மெடுக்கான உடையும் .!
எடுப்பான தோற்றமும் கொண்ட.!
அக்கரை மாப்பிள்ளை
புகைப்படம் காட்டி.!
அவளை சொக்க வைத்தாள் பாட்டி .!
நாளை அந்திமாலையிலே .!
சந்தி விநாயகர் கோயிலிலே.!
நிச்சயதார்த்தமென நிச்சயமானது வீட்டினிலே .!
அக்கரைச்சீமை மாப்பிள்ளை .!
இக்கரை வரப் போகும் நாளிகையை.!
என்னி நாணியது அவள் மனம்.!
பொன்னோடு பூத் தட்டு.!
கூடவே வண்ணப் பட்டு.!
கண் எதிரே காத்திருக்கு வெடிக் கட்டு.!
மனக் கனவோடு படாத பாடு பட்டு.!
கண்ணுறங்கி விட்டாள் அந்தச் சிட்டு.!
மாப்பிள்ளை மனமோ அலையாய் ஆட.!
இக்கரை நோக்கியது அக்கரைப் படகு.!
பாதியில் துடுபிழந்து நிர்க்கதியானதே.!
எக்கரையும் சேராமல் ஆசைக் கனவும் சக்கரையாய்க் கரைந்தது.!
வாழ்க்கைக் கனவுக் கப்பலும்
அவளுக்கு அத்தோடு கவுந்ததே.!
தேர்வுக் குழுமத்திற்கு
நன்றிகள் ❤❤🙏🙏🌹🌹🌹
No comments:
Post a Comment