நாணயமானவனுக்கு
எப்போதும் தன் வாக்கு மூச்சு.
நாக்கு வாக்குத் தவறினால்
அவனுக்கு அவமானமாச்சு!
சொல் எறிந்த பின் வருந்தியே
அவன் வாழ்வு வீனாகப் போச்சு.
அதன் விளைவாலே
அவன் உயிரும் போச்சு!
சுவை அறியும் நாவு கொஞ்சம்
நிதானம் இழந்தாச்சு.
சுற்றி இருந்த உறவுகள்
எல்லோரும் விட்டு ஒதுங்கியாச்சு!
நெருப்பாக வந்த சொல்
சொந்தங்களை எரிச்சாச்சு
நெருங்கிய நண்பனும்
பிரிந்தே போயாச்சு!
கல்லெறி போன்ற சொல்லால்
இதயம் நொறுங்கிப் போச்சு.
கண்ணீரிலே விழிகள் இரண்டும்
குளிக்கவே குதிச்சாச்சு!
எறிந்த கல்லும் விட்ட சொல்லும்
திரும்பாது போச்சு
நிறுத்திய மூச்சும் பறந்த உயிரும்
எங்கே போச்சு!
இருட்டறையில் உள்ள நாவு
வீசும் சொல் அருவாளாச்சு.
இதனாலே பலர் வாழ்வு
இருண்டே போச்சு!
No comments:
Post a Comment