கை பேசியை கையாளும் ஆண் மகனே
கொஞ்சம் காதல் மொழி பேசு கண்ணா
புது உறவாய் வரவு தந்த சின்னவனே
மறுப்பு மொழி போடலாமோ மன்னவனே.
காதலின் நிறம் காட்ட வந்தாய்
இருண்ட இதய வாசல் திறந்து வைத்தாய்
இறந்த காதலுக்கு உயிர் கொடுத்தாய்
இதயம் இடம் மாற தடை போடுகிறாய்.
இமையம் போல் உனை நினைத்தேன்
இமை போல் காப்பாய் என்று மதித்தேன்
உன்னால் உலகத்தை மறந்தேன்
ஊட்டிக் குளிர் போல் உள்ளம் மகிழ்ந்தேன்.
அன்பே நீ அருகில் இருந்தால்
ஆவாரம் பூவாய் நான் மகிழ்வேன்
சிட்டாய் சிறகு விரிப்பேன்
வட்டமிட்டு நான் பறப்பேன்.
No comments:
Post a Comment