Saturday 5 December 2020

நினைவு கூர்வோம்

யானையை அழித்திட
ஒரு எறும்பு போதும்.
காட்டை அழித்திட 
ஒரு இரும்பு போதும்.
வீட்டை எரித்திட 
ஒரு  தீக்குச்சி போதும்.
மலையைச் செதுக்கிட
ஒரு உளி போதும்.

என்றெல்லாம்  பேசுவார்கள்.
அவை அக்காலமொழி.
அத்தனையும் ஓரம் கட்டியது 
நட்பு என்னும் பாம்பொன்று.
ஒட்டி உறவாடி 
கட்டியது பாடையொன்று.

சரித்திரப் 
பெண்ணை சாய்த்துவிட்டது
தரித்திரமொன்று .
வீரப் பெண்ணின் விவேகப் 
பேச்சை நிறுத்தி விட்டது.
வீணாய்ப் போனதொன்று.

துப்புக் கெட்ட கூட்டம் 
இன்னும் குற்றவாளியைக் கண்டு 
பிடித்திட துப்பரபு பண்ணுது 
நின்று கொண்டு.

அரசியலையும் தாண்டி
எந்தாளும் நேசிக்கத் தோனும் 
அம்மாவின் தன் நம்பிக்கைகளை 
அதன் அடிப்படையில் எப்போதும் 
நினைவு கூர்ந்திடும் நம்  எண்ணம்.

No comments:

Post a Comment