Friday, 27 September 2019

முதல் சொல் கவிதை #கொ

கொன்றைவேந்தன் ஆத்திசூடி 
நன்றாய்ப் பயின்றவன் /
கொடும்பாவி
என்று பெயர் பெற்றான்/

கொடும் கோபம் கொண்டு
கடுஞ்சொல் வீசுகின்றான் /
கொள்ளை அழகுடைய
நல்ல பிள்ளை/

கொள்கை மாறியதாலே
அவனுக்கு அவப்பெயரானது /
கொச்சை வார்த்தைள்
ஏராளம் தாராளம் /

கொட்டுகின்றான் 
யார் முகமும் பாராமல் /
கொடுமையிலும் கொடுமை
குலத்துக்கே கேடானப்பிள்ளை /

கொஞ்சம் கொஞ்சமென
நாசமாகிப் போனதே /
கொம்புத் தேவரின் மகனது  வாழ்க்கையானது/

Thursday, 26 September 2019

பிரியமானவளே

உள்ளமென்னும் வெள்ளத்திலே
ஓடமானவளே /
இதயமென்னும் தோட்டத்திலே
பூத்துச் சிரிப்பவளே /
நெஞ்சம் என்ற பஞ்சணைக்கு
உரிமையானவளே /
ஓடும் குருதியின் அணுக்களோடு
நெருக்கமானவளே /

ஏழ்மையில் இருந்து மீண்டிட /
இல்லற வாழ்விலே இன்பமதைப் பெருக்கிட /
பொன்னாரம் போட்டு என்னவளை
காண்ணாரப் பார்த்திட /
அயல் நாடு கடந்தேனடி சின்னவளே /

இரண்டு ஆண்டு கடக்க இரு
மாதம் உள்ளதடி  இனியவளே /
இதழிலே புன்னகை பிறக்க திறந்த விழியோடு தலை வாசல் நோக்கடி /
என் மனம் எங்கும் காதல் மணம்
பரப்பிட/
நிறைந்த பாசத்தோடு விரைந்து வருகின்றேனடி /
எனது ஆத்மாவை ஆளும்
பிரியமானவளே /

Wednesday, 25 September 2019

உன்னிடம் மயங்குகிறேன்

எதைக் கண்டு
உன்னிடம் மயங்குகிறேன் /
முறுக்கு மீசையும்./
கிறுக்குப் பார்வையும் /
இறுக்கிப் பிடித்தனவோ ? இதையமதை /
அதனாலே  மயக்கம் பிறந்ததோ ......?

துடிப்பான பேச்சும்/
மடிப்புக் கலையாத சட்டையும் /
கடிவாளம் போட முடியாத கோபமும் /
கண்டு மயக்கம் பிறந்ததோ ....?

இரவு பகல் மயக்கம் 
விலகாமல் உறங்குகின்றேன் /
உள்ளத்தை நெருங்கி வாவென
உரைத்திடவே தயங்குகின்றேன் /

உள்ளதை உள்ள படியே
சொல்லி விடாமலே கலங்குகின்றேன் /
உயிர்த்துடிப்போடு உன்னை
இணைத்திடவே ஏங்குகின்றேன் /

 

Tuesday, 24 September 2019

முன்னேறு

முட்டி மோதி முன்னேறு
அந்த விதை போலே./
நிலத்தைக் கிழித்து
எழுந்து சிரிக்கும் முளை போலே./
புயல் அடித்தாலும் தாங்கி நின்று
விழுது விடும் ஆலமரம் போலே./
உறுதியான தைரியத்தை
உள்ளத்தில் ஒலிக்க விடு./
தாக்கம் தனிந்து ஊக்கம் தானாக எழும்./

மீண்டும்  மீண்டும் முயற்சி செய்/
ஒரு முறைக்கு இரு முறை. /
தோல்வி தொலைந்து /
வெற்றி ஒட்டிக் கொள்ளும்/
உலகிலே உன் புகழ் ஓங்கி விடும்.//

அடுத்தவனை கெடுத்து முன்னேறாதே./
ஆத்ம திருத்தியோடு உடல்
வருத்தி முன்னேறு. /
இதயத்தை இரும்பாக்கி /
துன்புறுத்தி முன்னேறாதே. /
உண்மை உழைப்பில் முன்னேறு./

ஊமை கண்ட கனவு
போல் காலத்தை கழிக்காதே./
எப்போதும் இலட்சியத்தோடு
நடை போட்டு முன்னேறு./
ஏழை எளியோரை வருத்தி முன்னேறாதே./

ஒரு மனிதனின் உயிருக்கு
மதிப்பு அளித்து முன்னேறு./
ஓயாது மூளைக்கு
வேலை கொடுக்காமல் /
ஓய்வு கொடுத்து சிந்தித்து /
செயல் படு  வெற்றிப் படி உன் பிடியில் /

        

எரி மலையும் சிறு பொடியே

துணிந்து எழுந்து பார்!
எரிமலையும்  சிறு பொடியே.!
மலையைக் கொடையும் உளியாய் மாறிப்பார்!
மலையும் உமக்கு தூசியே/

ஓட ஓட விரட்டுவோரை!
ஒரு நிமிடம் நின்று முறைத்துப்பார் !
அன்றே நீ  வல்லவனே."
இடிமேல் இடி வாங்கும் வானமாய் !
தோல்வியைக் கண்டு
தயங்காமல் முயன்று பார் !
இடையூறு கொடுப்போரின் !
தொடை நடுங்குமே /

விழாமல் நடக்க முற்படாதே!
விழுந்து எழுந்து பார்- உன்
பாதத்தின் பலம் உமக்குப் புரியுமே.!
கெஞ்சி இருக்காதே !
உரியதை தட்டிக் கேட்டுப்பார் !
எட்டி நிற்பான் எதிரியும் /

விட்டில் பூச்சியாக !
இருக்கும் நோக்கை !
விட்டு துணிந்து பார் !
எரிமலையும்  சிறு பொடியே /

 

Monday, 23 September 2019

இன்னும் மௌனம் ஏன்


கை பேசியை கையாளும் ஆண் மகனே
கொஞ்சம் காதல் மொழி பேசு கண்ணா
புது உறவாய் வரவு தந்த சின்னவனே
மறுப்பு மொழி போடலாமோ மன்னவனே.

காதலின் நிறம் காட்ட வந்தாய்
இருண்ட இதய வாசல் திறந்து வைத்தாய்
இறந்த காதலுக்கு உயிர் கொடுத்தாய்
இதயம் இடம் மாற தடை போடுகிறாய்.

இமையம் போல் உனை நினைத்தேன்
இமை போல் காப்பாய் என்று மதித்தேன்
உன்னால் உலகத்தை மறந்தேன்
ஊட்டிக் குளிர்  போல் உள்ளம்  மகிழ்ந்தேன்.

அன்பே நீ அருகில் இருந்தால்
ஆவாரம் பூவாய் நான் மகிழ்வேன்
சிட்டாய் சிறகு விரிப்பேன்
வட்டமிட்டு நான் பறப்பேன்.

  

Sunday, 22 September 2019

ஆசைய காத்துல தூது விட்டேன்

ஆத்திலே தூண்டில்  போட்டு /
அதிலே ரெண்டு மீன்  புடிச்சு /
விரைவாகக் கொண்டு
வந்து  ---சின்னையா /
அளந்து  துண்டு போட்டு
ஆக்கிப்புட்டு/ ஆசையோடு
காத்திருக்கேன் ---சின்னையா/
அந்தத் தெற்கோரக் காத்தக்
கொஞ்சம் நீ---- கேளைய்யா /

வடக்கோரத் தோப்புக்குள்ளே
வடுமாங்காய் பறித்து வந்து --சின்னையா /
நடைபாதையோரத்தில் பழுத்த
மிளகாயும்  திருடி வந்து/ காரப்பச்சடி செஞ்சுப்புட்டேன் ---சின்னையா /
காதோரம் சேதி சொல்லும்
தென்றல் இதைச் --சொல்லலையா ?

குளத்து நீரில் குளித்து வந்து /
கூடை நிறையவே முல்லைப் பூ பறித்து /
மணக்க மணக்க கோர்த்தெடுத்து /
மகிழம்பூக் கொண்டை போட்டு /செரிகிக்கிட்டேன் --சின்னையா /
நாளாபக்கமும் சுழண்டு வரும் /
நறுமணத்தைக் கொண்டு வரும் /
மேக்கு நோக்கி வீசும் தென்றலது
என் ஏக்கமதைக் கூறலையா?  நீ சொல்லையா -?----என் சின்னையா /

மாலைப் பொழுதின் மயக்கத்திலே

மாலைப் பொழுதின்  மயக்கத்திலே /
மடி சாய்ந்திடவே ஏக்கம்
எழுகின்றதே மனதினிலே /
மாமன் வாழும்  பெண் நெஞ்சமே /
மயக்கம் ஏக்கமானதோ? சொல் நெஞ்சமே /

சோலைக்குயிலும்  சோடியோடு கூவிட /
மதுரை மல்லிகையைக்  கிள்ளிப் பார்க்க வரும்  பொன்வண்டும்  இணையோடு வட்டமிட /
தனிமைக்குத் துணையென்று
தென்றலும்  மரக்கிளையைத்  தொட்டு விலக /
கட்டை விரல் பிடித்த படி
பக்கவாட்டில் ஒரு சோடி உலாவ /

ஆசை உள்ளம் மோக வெள்ளத்தில் விழ/
விழிகளிரண்டும்  துழாவுகின்றது
அன்பான நாயகன் எங்கேயென /

கலையும் வண்ணங்கள்

சின்னச் சின்ன கற்பனைச்
சின்னம் செதுக்கி /
ஆசை வண்ணம் தீட்டி வந்தேன் /
கட்டுடலிலே பட்டு உடுத்தி /
கட்டிய கூந்தலில் பூ முடித்து /

கண்ணோரம் கருமையிட்டு /
கண்ணாடி வளையல்களை
எண்ணிக்கை குறையாமல் மாட்டி /
கொலுசோடு மெட்டி போட்டு /

வாழ்வு கலியாணத்துக்கு வாழ்த்துரைக்க /
தவறாமல் சென்று விட வேண்டும்
என்று /
பருவம் கண்ட நாள் முதல் மனக்கோட்டை கட்டி வந்தேன் /

என் வாழ்க்கை விளக்கு எரியவில்லை /
இருட்டறையாகப் போனது வாழ்வு இன்று /
பட்டாடை வண்ணம் மாறியது /
வெள்ளைச் சேலை என்னில் ஏறியது /

போட்ட வளையல் கழட்டவில்லை நொறுக்கப்பட்டது /
கண் மையே நெற்றிப் பொட்டானது /
முற்றத்து மல்லிகை முற்றாக உதிர்ந்து சருகாகிறது /
வண்ணக் கனவு வண்ணம் கலைந்தது /
எண்ணமெல்லாம் என்னுள் புதைந்தது /

கூடு தேடும் குயிலு ஒண்ணு

கூவிக்கத் துடிக்குது.!
கூவத்திலே குளிக்குது.!
வாழ்ந்திடத்தான் நினைக்குது.!
வழி தவறியே
பிறந்திட்டதால் தவிக்குது.!

ஊரும் உமிழுது.!
உறவுங்களும்  வெறுக்குது.!
உசுரைக் கொடுத்தவரு எங்கே?
எண்ணு  காலமும் கேள்வி கேக்குது.!
பெத்திக்கிட்ட ஆத்தாவோ மௌனமாயிருக்குது.!

காதலும் தான் கதவத் திறந்திடிச்சு.!
காமமும் முழுவதும் கொடுத்துடிச்சு.!
மோகமும் முழுமை அடஞ்சிரிச்சு.!
அவமானத்தோட மானமும் நாறிடிச்சு.!

கண்ணானம் என்ற
ஒண்ணு எனகில்ல.!
யேன் ..தோலுக்கு
மால வரப்போவதில்ல .!
வாழ்க்க அது எனகில்ல.!
நானோ வாழா வெட்டியாகவே
வாடிக்கிட்டு இருக்குற முல்ல.!
காரணம் தான் யென்ன?
நானு தாசி வீட்டு பிள்ள.!

Saturday, 21 September 2019

கொடையாக

ஏழை நான் இல்லையடா
ஏழ்மையானேன் உன்
அன்புக்காகவே./
கோழை நான் இல்லையடா
கோமாளியானேன் உன்
அன்புக்காகவே./

அகங்காரக் காரியடா
அடிமையானேன் உன்
அன்புக்காகவே./
ஆணவம் என்னிடம் அதிகமடா
ஆனாலும் அதை தள்ளி
வைத்தேன் உன் அன்புக்காகவே./

கண்ணாள் முறைப்பவள் நானடா
கலங்கி நிற்கின்றேன் உன்
அன்புக்காகவே./
தவத்தை வெறுக்கும் பிறவி நானடா
தவமாய்  இருக்கின்றேன் உன்
அன்புக்காகவே./

உழைத்து உண்ணும் தன்
மானப்பெண்ணடா
உன் அன்புக்கு
அடிமை  ஆனேனடா./
பிடிவாதம் என் தடிபோல் ஆனதடா
பிடிவாதம் தாழர்ந்து உன்
அன்பு மடி தேடுதடா./

துன்பத்தாலும் சோகத்தாலும்
சிதைக்கப்பட்ட நெஞ்சமடா
துயரத்தால் நீ வதைப்பதும்
ஏனடா. ?
பருத்தி நெருப்பிடம் கடன்
கேட்டது போல்  ஆனது என்
கதையும் பாரடா./

நீ எரித்து விளையாடுகிறாய்
நான் துடித்து நடமாடுகிறேன்/
கொடுத்து விடுவாயோ உன்
அன்பை கொஞ்சம்  கொடையாக/
இல்லை என்னை  கிடத்தி
விடுவாயோ கிடக்கில் நிலையாக ./

பசியோடு காத்திருக்கேன் மச்சானே

காட்டு முயல் வாங்கி
காரம் போட்டு வறுத்துப்புட்டு /
குளத்து மீன் வாங்கி
கம கமக்க குழம்பு வச்சுப்புட்டு /

தோட்டத்து மரவள்ளிக்கிழங்கு
எடுத்து மசியல் செஞ்சுப்புட்டு /
தொங்கிய பாவைக்காயைப் பறித்து நறுக்கி சுறுக்கென்று புளியிட்டு /
நறு நறு என்று நொறுக்க பொரித்து விட்டு /

குத்தரிசி  சாதம் பக்குவமாய்
நிறைகட்டி ஆக்கிப்புட்டு /
குழி நீர் எடுத்து கூசாவை நிறைச்சிக்கிட்டு /
திண்ணையிலே பாய் போட்டுகிட்டு /
கண் அயராமல் காத்திருக்கேன் /
கொட்டக் கொட்ட முழிச்சுக்கிட்டு /

விறகடுப்பிலே கொதிநீர் போட்டாச்சு /
துவட்ட துண்டும் தயாராச்சு /
கொண்டைக்குப்  பூச் சரம் கட்டியாச்சு /
கண்டாங்கி சேலை உடுத்தாச்சு /
அகப்பை பிடித்து பரிமாறும் கரங்களுக்கு /
வண்ணவளையல்கள் அடுக்கியாச்சு /

பக்கத்திலே நீ வந்தமர்ந்தால் /
பக்குவமாய் பரிமாறவே நேரமாச்சு /
விரைந்து வா விரும்பி உண்ண /
பசியோடு நான் காத்திருக்கேன் மச்சானே /

காகிதக் கப்பலாய்

நீ கொடுத்த பிரியத்தை
நீயே பிரித்தெடுத்து விட்டாய்./
நீ காட்டிய அன்பை
நீயே ஈட்டியாக்கி விட்டாய்./
நீ அளித்த மகிழ்ச்சியை
நீயே சிதைத்து விட்டாய்./
நீ காட்டிய பாசத்தை
நீயே பாதியில் கொன்று விட்டாய்./
நீ நிழல் இல்லை
தீ என்று சூடு வைத்துக் காட்டி விட்டாய்./
நீ கொடுத்த அத்தனையும்
நீயே அழித்து விட்டாய்./
நீ இன்றி என் நெஞ்சம் இன்று
நீரில் மூழ்கிய காகிதக் கப்பலாய் /

 

திரை நீக்கினாள் தேவதை

வெண் திரை நீக்கி
மெல்ல நோக்கிய  பெண்ணே/
உன் கண்கள் ஊர்ந்தது  என் மேலே /
கள்ள விழி கண்டு மயங்கினேன் /
நான் மது சுவைக்காமலே /
மது  உண்ட வாண்டாக பெண்ணே./

உன் நாணம்  அதை நானும் அறிந்தேன் /
உன் விழி பேசிய மொழி என்ன மொழி /
என்று அறிய முடியாதவனாய் /
வந்து அமர்ந்தேனடி பெண்ணே /

இதமான நறுமணம் காற்ரோடு கலக்க/
அலங்காரம் பண்ணியே நீ சிங்காரி / போல்
சிம்மாசனத்தில் அமர்ந்து  இருக்க. /(உன்
அழகை மெல்லிய திரைச்சீலை /
காட்டிக் கொடுத்ததடி பெண்ணே/

உன் சுண்டு விரல் கொண்டு /
திரை கிழித்துப் பார்த்தாயே /
என் காந்தப் பார்வை கவர்ந்து
விட்டதோடி  உன்னை  /
செந்தமிழ் கொண்டு செவ்விதழ் திறந்து  /
தூது சொல்லடி பெண்ணே./

சேலை கட்டி பொன் நகையும்
புன்னகையும்  சுமந்து /
வெட்கத்தில் புதையுண்டு பாதி
விழி காட்டி /
என்னை வீழ்த்திய பெண் நிலவே /
உன் பக்கம் அமர்ந்து உன் வதனம்
நோக்கும்/
நாள் விரைவில் உண்டடி
கண்ணே அடி பெண்ணே ./

Saturday, 14 September 2019

கனவுக் கப்பல்

மெடுக்கான உடையும் .!
எடுப்பான தோற்றமும் கொண்ட.!
அக்கரை மாப்பிள்ளை
புகைப்படம் காட்டி.!
அவளை  சொக்க வைத்தாள் பாட்டி .!

நாளை அந்திமாலையிலே .!
சந்தி விநாயகர் கோயிலிலே.!
நிச்சயதார்த்தமென நிச்சயமானது வீட்டினிலே .!
அக்கரைச்சீமை மாப்பிள்ளை .!
இக்கரை வரப் போகும் நாளிகையை.!
என்னி நாணியது  அவள் மனம்.!

பொன்னோடு பூத் தட்டு.!
கூடவே வண்ணப் பட்டு.!
கண் எதிரே காத்திருக்கு வெடிக் கட்டு.!
மனக் கனவோடு படாத பாடு பட்டு.!
கண்ணுறங்கி விட்டாள் அந்தச் சிட்டு.!

மாப்பிள்ளை மனமோ அலையாய் ஆட.!
இக்கரை நோக்கியது  அக்கரைப் படகு.!
பாதியில் துடுபிழந்து நிர்க்கதியானதே.!
எக்கரையும் சேராமல் ஆசைக் கனவும் சக்கரையாய்க் கரைந்தது.!
வாழ்க்கைக் கனவுக் கப்பலும்
அவளுக்கு அத்தோடு கவுந்ததே.!

தேர்வுக் குழுமத்திற்கு
நன்றிகள் ❤❤🙏🙏🌹🌹🌹

பூ முடிக்கும் புன்னகையே

பூ முடிக்கும் புன்னகையின்
கரம்  நான் புடிக்கப் போனேனே.!
நார் எடுக்கும் வாழைத் தோப்போரம் .!
தான் காத்து நின்றேனே.!

தேன் சுரக்கும் பூக்களோடு
தேவதை அவள் வந்தாளே.!
நான் சுவைக்கும் இதழ் மேலே
சாயம் போட்டு நின்றாளே.!

மை தீட்டிய விழியால் நேருக்கு
நேர் நோக்க மறுத்தாளே.!
கொலுசு போட்ட பாதத்தால்
கோலம் போட்ட படியே இருந்தாளே.!

பூலாங்கிழங்கோடு மஞ்சள் போட்டு
மெருகூட்டிய வெண் கன்னம் சிவக்கும்
வண்ணம் வெட்கம் கொண்டாளே.!
புழுதிக் காட்டை உழுது விதைத்த நாணல் போல் தலை சாய்த்துக் கொண்டாளே.!

Friday, 13 September 2019

ஓடும்

ஓடும் மேகங்களே
********************
அடிக்கும் காற்றுடன்
இணைந்தே ஓடும் வெண் மேகமே.!
இடிக்கும் இடியுடன்
இசைக்கும் மழைத்துளி 
தெறிக்கையிலே .!
எங்கே ஒழிகின்றாயோ.?
நான் படிக்கும் காதல் கீதமதை.!
பிடிக்கும் என்று சொன்னவர் அங்கே.!
துடிக்கும் அவர் நெஞ்சமறிந்து
எனது பாடலதைச் சுமந்து .!
நொடிக்குள் விரைந்து உரைத்திடாயோ.?
வலது கண்ணும் அரிக்கின்றது.
வந்து காட்சி தந்திடுவாரோ?
ஓடும் மேகமே யோசியமது நீ அறியாயோ.?

மனதோடு

காதல் கவிதை
--------------------------
மனதோடு மழைக்காலம்
---------------------------------------

உள்ளக் குழியில்
கீறிய காதல் காயம் 
வடுவாய்ப் போனதே//
கன்னக் குழியில் மயங்கிய
இளமையும் முதுமையானதே//

மௌன மொழி உரைத்த
ஊமை விழிக்கும் 
பார்வை மங்கலானதே//
விழி வழி ஊடுருவி குருதியிலே
கலந்திருந்த  காமக் கிருமியும்
காணாமல் போனதே//

விண்ணையும் மண்ணையும்
கற்பனையில் இணைத்து//
உன்னையும் என்னையும்
அதற்குள்ளே திணித்து//
கவிதைகளைப்  புனைந்த
மூளையும்   மழுங்கிப் போனதே//

எடுப்பாக இருந்த சுருட்டை
முடியும் முறுக்கு  மீசையும் 
நரைத்துப் போனதே//
திருட்டுக் காதலை
முரட்டுத்தனமாகக்
கிறுக்கிய கள்ளிச் செடியும்
அழிந்து  போனதே//

மரண ஓலைக்கும்
விலாசம் கிடைத்து விட்டது//
மரணப்படுக்கையும்
படுத்தாகி விட்டது//

மயங்கிய நெஞ்சம்
மயக்கம் இழக்கவில்லை //
மார்பில் முகம் புதைத்த
மங்கையவளின் முகமதை
மறக்கவில்லை //

வாலிபக் காதல் 
மாறவில்லை//
நேச அலை ஓயவில்லை/ /
என்னுள்ளே ஓயாத தூறலாய் 
மனதோடு  மழைக் காலம் //

உழைப்பே உயர்வானது

ஏழை என்பதைக் கை விடு./
ஏழ்மையைக் குறித்து
அடிமையாவதை தவிர்த்திடு./

உழைப்புக்குத் 
தகுந்த ஊதியம்
கொடுப்போருக்கு
கை நாட்டு வைத்திடு./
உறவானாலும் உரிய
ஊதியம் பெற்றிடு./

அன்றாடம்
வாழ்கையிலே விஷ
நாகம் வந்து
முட்டும் தட்டி விடு./
உன்னைக் 
கொத்தாமல் தடுத்திடு./

அதிகார தோரணையில்
பேசுவதை மறந்திடு./
தினமும்  வாழ்வை
அன்பாக கழித்துவிடு./

உள்ளம்
குமுறவைக்கும்
கள்ளச்
செயல்களை விட்டு விடு./
உயர்தர
மனிதனாக வரம் பெற்று விடு./

பரிதாப நிலை
கண்டு பதறி விடு./
பாரா முகமாக
இருப்போரை விரட்டி விடு./

அச்சு வெல்லமானாலும்
நஞ்சு உண்டு
என்று கற்று விடு./
அஞ்சா நெஞ்சம் கொண்டவன்
என்று பெயர் பெற்று விடு/

Wednesday, 11 September 2019

மனமே மயக்கமென்ன

அரும்பு மீசை. /
குரும்புப் பேச்சு /
நெருஞ்சி தாடி/
கரும்புச் சிரிப்பு/
நெருப்புக் கோபம் /
கருமை வண்ணக்
கண்ணன் அவன் /
திருமுகம் கண்டு
மனமே மயங்கினாயோ ?

தேக்கமர உடல் /
தாங்கிப்பிடிக்கும் உள்ளம் /
சேர்த்து வைத்த சொத்து /
சேதாரம் இல்லா அங்கம் /
அடர்த்தியான  முடி  /விரிந்த மார்பு /
கொடுத்துண்ணும் குணம் /
கொடுமைக்கு கொந்தளிக்கும் எண்ணம் /
கண்டு என் மனம் மயங்கியதோ  ?

வாரியணைக்கும் அன்பு/
வாஞ்சை இல்லாத நெஞ்சம்/
இச்சை மூட்டியதோ /
தஞ்சம் அவன் தான் என்று/
மூங்கில் ஓசை போல்
மயங்கியே போனாயே பெண்  மனமே/

Wednesday, 4 September 2019

செல்லம்மா

கருமுகில் கதவினை தகத்து
கதிரவன் தக தக கங்க ஒளியினை
கனப்பொழுதுக்குள் பூமியில் பரப்பி காலைக் காட்சியை புலப்படுத்துகிறான்.

குளிர் பனி போர்த்திய செவ்விதழ் மொட்டு மெல்லமாய் திறந்து சிரிக்கிறது பனிக்குளிரில் விறைத்திருக்கும்
புல் தரையெல்லாம் நீமிர்ந்து நிற்க
மயங்கியே உறங்கிய மனிதர்களும்
கூடி உறங்கிய மந்தைகளும் மெதுவாக
கண் திறக்க இரவின் ராஜியம் முடிவு காண்கிறது.

மெல்லிய இசை குயில் இசைக்க
கூண்டு சேவலும் உரக்கக் கூவ
பக்கத்தில் இருக்கும் பெட்டைக் கோழியும் கொக்கரிக்க வண்ண வண்ண மலர்களை வண்டு எண்ணப் படியே தடவி செல்ல அல்லிக் குளத்து தவளையெல்லாம் ஏதோ சொல்லிச் சொல்லி நீருக்குள் மூழ்க வானத்திலே வெண் முகில் உலாவும் நேரம் இவையென ஆனது.

கண்ணைக் கசக்கி எழுந்தவுடன் என் கையிலே தேநீரை வைக்க சூடான தேநீரோடு சுகமான காலைப் பொழுதினிலே சுவையான கவிதையொன்று நான் கிறுக்க வேண்டாமோ வெத்துக் காகிதத்தையும் எழுத்தாணியையும் கொண்டு வாடி என் செல்லம்மா.