Monday, 2 January 2017

உனக்குள்ளே நீ

உனக்குள்ளே தான் - நீ.
உலகை வெல்லப் புறப்படு - நீ
உருவத்தைக் கண்டு அஞ்சாதே - நீ.
உண்மையை உரைக்கத் தயங்காதே  -நீ

சாக்கடை  நீராக தங்கி விடாதே-  நீ.
உப்பு கடலில் விழுந்து உப்பு நீராகாதே - நீ.
கிணற்று நீராக அடை படாதே  நீ.
சிப்பியில் விழுந்து முத்தாக மாறி விடு - நீ.

துரும்பாக போகும் கரும்பாகாதே-  நீ.
துருவம் தாங்கும் இரும்பாய் இரு  -நீ.
துடுப்பாய் மாறி விடு -நீ.
துடிப்போடு செயல் படு -நீ.

எடுப்பார் கைப் பொம்மையாகாதே-  நீ.
எடுக்கும் முடிவில் தெளிவாக இரு -நீ.
விட்டெறியும் காசுக்கு வாய் திறக்காதே  -நீ.
சுட்டெரிக்கும் சூரியனாய் இரு -நீ.
கெடுப்பாரைக் கண்டால் எட்டி நில் -நீ.

கடும் சொல்லுக்கும் கலங்காதே - நீ.
கொடுமையைக் கண்டால் பொங்கிடு- நீ.
சாதனைக்கு தடையாகும் கல்லை படியாய்  மிதி- நீ.
உள்ளத்தில் உறுதியோடு இரு- நீ.
வாழ்க்கையில் உயர்ந்து விடு  -நீ.

தூசியாய் நினை மாசு படுத்துவோரை - நீ.
சாம்பலாக மாறும் உமியாகாதே - நீ.
அத்திவாரம் தாங்கும் கருங்கல்லாயிரு  -நீ.
வெளியில் தேடாதே உன்னை  -நீ.
வென்று விடு உலகை உனக்குள்ளே தான்  -நீ.

No comments:

Post a Comment