பசுமை படர் காட்டைப் பார்த்தீரா
பசுக்கள் மேய்வதையும் பார்த்தீரா
புதுங்கி வந்த புலியைக் கண்டு மிரண்டீரா
கள்ளிக்காட்டுக்கு வந்தீரோ
வள்ளி என்னைக் கண்டீரோ
புள்ளி மான் ஓடும் வேளையிலே நின்றீரோ
தள்ளிப் போய் அம்பு எடுத்து குறி வைத்தீரோ//
அது ஒரு கனாக்காலம்
அவை காணாமல் போனது இக் காலம்
அன்று நிரை நிரையாக
நின்று மரம் துளிர் விட்டது
இன்று திரை போட்ட வீடு
இருந்து அழுப்பபூட்டுது //
வற்றாத நீருக்கு வழி வகுக்கும்
தொற்று நோயையும் தீர்த்து வைக்கும்
காற்றை தூய்மையாக்கி கொடுக்கும்
நாற்று நட்டவனை வாழவைக்கும்//
மரக்கிளையில் கூடு கட்டும்
பறவைக் கூட்டம்
மரணத்துக்குப்பின்னே சுமக்க குச்சு
தேடுவதோ மனிதர் கூட்டம்//
இயற்கையை அழிக்கிறான்
செயற்கையை வளர்க்கிறான்
காடு காக்கப்பட வேண்டும்
நாடு போற்றப்பட வேண்டும்//
No comments:
Post a Comment