காதல் கவிதை
--------------------------
மனதோடு மழைக்காலம்
---------------------------------------
உள்ளக் குழியில் 
கீறிய காதல் காயம்  
வடுவாய்ப் போனதே//
கன்னக் குழியில் மயங்கிய
இளமையும் முதுமையானதே//
மௌன மொழி உரைத்த 
ஊமை விழிக்கும்  
பார்வை மங்கலானதே//
விழி வழி ஊடுருவி குருதியிலே 
கலந்திருந்த  காமக் கிருமியும்
காணாமல் போனதே//
விண்ணையும் மண்ணையும் 
கற்பனையில் இணைத்து//
உன்னையும் என்னையும் 
அதற்குள்ளே திணித்து//
கவிதைகளைப்  புனைந்த
மூளையும்   மழுங்கிப் போனதே// 
எடுப்பாக இருந்த சுருட்டை 
முடியும் முறுக்கு  மீசையும்  
நரைத்துப் போனதே//
திருட்டுக் காதலை 
 முரட்டுத்தனமாகக்
கிறுக்கிய கள்ளிச் செடியும் 
அழிந்து  போனதே//
மரண ஓலைக்கும் 
விலாசம் கிடைத்து விட்டது//
மரணப்படுக்கையும் 
படுத்தாகி விட்டது//
மயங்கிய நெஞ்சம் 
மயக்கம் இழக்கவில்லை //
மார்பில் முகம் புதைத்த 
மங்கையவளின் முகமதை 
மறக்கவில்லை //
வாலிபக் காதல்  
மாறவில்லை//
நேச அலை ஓயவில்லை/ /
என்னுள்ளே ஓயாத தூறலாய்  
மனதோடு  மழைக் காலம் //
No comments:
Post a Comment