Wednesday, 18 January 2017

உளறுகிறாள் என்னிடம்

நீ ஓர் வாத்தை சொல்லு ஒத்தையடிப்பாதையிலே 
நான் வருவேன் என்றாளாம்.
அந்த ஓர் வார்த்தை கேட்கவே
அவள் ஏங்கி நின்றாளாம்.

ஓடை சல சலக்க ஓரமாக
அவள் அமர்ந்திருந்தாளாம்.
ஒன்றும் சொல்லாது
நீ ஒதுங்குவது கண்டு
கலங்கி நின்றாளாம். 

அவள் கண் முன்னே
நீ வந்து நின்றால் கண்ணாலே
மயங்க வைப்பாளாம்.
தன் மனதினிலே
மகிழ்ந்து நிற்பாளாம்.

இராப்பகலாக தூக்கம் 
இல்லை அவள் நெஞ்சினிலே
உன் நினைவினாலாம்.
கண் மூடி தூங்கினாலும்
கண் முன்னே வந்து விடுவது உன் புன்சிரிப்புத்தானாம் .

நீ மனசு வச்சால்
மட்டும் போதுமாம்.
வஞ்சிப் பொண்ணு 
உள்ளத்தினாலே
இசை அமைப்பாளாம்.

உன் பின்னால் வர
நினைத்தால் வசப்பாட்டு
நீ கொட்டுகிறாயாம்.
முன்னால் வந்து நின்றால்
அனல் கண் கொண்டெரிக்காயாம்.

விழி மூடி தூங்கினாலும்
வரும் கனவு உன் கனவாம்.
கனவோடு கட்டி அணைக்கையிலே நழுவுகிறது தலையணையாம். 

உடன் வந்து தழுவுகிறது
கண்ணீர் மழையாம்.
தாய் மடி தேடும்
பிள்ளையைப் போல்
உன் தோள் சாய்ந்திடவே
இடம் கேட்டாளாம்.

அதிகாரத் தோரணையில் இல்லை அன்பாகவே கெஞ்சி நின்றாளாம்.
நீ கொடுப்பாய் என்னும்
நம்பிக்கை உண்டாம்.
அதனாலே எடுப்பான உடையோடு சந்ஷோசமாக நடை போடுகிறாளாம்.

Monday, 16 January 2017

பொங்கல் வாழ்த்துக்கள்

புது நாத்து  .
புது நெல்லு  .
புதுப் பானை  எடுத்து .
பொங்கல்  வைக்கத்தான்  ஆசை. .////

இனிக்கும் சக்கரை  .
மணக்கும் ஏலக்காய்  .
கறந்த போலோடு சேர்த்து .
பொங்கிடத்தான் ஆசை. ...///

சுவைக்கு முந்திரி  திராட்சை .
பசு நெய்யோடு வறுத்துப் போட்டு
இன்பமாக  இல்லத்தில் கூடி நின்று.
பொங்கிடத்தான் ஆசை. ...///

கரும்பு  கட்டோடு வைத்து  .
முக்கனி படையலோடு
மாவிலைத் தோரணம் ஆட .
வாசலிலே கோலம் சிரிக்க .
புத்தாடையோடும்  புன்னகையோடும்.
கதிரவன் வரவு பார்த்து .
பால் பானை பொங்க .
பொங்கலோ பொங்கல்
என்று கத்திடத்தான்  ஆசை. ...///

வெண்மேகம் கறுக்கவில்லை .
வேண்டிய மழை கொடுக்கவில்லை .
பரந்த நீர் பரப்பையும் திறக்கவில்லை .
விதைத்த நெல்லும் செழிக்க வில்லை.

வறட்சி கண்ட நிலம் மீண்டுவிடவில்லை .
வறுமையில் இருந்து நாங்கள் விடுபடவில்லை.
தண்ணீருமில்லை அழுது அழுது கண்ணீருமில்லை .
விவசாயி என் ஆசை ஆனதோ  நிராசை...///

வரும் காலம் வசந்த காலமாக வேண்டும் .
வேளாண்மை  வளம் பெறவேண்டும் .
வறுமை இன்றி நாங்களும் மகிழவேண்டும்.
வரமாக இரு கரம் கூப்பி இறைவனிடம்.
கேட்ட படியே இன்பமாக   பொங்கல் கொண்டாடும் .ஏனையோருக்கு இந்த ஏழை விவசாயின் .
மனநிறைவான நல் வாழ்த்துக்கள்  .....////

   

ஆசைக் கனவு


விட்டெறிந்த பந்து
கடல்  நீருடன்
மிதந்து வந்து
கரையை மறந்து
மீண்டும் கடலின்
உள்ளே செல்வது
போல்............................\

உன்னைக் கண்டு
பயந்து நடுங்கி
ஓடிய ஆசை நீ
திரும்பிச்செல்கையிலே
உன் பின்னாடியே
வருகின்றது நில்லாமல்
உன்னைத் தேடியே
பெண்ணே.............................\

வருடி செல்லும்
வாடைக்காற்றை
விரட்டி விட்டு
வாட்டி எடுக்கும்உன்
மூச்சுக்காற்றுதான்
பிடிக்கின்றதடி
கண்ணே......................................\

ஆசை அது ஆசையடி
ஓசை கொடுக்காமலே
உசுப்பி எடுக்கின்றதடி
என்னை................................\

காசி கொடுத்து
வாங்கவும் காதலுக்கு
கடை இல்லை
விட்டெறிந்து விட்டு
காசிக்கு  சன்னியாசியாகப்
போகவும் மனம் இல்லை.......\

நூலகம்  நீயாக
வேண்டும் நான்
வாசிக்கவும் நேசிக்கவும்
சுவாசிக்கவும்
வேண்டும்................................\

இல்லறம் என்னும்
நல்லறம் காண
வேண்டும் கற்றுத் தரும்
ஆசானாக நான்
இருக்க வேண்டும்..............\

நீ வெட்கப் பட்டுக்
கொண்டே படிக்க
வேண்டும்  என்
வெள்ளைத் தமிழ்
படித்து விட்டு
பிள்ளைத் தமிழ்
கொடுக்க வேண்டும்
நீ  பரிசாகவே..........................\

அய்யய்யோ பரிசம்
போடும் முன்பே
பரிசு கேட்கின்றேன்
தனிமையிலே நின்றே....\

அடப்பாவி  உள் மனமே
சென்றவள் வரவில்லை
சிந்தனையிலே இத்தனை
திருவிளையாடலாடா.............?

உமக்கு!  போதுமடா மக்கு
கரம்  பிடிக்கும்  முன்பே
கட்டி  அணைத்து  தூக்கவும்
தூண்டுகின்றாயே நின்று என்
பாவி  மனமே........................................\

  

இயற்கையைக் காற்போம்

பசுமை படர் காட்டைப் பார்த்தீரா
பசுக்கள் மேய்வதையும் பார்த்தீரா
புதுங்கி வந்த புலியைக் கண்டு மிரண்டீரா
கள்ளிக்காட்டுக்கு வந்தீரோ
வள்ளி என்னைக் கண்டீரோ
புள்ளி மான் ஓடும் வேளையிலே நின்றீரோ
தள்ளிப் போய் அம்பு எடுத்து குறி வைத்தீரோ//

அது ஒரு கனாக்காலம்
அவை காணாமல் போனது இக் காலம்
அன்று நிரை நிரையாக
நின்று மரம் துளிர் விட்டது
இன்று திரை போட்ட வீடு
இருந்து அழுப்பபூட்டுது //

வற்றாத நீருக்கு வழி வகுக்கும்
தொற்று நோயையும் தீர்த்து வைக்கும்
காற்றை தூய்மையாக்கி கொடுக்கும்
நாற்று நட்டவனை வாழவைக்கும்//

மரக்கிளையில் கூடு கட்டும்
பறவைக் கூட்டம்
மரணத்துக்குப்பின்னே சுமக்க குச்சு
தேடுவதோ மனிதர் கூட்டம்//

இயற்கையை அழிக்கிறான்
செயற்கையை வளர்க்கிறான்
காடு காக்கப்பட வேண்டும்
நாடு போற்றப்பட வேண்டும்//

       

புரியவில்லையே

நீயும் நானும்.
நேருக்கு நேர் பார்த்ததில்லை.
நீயும் நானும்
பூங்கா  சினிமா எனச் சுற்றியதில்லை.

உனக்கும் எனக்கும்
இடையில் காதல் வளர்ந்ததில்லை.
உன்னோடு உரையாடாமல்
நான் உறங்கியதும் இல்லை.

இன்னும் தொடர்ந்து
கொண்டுதான் இருக்கு
நம் உரையாடல் இதற்குப் பெயர்
என்னவென்று தான்
இன்றுவரை புரியவும் இல்லை.

     

தீ


எப்பொருளாயினும்
அப்பொருள்
அவியத் தேவை   - தீ.

பாரதப் போரின்
போது இறுதியில்
தென்படுபவை  - தீ.

குமுறும் எரிமலையில்
இருந்து எழுவது  - தீ.

மூங்கில்  காட்டிலே
தூங்கிகக் கொண்டு
இருப்பவை  - தீ.

கதிரவன்  அனலும்
ஒரு வைகையில்  - தீ.

ஏழு கடலில் ஓர்
கடலில் குளிப்பது   - தீ.

சிவனோட மூன்றாங்
கண்ணில் இருந்து
வெளியாவதும்  - தீ.

கத்தரி வெயிலுக்கு
மறு பெயர்  - தீ.

பிரமிக்க வைக்கும்
அழகான. உடலை ஒரு பிடி
சாம்பலாக்குவதும் - தீ.

சத்தத்துடன்
உயிரைப் பறிக்கும்
தோட்டாவில்
இருப்பவையும் - தீ. 

நெற்றிக் கண்
திறந்து அநீதியை
அழிப்பவையும் - தீ.

தீண்டுவோரை சுட்டு
விடுபவையும் -தீ.

தீபச்சுடரிலே தீபமாக
நின்று எரிந்து
காட்சி தருபவையும் - தீயே தீ .

       

Friday, 13 January 2017

பொங்கல் வாழ்த்துக்கள்

புது நாத்து  .
புது நெல்லு  .
புதுப் பானை  எடுத்து .
பொங்கல்  வைக்கத்தான்  ஆசை. .////

இனிக்கும் சக்கரை  .
மணக்கும் ஏலக்காய்  .
கறந்த போலோடு சேர்த்து .
பொங்கிடத்தான் ஆசை. ...///

சுவைக்கு முந்திரி  திராட்சை .
பசு நெய்யோடு வறுத்துப் போட்டு
இன்பமாக  இல்லத்தில் கூடி நின்று. பொங்கிடத்தான் ஆசை. ...///

கரும்பு  கட்டோடு வைத்து  .
முக்கனி படையலோடு
மாவிலைத் தோரணம் ஆட .
வாசலிலே கோலம் சிரிக்க .
புத்தாடையோடும்  புன்னகையோடும். கதிரவன் வரவு பார்த்து .
பால் பானை பொங்க .
பொங்கலோ பொங்கல்
என்று கத்திடத்தான்  ஆசை. ...///

வெண்மேகம் கறுக்கவில்லை .
வேண்டிய மழை கொடுக்கவில்லை .
பரந்த நீர் பரப்பையும் திறக்கவில்லை . விதைத்த நெல்லும் செழிக்க வில்லை.

வறட்சி கண்ட நிலம் மீண்டுவிடவில்லை . வறுமையில் இருந்து நாங்கள் விடுபடவில்லை.
தண்ணீருமில்லை அழுது அழுது கண்ணீருமில்லை .
விவசாயி என் ஆசை ஆனதோ  நிராசை...///

வரும் காலம் வசந்த காலமாக வேண்டும் . வேளாண்மை  வளம் பெறவேண்டும் .
வறுமை இன்றி நாங்களும் மகிழவேண்டும். வரமாக இரு கரம் கூப்பி இறைவனிடம்.
கேட்ட படியே இன்பமாக   பொங்கல் கொண்டாடும் .ஏனையோருக்கு இந்த ஏழை விவசாயின் .
மனநிறைவான நல் வாழ்த்துக்கள்  .....////

   

Friday, 6 January 2017

காணவில்லை

என்னோட செல்லத்தை தொலைத்து விட்டேன்.
தொலைத்த இடம்  பள்ளமோ வெள்ளமோ
நான் அறியேன் .........////

வீசிய புயல் வேகமாக இழுத்துச் சென்றதோ
கொட்டிய மழை நீர் புரட்டிக் கொண்டு
அலையோடு இணைத்து விட்டதோ 
நான்  அறியேன்   காணாமல் தேடுகின்றேன்
கண்ணீரால் வலை வீசுகின்றேன் ........//////

கண்டு பிடிப்போருக்கு கொண்டு தருவேன் பரிசு
அங்க அடையாளம்  அவசியம்
தங்கு தடை இன்றி சொல்ல  முடியாத ரகசியம் ........////

வால் இல்லை கால் உண்டு 
தலை மேலே முடியுண்டு
காந்தக்கண்ணிரெண்டு 
கடுப்பாகும் குணம் உண்டு ...///

அதற்காக அடுப்பங்கரை பக்கம் தேடாதீர்கள்
அடுப்புக்கும் செல்லத்துக்கும்  எவ்விதமான
தொடர்வும்  இல்லவே   இல்லை.
புடலங்காய்  உருவமும்  இல்லை
பூசணிக்காய் வயிறும்   இல்லை .....////

பாசமிக்க உள்ளம்  பயமுறுத்தும் தோற்றம்
வேற்று மொழியில்   இல்லை  நாட்டம்
தேன் தமிழை சுவைக்கும்  சிறந்த  பிள்ளை .......//////

விரைவாக கண்டு பிடியுங்கள்
மலிவான பரிசுப் பொருளை பெற்றுச்  செல்லுங்கள்
அன்று  நான்  கண்ட   செல்லம் போல்
என் நாளும் திருந்தி வரச் சொல்லுங்கள் ......//////

          

Wednesday, 4 January 2017

கல்லையு சொல்லையும் விட்டால் போச்சு

நாணயமானவனுக்கு
எப்போதும் தன் வாக்கு மூச்சு.
நாக்கு வாக்குத் தவறினால்
அவனுக்கு அவமானமாச்சு!

சொல் எறிந்த பின் வருந்தியே
அவன் வாழ்வு வீனாகப் போச்சு.
அதன் விளைவாலே
அவன் உயிரும் போச்சு!

சுவை அறியும் நாவு கொஞ்சம்
நிதானம் இழந்தாச்சு.
சுற்றி இருந்த உறவுகள்
எல்லோரும் விட்டு ஒதுங்கியாச்சு!

நெருப்பாக வந்த சொல்
சொந்தங்களை எரிச்சாச்சு
நெருங்கிய நண்பனும்
பிரிந்தே போயாச்சு!

கல்லெறி போன்ற சொல்லால்
இதயம் நொறுங்கிப் போச்சு.
கண்ணீரிலே விழிகள் இரண்டும்
குளிக்கவே குதிச்சாச்சு!

எறிந்த கல்லும் விட்ட சொல்லும்
திரும்பாது போச்சு
நிறுத்திய மூச்சும் பறந்த உயிரும்
எங்கே போச்சு!

இருட்டறையில் உள்ள நாவு
வீசும் சொல் அருவாளாச்சு.
இதனாலே பலர் வாழ்வு
இருண்டே போச்சு!

Monday, 2 January 2017

உனக்குள்ளே நீ

உனக்குள்ளே தான் - நீ.
உலகை வெல்லப் புறப்படு - நீ
உருவத்தைக் கண்டு அஞ்சாதே - நீ.
உண்மையை உரைக்கத் தயங்காதே  -நீ

சாக்கடை  நீராக தங்கி விடாதே-  நீ.
உப்பு கடலில் விழுந்து உப்பு நீராகாதே - நீ.
கிணற்று நீராக அடை படாதே  நீ.
சிப்பியில் விழுந்து முத்தாக மாறி விடு - நீ.

துரும்பாக போகும் கரும்பாகாதே-  நீ.
துருவம் தாங்கும் இரும்பாய் இரு  -நீ.
துடுப்பாய் மாறி விடு -நீ.
துடிப்போடு செயல் படு -நீ.

எடுப்பார் கைப் பொம்மையாகாதே-  நீ.
எடுக்கும் முடிவில் தெளிவாக இரு -நீ.
விட்டெறியும் காசுக்கு வாய் திறக்காதே  -நீ.
சுட்டெரிக்கும் சூரியனாய் இரு -நீ.
கெடுப்பாரைக் கண்டால் எட்டி நில் -நீ.

கடும் சொல்லுக்கும் கலங்காதே - நீ.
கொடுமையைக் கண்டால் பொங்கிடு- நீ.
சாதனைக்கு தடையாகும் கல்லை படியாய்  மிதி- நீ.
உள்ளத்தில் உறுதியோடு இரு- நீ.
வாழ்க்கையில் உயர்ந்து விடு  -நீ.

தூசியாய் நினை மாசு படுத்துவோரை - நீ.
சாம்பலாக மாறும் உமியாகாதே - நீ.
அத்திவாரம் தாங்கும் கருங்கல்லாயிரு  -நீ.
வெளியில் தேடாதே உன்னை  -நீ.
வென்று விடு உலகை உனக்குள்ளே தான்  -நீ.

Sunday, 1 January 2017

நீயும் ஒரு கவிஞனே

சுழண்டு வீசும் காற்று
மரத்தை உசுப்பி
விளையாடுகிறது
வலிமை இழந்த மரம்
காற்றின் வீரியம்  தாங்காது
உடைந்து விழுகிறது .....///////

இதை உற்று நோக்கும்
ஒருத்தனின் மனதிலே
சிறு கற்பனை பிறக்கிறது....///

குடிகாரனின் கரங்களிலே
சிக்கிய மனைவின் தலை
முடிபோல் ஆனதே
இந்த மரத்தின் நிலை  என்று
அதை கவியாக கொடுக்க
சிறு மாற்றம்  கொடுத்து
அவன் எழுதினால் அவை
தான் கவிதையாகிறது...../////

வன்மம் கொண்ட குடிகாரனின் 
கரங்களிலே தன் மானம் கொண்ட
மனைவியின் கருங்கூந்தல் சிக்கியது 
போன்று சீற்றம் கொண்ட வாயுதேவனின்
பிடியிலே வேம்பின் கிளைகள்  சிக்கியது .....//////

இதமாக வீசிய காற்றையும்
தென்னங் கீற்றையும்
உற்று நோக்கினான் உடன்
அவன்  கற்பனை சிறு  கவி தீட்டியது..///

மெதுவாக. நுழையும் காற்று
என்ன கூற்றை கூறிவிட்டதோ
நாணம்  கொண்ட பெண்ணைப் போல்
தென்னங்கீற்று வளைந்து நெளிந்து
மெதுவாக வெட்கம் கொண்டு
தலையை  அசைக்கின்றது .....////

அதை நாமும் பார்ப்போம்
நம் கண்ணுக்கோ  தென் படுவது
தென்னங்கீற்று  அசைவது தான்
ஓ -- அது காற்றுக்கு ஆடுது
நாம் நடையைக் கட்டி விடுவோம்
ஆனால் ஒரு கவி உணர்வு உள்ளவன்
விழி அதை நோக்கினால் பல மொழியில்
பல கவி பிறது விடும் ...////

தூணிலும் இருப்பான்
துரும்பிலும் இருப்பான்
இறைவன் என்பார்கள்
அந்த தூணில் ஒட்டி
இருக்கும் தூசியிலும்
கவி பிடிப்பான் அதை
பா வடிப்பான் திறமை
உள்ள ஒரு கவிஞன்  ...//

அது நீயாகவும் இருக்கலாம் நாளை
முயற்சியே வெற்றியின் மலர்ச்சோலை
முயன்று பார் மனிதனே இயற்றிப்  பார்
நீயும் கவிஞனாகலாம்.