Saturday, 21 September 2019

கொடையாக

ஏழை நான் இல்லையடா
ஏழ்மையானேன் உன்
அன்புக்காகவே./
கோழை நான் இல்லையடா
கோமாளியானேன் உன்
அன்புக்காகவே./

அகங்காரக் காரியடா
அடிமையானேன் உன்
அன்புக்காகவே./
ஆணவம் என்னிடம் அதிகமடா
ஆனாலும் அதை தள்ளி
வைத்தேன் உன் அன்புக்காகவே./

கண்ணாள் முறைப்பவள் நானடா
கலங்கி நிற்கின்றேன் உன்
அன்புக்காகவே./
தவத்தை வெறுக்கும் பிறவி நானடா
தவமாய்  இருக்கின்றேன் உன்
அன்புக்காகவே./

உழைத்து உண்ணும் தன்
மானப்பெண்ணடா
உன் அன்புக்கு
அடிமை  ஆனேனடா./
பிடிவாதம் என் தடிபோல் ஆனதடா
பிடிவாதம் தாழர்ந்து உன்
அன்பு மடி தேடுதடா./

துன்பத்தாலும் சோகத்தாலும்
சிதைக்கப்பட்ட நெஞ்சமடா
துயரத்தால் நீ வதைப்பதும்
ஏனடா. ?
பருத்தி நெருப்பிடம் கடன்
கேட்டது போல்  ஆனது என்
கதையும் பாரடா./

நீ எரித்து விளையாடுகிறாய்
நான் துடித்து நடமாடுகிறேன்/
கொடுத்து விடுவாயோ உன்
அன்பை கொஞ்சம்  கொடையாக/
இல்லை என்னை  கிடத்தி
விடுவாயோ கிடக்கில் நிலையாக ./

No comments:

Post a Comment