா.
மழையின்றி பூமியும் வறண்டு
போகிறது
வேரின்றி நிலமும் அதிர்ச்சி
கொடுக்கிறதே
நோக்கையிலே வேதனையின்
வெளிப்பாடு விழிநீராகிறதே.
No comments:
Post a Comment