Tuesday, 29 December 2020
Monday, 28 December 2020
Saturday, 26 December 2020
Friday, 25 December 2020
பரவச ஆட்டம்
கொட்டும் மழையும்
கொடும் வெயிலும்.
தட்டும் இடியும்
மிரட்டும் மின்னொளியும்.
பகலவனின் மாற்றம்.
படைப்பவனின் ஒரு தோற்றம்.
வாட்டும் வறட்சியும்
வதைக்கும் குளிர்ச்சியும்.
கலங்கடிக்கும் புயல் போரும்.
எழும் புவி அதிர்ச்சியும்
இயற்கை எடுக்கும் மாற்றம்
இறைவனின் உருமாற்றம்.
உச்சம் தொடும் வன்முறைகள்
மிச்சம் மீதி உள்ள அரக்கர் கூட்டம்.
பஞ்சம் பிளைக்க வந்தவனும்
பதவி கேட்டு நடத்திரான் போராட்டம்.
தஞ்சம் கொள்ள வந்த மனிதன்
நெஞ்சில் அன்பு இல்லை
ஆகோரம் கொண்ட கடவுள்
ஆழியை அழைக்கிரார்
அத்தனையும் அழிக்கிறார்
பாவிகளை அழித்த இன்பத்தில்
போடுகிறார் பரவச ஆட்டம்.
Wednesday, 23 December 2020
Saturday, 5 December 2020
நினைவு கூர்வோம்
யானையை அழித்திட
ஒரு எறும்பு போதும்.
காட்டை அழித்திட
ஒரு இரும்பு போதும்.
வீட்டை எரித்திட
ஒரு தீக்குச்சி போதும்.
மலையைச் செதுக்கிட
ஒரு உளி போதும்.
என்றெல்லாம் பேசுவார்கள்.
அவை அக்காலமொழி.
அத்தனையும் ஓரம் கட்டியது
நட்பு என்னும் பாம்பொன்று.
ஒட்டி உறவாடி
கட்டியது பாடையொன்று.
சரித்திரப்
பெண்ணை சாய்த்துவிட்டது
தரித்திரமொன்று .
வீரப் பெண்ணின் விவேகப்
பேச்சை நிறுத்தி விட்டது.
வீணாய்ப் போனதொன்று.
துப்புக் கெட்ட கூட்டம்
இன்னும் குற்றவாளியைக் கண்டு
பிடித்திட துப்பரபு பண்ணுது
நின்று கொண்டு.
அரசியலையும் தாண்டி
எந்தாளும் நேசிக்கத் தோனும்
அம்மாவின் தன் நம்பிக்கைகளை
அதன் அடிப்படையில் எப்போதும்
நினைவு கூர்ந்திடும் நம் எண்ணம்.
Thursday, 3 December 2020
சொல்லிக் கொள்வேன்
ஒல்லிக் குச்சி
உடலானாலும்.
#என்- உடலில்
தசை எடுத்து
#உன்- உருவச்சிலை
செதுக்கிடுவேன்.
#எனது-
உதிரத்தில்
வண்ணமெடுத்து.
கண்ணிலே
நீர் எடுத்து
கலந்து
வர்ணம்
பூசிடுவேன்.
தூசு தட்டிய
காற்றாய்
#என்- மூச்சுக்
குழாய் கொண்டு
வடித்துச்
சளித்தெடுத்து
#உமது-
உடலுக்குச் சுவாசம்
கொடுத்திடுவேன் .
தூய தமிழை
இனிய தமிழை
இனிதாய்
உரைத்திட
#எனது - நுணி
நாக்கினை அறுத்து
#உன்னில்-
பொருத்திடுவேன்.
இயற்கை அழகை #நீ-
வியர்ப்புடன் நோக்கிட
என்ணிரண்டு
கருவிழிகளையும்
கண்ணம்மா
#உமக்கு -
தானமாய் தந்திடுவேன்.
வெளுப்பு
வெள்ளரியில்
தீட்டிய சாயம் போல்
பெருத்த
பூசணியில்
சிறுத்த அளகு
ஒன்று செய்திடுவேன்.
சங்கு அறுத்து
ஆலம் பாலில்
போட்டெடுத்து
உப்பு நீரில்
அலசி விட்டு
மின்னிடும் பற்களை
அழகிய இதழோடு
இணைத்திடுவேன்.
இன்னும்
சொல்லிக் கொள்வேன்
#உனது-
அங்கத்திற்குப் பங்கம்
விளைந்து விடும்
என்னும் எண்ணத்தில்
விடை பெறுகின்றேன.
Saturday, 28 November 2020
Thursday, 26 November 2020
மாவீரர் தினம்
இதே மாதம் ஈழத்தில்
இரத்தோட்டம் கண்டு
காட்டாறும் ஓடவில்லை.😢
மக்களின் கூக்குரல்
ஓங்கி ஒலித்தமையால்
கடலோசையும் கேட்கவில்லை.😢
மண்ணுக்கும்
பசி எடுக்கவில்லை.
மடிந்த பிணம் கண்டு
பேதலித்தமையால்.😢
புகை மண்டலக்
காட்சியிலே
கருமேகம்
தோன்றவில்லை.😢
குண்டு மழை
ஒளியின் முன்னே
கதிரொளியும்
தென்படவில்லை.😢
பாதி உடலோடு
விழிகளும்
பறி போனதால்.
பாதையும்
அறிய முடியவில்லை.😢
மிதி படிகளாய்ப் போனது
பகைவர்களுக்கு
எத்தனையோ சடலங்கள்.😢
சாவின் விளிம்பிலும்
ஈழத்தின் ஏக்கம்
சடுதியிலும்
குருதியின் தேக்கம்.😢
எம்மை விட்டு
என்று மாறும்
அன்றையத் தாக்கம்.😢
கார்த்திகை என்றாலே
கறுப்பு நாளாகவே
நோக்குகின்றது
ஈழத்து வாழ் கண்கள்😢.
(களிப்புற்று மகிழ்ந்த
தாய்த் தேசத்து
அந்நாள் அரசையும்
நினைவு கூர்வோம்
இன்றைய நாளில்😡)
Tuesday, 17 November 2020
நீயும் பாரடா
வீரத்தின் உரமிட்ட நெஞ்சமடா /
வீரியம் நிறைந்த
பால் அருந்திய தமிழனடா/
விழுந்தாலும் எழுந்து விடுவானடா/
வீழ்ச்சி கண்டு முயற்சி தொலைத்திட மாட்டானடா/
உயிரைத் துச்சமென நினைப்பானடா/
உயிர் கொடுத்து
தமிழை மீட்கும் தோழனடா/ உயிர்த்தெழுந்ததுமே உரிமையைக் கேட்பானடா /
உறங்கும் வேளையிலும் விழியிலே உலாவிடும் வீரக் கனவு தானடா/
அச்சம் விதைக்காத ஈழ மண்னடா/
அழிவது தான் தமிழனுக்கே வெட்கமானதடா/
அடிமை வாழ்வை மீட்கத் துடிப்பவனடா/ அரக்கர்கள் இரத்தம் குடிப்பானடா/
எதிர்ச் சொல் உரைப்பானடா /
எதிரியை எதிர்த்து நிற்பானடா / எரிமலையாய் வெடிப்பானடா / எருமைகளின்
கோட்டையைத் தகர்ப்பானடா/
நாடு காக்கத் துடிப்பானடா/
நாட்டுக்காக மாண்ட வம்சமடா/
நாடி நரம்பெல்லாம் எழும்புதடா/
நாளும் பொழுதும் நாங்கள்
தமிழன் என்று உரக்கக் கூறும்
வேளையிலே நீயும் பாரடா //
(#யாழ்சிறி வானொலிக்காக
மாவீரர் தினம் அன்று எழுதியவை )
Saturday, 7 November 2020
துடிக்கும் இதயம் நடிக்காது
நாவால் வெடிக்கும்
வார்த்தை /
காதால் கேட்ட
பின்னும்/
உமக்குத் துயரம்
என்றால்/
தவிக்கின்றது எனது
மனம்/
உதவிடவே நினைக்கின்றது
தினம்/
அன்பினாலே இணைந்தது
உள்ளம்/
சதியினால் விலகியது
நெஞ்சம்/
மதியிலே உமது ஞாபகம்
தஞ்சம் /
ஆகையால் நானும் உனக்காக வருந்துகின்றேன்
கொஞ்சம் /
துடிக்கும் இதயம் என்றும்
நடிக்காது/
Tuesday, 3 November 2020
காதலும் கட்டுப் பாடும்
ஓவியக் கவிதை
*******************
உன்- பாதம் பட்ட மண்ணை
பக்தியோடு நான் எடுத்து.
பட்டுத் துணியில் முடிச்சிட்டு
பத்திரப் படுத்திடுவேனடா.!
நீ- படுத்துறங்கிய பாயை
உதறாமல் மடித்தெடுத்து.
மறவாது ஏக்கம் துரத்தும்
மருந்தென்று தலைக்கடியில் வைத்திடுவேனடா.!
உமது - மேனியில் பட்ட
பருத்தித் துண்டை மொட்டை
மாடி வெயிலில் காய்ந்திடாமல்
மாணிக்கமாய்க் காத்திடுவேனடா.!
நீ-கடித்து
துப்பிய நகங்களையும்
சொறிஞ்சி
கொட்டிய தலை முடிகளையும்
சேகரித்து பூச்சரங்களாய்க் கட்டி
என் மெத்தையின் அருகே
தொங்க விடுவேனடா.!
உனது-வியர்வைத் துளி
முத்தமிட்ட போர்வையிலே
மழைத்துளி பனித்துளி
விழுந்திடாமல்.
குடை விரித்து வைத்து
இதமான வெப்பத்தில்
உலர்த்தி எடுத்து மடித்திடுவேனடா.!
உமக்காக நான் செய்திடும்
சேவைகள் இவைகளடா.
நீ எனக்காக செய்து விடு
ஒன்றே ஒன்றடா..!
என் இதழ் பட்ட உன்
கன்னத்தை மட்டும்
மறவாமல் தவறாமல்
நீ பருக்களிடமும்
தெருப் பூக்களிடமும்
இருந்து பாது காத்தாலே போதுமடா ..!
(ஓவியருக்கு வாழ்த்துகள்)
Monday, 2 November 2020
Thursday, 29 October 2020
சொல் பெண்ணே சொல்
உன் -அங்கம் தொட்ட
மழைத்துளிகளை எங்கும்
நகராமல் வங்கு அமைத்திடவா...?
நீ-பாதம் சலவை செய்த
ஓடைநீரை ஓட விடாமல்
அடைப்புப் போட்டு விடவா...?
உமது -பொன்னான
மேனியைப் படம் பிடித்த
மன்னலை வரவழைத்து
கண்களால் கைது செய்திடவா ..?
உனது- கார்காலகக் கூந்தலை
தொட்டுக் கற்பழித்த
வாடைக் காற்றை சாடியினுள்
இட்டு மூடிக் கொள்ளவா ..?
இல்லை -தேவியுமது அழகு
கண்டு தேவலோகப் பக்தன்
பூ மழை தூவி பாதம்
தொட்டதாய் எண்ணி
அனைத்தையும் விட்டு விடவா ..?
சொல் கண்ணே சொல்
செவ்விதழ் திறந்து
செங்கரும்பின்
சுவை போல் ஓர் சொல்
சொல் பெண்ணே சொல்./
Tuesday, 27 October 2020
மதுரை மல்லி
ஆளைத் தூக்கிடும் குண்டு
மல்லி.
வாழாக் குமாரி நட்ட
மல்லி.
வாழைத் தோப்பு பக்கத்து
மல்லி.
என்னை வளைச்சுப் போட்ட
சின்னமல்லி.
வாடைக் காற்று தொட்ட
மல்லி.
பருவ மழை முத்தமிட்ட
மல்லி.
காலைப் பனி போர்த்திய
மல்லி.
மாலையிலே மலர்ந்திருந்த
வெள்ளை மல்லி.
சாரைச் சடையில் ஏறிடும்
மல்லி.
சாமத்துச் சல்லாபம் கண்டிடும்
மல்லி.
சங்கதியின் போது கசங்கிடும்
மல்லி.
சங்கோசம் கொண்டு உதிர்ந்திடும்
மதுரை மல்லி.
Monday, 26 October 2020
விடை கொடு அன்பே
தூங்கிடும் விழிகளுக்குள் .
தூங்காமல் கனவு
தூண்டில் போட்டால்.
ஏங்கிடும் நெஞ்சம்
என்ன செய்திடும்.
விளைந்திடும்
கற்பனையெல்லாம்.
காதலாய்ப் பூத்தால்.
அனர்த்தம் கொண்ட மனம்
எப்படி வாங்கிடும்.
சுத்திகரித்த குருதியும்.
உன்னைக் கொண்டு
மூளையிலே நிறுத்தினால்.
மத்தியிலே இருக்கின்ற
சிந்தனை எங்கு சாந்திடும்.
இரவும் பகலும்
செவிகள் இரண்டும்.
இளையராஜா
இசையிலே மயங்கினால்.
ஆசைகள் பெருகாமல்
எப்படி அடங்கிடும்.
வாடைக் காற்றும்
கோடை மழையும்
ஆடை களைத்து
இடையைக் கிள்ளினால்.
பாவம் அந்த மடமைப் பெண்
மண மேடை தேடிடும்
எண்ணத்தை எப்படி
உள்ளத்தால் அடைத்து வைப்பாள்.
Thursday, 8 October 2020
மௌன ராகம்
உன் நினைவில் ஒரு
சோகம்.
அதிலே எழுகின்றது
தனிமையில் ஓர் இனிய
ராகம்.
கனியாத காயாக
நானும்.
கனி தேடிடும் கிளியாக
நீயும்.
புலரும் பொழுதெல்லாம்
ஏமாற்றம்.
பொழுது செல்லச் செல்ல
தடுமாற்றம்.
உன் குரல் தேன் தமிழில்
உரைத்திடையிலே .
எனக்குள் நிறைகின்றது
இன்ப வெள்ளோட்டம்.
நீ நிறுத்தி சென்று விட்டால்
மறு கனம் வறட்சி
நோக்கி விரைகின்றது
எந்தன் மன வாட்டம்.
ஒத்தையிலே நித்தம்
நான் பாடும் ராகம்
உன் நினைவினால்
பிறந்திடும் மௌனராகம்.
Tuesday, 6 October 2020
பைங் கிளியே பேசு புள்ள
கத்தாழக் கண்ணு புள்ள /
குத்தாலப் பார்வப் புள்ள/
வெத்தலயப் போட்ட புள்ள /
விவரம் அறியாத புள்ள /
சுத்தலில விடாத புள்ள /
நேத்து வரை நீ சின்னப் புள்ள/
இன்றிருந்து நீ கன்னிப் புள்ள/
மாத்தணும் நான் மால புள்ள/
போர்த்திக்கணும் ஒரு போர்வ புள்ள/
என்னோடு கொம்பு தீட்டாதே புள்ள /
ஆத்தோரம் வம்பு இழுப்பேன் புள்ள /
பெத்த ஆத்தா சொன்னா புள்ள /
நீ என் சொத்தாம் புள்ள /
தாக்கத்தி எடுத்த கை புள்ள /
பூக் கொத்து பறிக்குது புள்ள /
பட்டமிளகாய் போலே முறைக்கும் புள்ள /
கடுகைப் போல் வெடிக்காதே புள்ள/
மவுனம் கலைச்சு என்னிடம் நாலு/ வார்த்தையேனும் பைங்கிளியே
பேசு புள்ள/
தன்பிக்கை
அடுத்தடுத்து
தோல்விகளைக் கண்டவன் .
அத்தி வாரம்
உறுதியான
கட்டிடமாய் மாறுவான்.
அடி எடுத்து எடுத்து
வைத்திட வைத்திட
ஏமாற்றம் கொண்டவன்.
பலமான மரமாய் ஆகிறான்.
முயற்சி பண்ணப்
பண்ண வீழ்த்தப் படுபவன்.
இடி தாங்கும் நிலமாய்
பிடிவாதம் கொள்கிறான்.
விழுந்து எழுந்த பின்னே
விடா முயற்சியிலே
முழுமை அடைகிறான்.
தோல்வியைத் தோளில்
சுமந்து சென்றே
இறுதியில் தலையில்
கிரீடம் ஏற்றுகிறான்.
இதற்குக் காரணம்
வேறு ஒருவர் இல்லை
அவன் உள்ளே
இருக்கும் தன் நம்பிக்கை.
Friday, 2 October 2020
Thursday, 24 September 2020
சொல்லத் துடிக்குது மனசு
வண்ண உடை கலக்களடி.
அன்ன நடை மயக்குதடி.
சின்ன இடை இழுக்குதடி.
கண்ணாடிக் கண்கள் போதை ஏற்றுதடி.
முன்னாடி பாத்துப்புட்டா மோகமடி
பின்னாடி நின்னுப்புட்டா தாகமடி.
ஓர விழி உள்ளே நுழையுதடி.
ஒய்யாரப் பேச்சு கொள்ளையடிக்குதடி.
வளைந்த புருவம் வளைத்துப் போடுதடி.
நெளிந்த முடி நெஞ்சை அள்ளுதடி.
ஏர் நெற்றி திகைப்பில் ஆழ்த்துதடி.
செவ்விதழ் வசியம் பண்ணுதடி.
உன் அங்க அசைவுகள் எல்லாம்
இந்த ஆண் மனசை எங்கங்கோ
தள்ளுதடி.
சொல்லிக்க ஏதேதோ தோணுதடி.
சொல்லிப்புட்டா பொல்லாத
வம்பாகிப் போகுமடி.
(ஓவியருக்கு வாழ்த்துகள்)
Monday, 21 September 2020
இன்ப வெள்ளம்
விழியும் மொழியும் நாணும்-மனம்
மலரையும் நிலவையும் நாடும்.
இரவும் பகலும் ஒன்றாகத் தோணும்.
இணைந்த நெஞ்சம் பந்தாக மோதும்.
இருவரின் இதயமும் இடமாறிய பின்னே.
அறிவு அரிய சிந்தனையில் இறங்கும்.
அது அன்னையையும் தந்தையையும்.
யாந்திரை நோக்க அறிவுறுத்துதம்.
அதற்கு ஏதேதோ நாடகம் நடிக்கும்.
இரண்டு ஜீவனும் விரைந்த பின்னே .
கள்ள மூளை இறக்கை விரிக்கும்.
வீட்டுத் தோட்டம் ஆத்தோர ஆலமரம்.
தெருக் கோயில் சின்னாத்தா இல்லம்.
எது சிறந்த இடமமென குறிப்பெடுக்கும்.
அத்தனையும் சாதகமான பின்னே.
தேர்வான இடத்துக்கு தோர்வான
உடையை கரம் விரைந்து எடுக்கும்.
மூன்று முழம் மல்லிகை முடியில் ஏறும்.
அயல் நாட்டு சாயம் இதழில் சாயும்.
அலங்காரம் பரபப்பாக ஆன பின்னே.
கண்ணோரம் கண்டு .
நரம்போடு கொண்டு.
உணர்வோடு இணைத்தவனை
எத்தனை மணி வரை தன்னோடு
நிறுத்தலாம் என ஆத்ம ஜீவன்
கடிகாரம் திருப்பி நாவோடு
கணக்குப் படிக்கும்.
இத்தனையும் ஈருள்ளம் ஓர்
உள்ளமான உண்மைக் காதலாக
உருவெடுத்த பின்னே.
உருவாகிடும் புது வெல்லம்.
நிறைவாகிடும் இன்ப வெள்ளம்.
(ஓவியருக்கு வாழ்த்துகள்)
Tuesday, 15 September 2020
பருவக் காற்று
#ஓவியக்கவிதை
*******************
வயசுக்குப் பசி தீர்க்க
மனதாரத் தழுவி .
உடலுக்குச் சூடு ஏற்றி.
உள்ளத்தில் காமத் தீ மூட்டி .
உணர்வைக் கொண்டு சிறையில் பூட்டி
உணர்ச்சியை விடுவித்து
உலாவிடும் பாதையைக் காட்டி./
பின்னிய நரம்பில் நெஞ்சம் எண்ணியவையெல்லாம் செலுத்தி.
வெப்ப மூச்சு வீசையிலே
அச்சம் கொள்வாயா?
என்று வினா எழுப்பி
ஓடும் குருதியை நிறுத்தி
உறுதிமொழி எடுத்து./
கணை தொடுத்திடும் கண்களுக்கு
பஞ்சணை மயக்கப் பட்டம் பெற்று
பூவாக நான் மலர்ந்து .
பொன்வண்டாக உன்னை அழைக்க
உன் இதழ் கொண்டு எனை நீ அளந்து.
இன்புறும் வேளையிலே
நெஞ்சணை எடை கொண்டு
உன்னை நான் எடை பாத்திட
வேண்டும் என்று பருவக் காற்று
பரிசம் போட்டுச் சென்றதடா நேற்று./
(ஓவியருக்கு வாழ்த்துகள்)
கிளுகிளுப்புக் கவிதை😜
நான் சாய்ந்த தோள்கள்
#ஓவியக்கவிதை
******************
உன்னையும்
என்னையும் தழுவிய
வாடைக் காற்று
முதுமை நோக்குகின்றது .
நீயும் நானும்
குதித்த ஓடை நீரும்
இளமை இழக்கின்றது.
நாம் இருவரும் நட்ட
தோட்டத்து மல்லிகை
மலர்களும்
பள்ளியறை கேட்கின்றது.
உன் கரமும் என் கரமும்
தொட்டுப் பதியமிட்ட
பருத்திப் பஞ்சும் குடித்தனம்
நடத்த அழைக்கின்றது.
அன்னையின் தேர்வான
சுடிதார் விடுதலை கேட்கின்றது.
விருப்போடு நீ கொடுத்த
பட்டுச் சேலை கசங்கிடத் துடிக்கின்றது .
கூடி ஓடி நாம் விளையாடிய
தெருவெல்லாம்.
கெட்டி மேளம் கேட்கின்றது.
படியேறிடும் கால்கள் இரண்டும்
மெட்டியொலிக்குக்
கட்டளையிடுகின்றது.
மருதாணி விரல்கள்
மாற்று மோதிரத்தைக்
காத்து இருக்கின்றது.
ஏர் நெற்றி குங்குமத்
திலகத்திற்கு ஏங்குகின்றது.
வகுத்த உச்சியும் நெற்றிச்சுட்டி
போட்டுக்கத் துள்ளுகின்றது.
நீ பிடித்து இழுத்து
அடித்துப் பார்த்த கரங்கள்
வண்ண வளையல்கள்
போட்டுக்கச் சொல்லுகின்றது.
இத்தனையும் இங்கிட்டு
நடக்கின்றதே .
அங்கிட்டு நான் சாய்ந்த
தோள்கள்
இன்னும் மாலை மாற்றிக்கக் கேட்டுக்கவில்லையோ அய்யனே.
(ஓவியருக்கு வாழ்த்துகள்)
தோழியோடு சில நிமிடம்
#ஓவியக்கவிதை
*******************
நெடு நாள் தோழியே
நெருங்கிய தோழியே
சற்று இடைவேளையின் பின்னே
உன் முகம் கண்டேனடி தோழியே.
கலகலப்பைக் காணோமடி
கிளுகிளுப்பு இல்லாமல் இருக்காயேடி
என்னாச்சு ஏதாச்சு என் நெஞ்சம் பதறுதடி சொல்லிக்கக் கூடாதா எங்கிட்ட
எனதருமைத் தோழியே.
சொல்லி அழ அன்று நீ இல்லையடி
சொல்லிக் கொள்ள இன்று #நா எழவில்லையடி.
புளுவாய்த் துடித்தேன்
அனலாய் எரிந்தேன்
கானல்நீர் வடித்தேன்.
நினைவு வாழ்க்கைகக்குள்
இறுதியில் வீழ்ந்தேனடி
இன்னும் என்ன சொல்ல வேணுமடி
என் அன்புத் தோழியே.
கவிதை ஒன்று கிறுக்குகின்றேன்
கலங்காமல் படித்திடு
கன்னி என் கடந்த காலக் கதை
அதற்குள்ளே உண்டம்மா தோழியே.
(#கவிதை)
செவ்இளநீர் #நீர் எடுத்து.
செங்கரும்பின் சார் எடுத்து.
செவ்வாழைக் கனி உரித்தெடுத்து.
செய்து வைத்தேன் பாணமொன்று.
சேர்த்தணைத்திட வந்திடும் மாமானுக்காக.
கருவாப்பட்டை பொடி போட்டு.
கருப்பட்டி இடித்துப் போட்டு.
கரகப்பான சோள மாவைப் போட்டு.
கரந்த பாலை சூடோடு போட்டு.
கரம் கொண்டு பிடித்தேன்.
இனிப்பான பண்டமொன்று.
கட்டியணைக்கும் மாமனுக்காக.
மனதை மயக்கிட மணம் வீசிடவே.
மல்லிகைப் பூ நறுமணம் பூசி.
மந்தாரப்பூ சேலை உடுத்தி.
மகிழம்பூக் கொண்டை போட்டு.
மஞ்சள் வெயில் வேளையிலே.
மாமன் நெஞ்சோடு சாய்ஞ்சிக்கக் காத்திருந்தேன்.
எதிர் பார்ப்பு முற் புதராச்சு.
அத்தனையும் வீணாச்சு.
செய்த பண்டம் நாசமாச்சு.
சேர்ந்த ஆசை செத்துடிச்சு.
அதை என்னவென்று நான் சொல்ல.
கண்ணீரே சேதாரமாச்சு.
உள்ளக் குமுறலே மிச்சமாச்சு.
ஆத்திலே வெள்ளப் பெருக்காச்சு
அதனோடு என் மாமன் மூச்சும் போச்சு.
ஆத்தாவுக்கும் பித்துப் பிடிச்சாச்சு.
எல்லாமே என் வாழ்வில் முடிஞ்சு போச்சு.
புதுமையாய் நான் என்ன சொல்ல.
(கவிதையைப் படித்து முடித்த உயிர்த்
தோழி ஓவெனக் கதறி அழுதாள்)
(ஓவியருக்கு வாழ்த்துகள்)
Subscribe to:
Posts (Atom)