சுழண்டு வீசும் காற்று
மரத்தை உசுப்பி
விளையாடுகிறது
வலிமை இழந்த மரம்
காற்றின் வீரியம் தாங்காது
உடைந்து விழுகிறது .....///////
இதை உற்று நோக்கும்
ஒருத்தனின் மனதிலே
சிறு கற்பனை பிறக்கிறது....///
குடிகாரனின் கரங்களிலே
சிக்கிய மனைவின் தலை
முடிபோல் ஆனதே
இந்த மரத்தின் நிலை என்று
அதை கவியாக கொடுக்க
சிறு மாற்றம் கொடுத்து
அவன் எழுதினால் அவை
தான் கவிதையாகிறது...../////
வன்மம் கொண்ட குடிகாரனின்
கரங்களிலே தன் மானம் கொண்ட
மனைவியின் கருங்கூந்தல் சிக்கியது
போன்று சீற்றம் கொண்ட வாயுதேவனின்
பிடியிலே வேம்பின் கிளைகள் சிக்கியது .....//////
இதமாக வீசிய காற்றையும்
தென்னங் கீற்றையும்
உற்று நோக்கினான் உடன்
அவன் கற்பனை சிறு கவி தீட்டியது..///
மெதுவாக. நுழையும் காற்று
என்ன கூற்றை கூறிவிட்டதோ
நாணம் கொண்ட பெண்ணைப் போல்
தென்னங்கீற்று வளைந்து நெளிந்து
மெதுவாக வெட்கம் கொண்டு
தலையை அசைக்கின்றது .....////
அதை நாமும் பார்ப்போம்
நம் கண்ணுக்கோ தென் படுவது
தென்னங்கீற்று அசைவது தான்
ஓ -- அது காற்றுக்கு ஆடுது
நாம் நடையைக் கட்டி விடுவோம்
ஆனால் ஒரு கவி உணர்வு உள்ளவன்
விழி அதை நோக்கினால் பல மொழியில்
பல கவி பிறது விடும் ...////
தூணிலும் இருப்பான்
துரும்பிலும் இருப்பான்
இறைவன் என்பார்கள்
அந்த தூணில் ஒட்டி
இருக்கும் தூசியிலும்
கவி பிடிப்பான் அதை
பா வடிப்பான் திறமை
உள்ள ஒரு கவிஞன் ...//
அது நீயாகவும் இருக்கலாம் நாளை
முயற்சியே வெற்றியின் மலர்ச்சோலை
முயன்று பார் மனிதனே இயற்றிப் பார்
நீயும் கவிஞனாகலாம்.
No comments:
Post a Comment