நீயும் நானும்.
நேருக்கு நேர் பார்த்ததில்லை.
நீயும் நானும்
பூங்கா சினிமா எனச் சுற்றியதில்லை.
உனக்கும் எனக்கும்
இடையில் காதல் வளர்ந்ததில்லை.
உன்னோடு உரையாடாமல்
நான் உறங்கியதும் இல்லை.
இன்னும் தொடர்ந்து
கொண்டுதான் இருக்கு
நம் உரையாடல் இதற்குப் பெயர்
என்னவென்று தான்
இன்றுவரை புரியவும் இல்லை.
No comments:
Post a Comment