Wednesday, 18 January 2017

உளறுகிறாள் என்னிடம்

நீ ஓர் வாத்தை சொல்லு ஒத்தையடிப்பாதையிலே 
நான் வருவேன் என்றாளாம்.
அந்த ஓர் வார்த்தை கேட்கவே
அவள் ஏங்கி நின்றாளாம்.

ஓடை சல சலக்க ஓரமாக
அவள் அமர்ந்திருந்தாளாம்.
ஒன்றும் சொல்லாது
நீ ஒதுங்குவது கண்டு
கலங்கி நின்றாளாம். 

அவள் கண் முன்னே
நீ வந்து நின்றால் கண்ணாலே
மயங்க வைப்பாளாம்.
தன் மனதினிலே
மகிழ்ந்து நிற்பாளாம்.

இராப்பகலாக தூக்கம் 
இல்லை அவள் நெஞ்சினிலே
உன் நினைவினாலாம்.
கண் மூடி தூங்கினாலும்
கண் முன்னே வந்து விடுவது உன் புன்சிரிப்புத்தானாம் .

நீ மனசு வச்சால்
மட்டும் போதுமாம்.
வஞ்சிப் பொண்ணு 
உள்ளத்தினாலே
இசை அமைப்பாளாம்.

உன் பின்னால் வர
நினைத்தால் வசப்பாட்டு
நீ கொட்டுகிறாயாம்.
முன்னால் வந்து நின்றால்
அனல் கண் கொண்டெரிக்காயாம்.

விழி மூடி தூங்கினாலும்
வரும் கனவு உன் கனவாம்.
கனவோடு கட்டி அணைக்கையிலே நழுவுகிறது தலையணையாம். 

உடன் வந்து தழுவுகிறது
கண்ணீர் மழையாம்.
தாய் மடி தேடும்
பிள்ளையைப் போல்
உன் தோள் சாய்ந்திடவே
இடம் கேட்டாளாம்.

அதிகாரத் தோரணையில் இல்லை அன்பாகவே கெஞ்சி நின்றாளாம்.
நீ கொடுப்பாய் என்னும்
நம்பிக்கை உண்டாம்.
அதனாலே எடுப்பான உடையோடு சந்ஷோசமாக நடை போடுகிறாளாம்.

No comments:

Post a Comment